உள்ளூர் செய்திகள்

593 மதிப்பெண் பெற்ற மாதிரிப் பள்ளி மாணவி

கோவை: ஆர்.எஸ்.புரம், மாதிரிப் பள்ளியைச் சேர்ந்த மாணவி கிருஷ்ணா அனுாப் இரண்டு பாடங்களில் சென்டம் அடித்து 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளார்.கோவை, க.க. சாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் அனுாப் ரவி, திவ்யா. இவர்களது மகள் கிருஷ்ணா அனுாப், ஆர்.எஸ்.புரம் மாதிரிப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்தார். நேற்றுமுன்தினம் வெளியான பிளஸ் 2 ரிசல்ட்டில் 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும், கணினி அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் சென்டம் அடித்து அசத்தியுள்ளார்.இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் கூறுகையில், எங்களது மகள் இரு பாடங்களில் சென்டம் அடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த ஓராண்டாக படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி கடினமாகப் படித்தார்.அதன் பலனாக நல்ல மதிப்பெண் கிடைத்துள்ளது. பயிற்சி அளித்த ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியருக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு எழுதுவதற்காக தற்போது சென்னையில் பயிற்சி பெற்று வருகிறார், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்