டிப்ளமா பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்
சென்னை: 'டிப்ளமா' பாடப்புத்தகங்கள், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.தமிழக உயர்கல்வி துறையின், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ், 55 அரசு, 34 அரசு உதவி பெறும், 392 தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 1.50 லட்சத்துக்கும் அதிகமான மாணவ - மாணவியர் டிப்ளமா படித்து வருகின்றனர்.தொழில்நுட்ப கல்வி இயக்ககம், டிப்ளமா படிப்புகளில், பல்வேறு வகையான புத்தகங் களை, கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாடுகளுக்காக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து உள்ளது.விரிவுரையாளர்கள் இதை பயன்படுத்தி கற்பித்தல், திட்டங்களை வகுக்க, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.