3039 பேர் ஆப்சென்ட்
மதுரை: டி.என்.பி.எஸ்.சி., சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு மதுரை மாவட்டத்தில் 25 மையங்களில் நடந்தது.7142 தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 4103 பேர் (57 சதவீதம் பேர்) தேர்வெழுதினர். 3039 பேர் (43 சதவீதம்) வருகை தரவில்லை. கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு செய்தார். மதுரை வடக்கு தாசில்தார் கமலேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.