நல்ல புத்தகங்களை வாசிக்க குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள்
கோவை: அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பேராசிரியர்கள் அன்புசிவா மற்றும் ஜெமிமா ஜெபசெல்வி ஆகியோர் இணைந்து எழுதிய, 'ஆன்றோரின் அமுத மொழிகள்' என்ற நுால், கோஇண்டியா அரங்கில் வெளியிடப்பட்டது.வேளாண் பல்கலை முன்னாள் இயக்குனர் விஜயராகவன் தலைமை வகித்தார். பேராசிரியர் மணிவண்ணன் நுாலை வெளியிட்டு பேசுகையில், ''ஆன்றோரின் அமுத மொழிகள்' என்ற இந்த நுால், பள்ளி மாணவர்களுக்கு பயன்தரும் நுால். சிறந்த கல்வி முறைதான் நல்ல சமுதாயத்தை உருவாக்கும். அதற்கு இந்த நுால் வழிகாட்டுகிறது. குழந்தைகள் கையில் பாடபுத்தகங்களை மட்டும் கொடுக்காமல், சமூக சிந்தனை உள்ள நுால்களையும் கொடுத்து படிக்க சொல்ல வேண்டும்,'' என்றார்.விஜயா பதிப்பக நிறுவனர் வேலாயுதம், பேராசிரியர்கள் கண்ணன், புவனேஸ்வரி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.