உள்ளூர் செய்திகள்

பள்ளி குழந்தைகளுக்கு பஸ் வசதி இல்லை

திருப்பூர்: பள்ளி நேரத்துக்கு ஏற்ப டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என மந்திரிபாளையம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுதொடர்பாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த அவர்கள், 'மந்திரிபாளையத்தில் இருந்து பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியருக்கு போதிய பஸ் வசதி இல்லை. 7ஏ, பி20, 7எப், 10 ஆகிய பஸ்களில் சிலவற்றை காலை, மாலை பள்ளி நேரத்துக்கு ஏற்ப இயக்க வேண்டும். மேலும், தகுதியான ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்