உள்ளூர் செய்திகள்

2708 உதவி பேராசிரியர் பணிக்கு டிச., 20ல் தேர்வு

சென்னை: தமிழக அரசு கலை அறிவியல் கல்லுாரிகளுக்கான 2708 உதவி பேராசிரியர்களை நிரப்ப, டிச., 20ல் தேர்வு நடத்த உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை, வாரியம் வெளியிட்டு இருந்தது. அது ரத்து செய்யப்பட்டு, புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படும் என கூறியுள்ளது.இதற்கு தகுதியானோர், அடுத்த மாதம் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அடுத்த இரண்டு நாட்கள் வரை, விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம். ஏற்கனவே, தேர்வெழுத கட்டணம் செலுத்தியோர், தற்போது கட்டணமின்றி தேர்வெழுதலாம். எழுத்து தேர்வு முடிந்த பின், நேர்காணல் குறித்து அறிவிக்கப்படும்.மேலும் விபரங்களுக்கு 'https://www.trb.tn.gov.in' என்ற இணைதளத்தை காணலாம் என, வாரியம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்