4 மாணவர்களுக்கு அரசு தொடக்கப்பள்ளி
குருவித்துறை: மதுரை குருவித்துறை அருகே சித்தாதிபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் படித்த நிலையில், தற்போது 4 பேர் மட்டுமே படிக்கின்றனர். இச்சூழலில் தலைமை ஆசிரியை மகேஸ்வரி சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வருவதில்லை என புகார் எழுந்துள்ளது. அவர் கூறியதாவது: குருவித்துறையில் இருந்து 3 கி.மீ., துாரமுள்ள சித்தாதிபுரம் பள்ளிக்கு சென்று வர பஸ் வசதியில்லை. நடந்தே வருகிறேன். மாணவர்களை பள்ளியில் சேர்க்க பாடுபட்டேன். இதை கிராமத்தினர் சிலர் எதிர்த்தனர். இந்நிலையில் எனக்கு உடல்நலம் பாதித்ததால் 15 நாள் விடுப்பில் சென்றேன். இதனால் மாற்று பணியாக ஒரு ஆசிரியர் பணியாற்றுகிறார், என்றார்.