உள்ளூர் செய்திகள்

4 ஆண்டு பி.எட்.,படிப்பு: விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலையில் ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு கல்வியியல் படிப்பில் சேர்வதற்கு, வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.புதுச்சேரி பல்கலையில் இந்த கல்வியாண்டில் (2023-24) பி.ஏ.,பி.எட்., மற்றும் பி.எஸ்.சி.,பி.எட்., ஒருங்கிணைந்த நான்காண்டு பட்டப்படிப்பு துவங்கப்பட்டுள்ளது. இப்படிப்பில் சேர தேசிய தேர்வு முகமை நடத்தும் தேசிய பொது நுழைவு தேர்வினை எழுத வேண்டும். இப்படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் வரும் 19ம் தேதிக்குள் https://ncet.samarth.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இப்படிப்பில் சேருவதற்கான கல்வி தகுதிகள், www.pondiuni.edu.in/admissions---2023-24/ என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்