உள்ளூர் செய்திகள்

9ம் வகுப்பு வினாத்தாளில் தினமலர் புகைப்படம்

மதுரை: ஒன்பதாம் வகுப்பு ஆண்டு தேர்வு, ஆங்கிலம் வினாத்தாளில், மதுரை, "தினமலர்" நாளிதழில் வெளியான புகைப்படம் வெளியிட்டு, கேள்விகள் இடம்பெற்றன. ஒன்பதாம் வகுப்பு, ஆங்கிலம் முதல் தாள் தேர்வு, நேற்று நடந்தது. பகுதி-4, ஐந்து மார்க் கேள்வி பகுதியில், 52வது கேள்வியாக, 2012 பிப்., 19ல், "தினமலர்" நாளிதழ் மதுரை பதிப்பில் வெளியான புகைப்படம் இடம் பெற்றது. சுட்டெரிக்கும் கோடை மற்றும் உழைப்பின் உயர்வை உணர்த்தும் வகையில், வயதான ஒருவர், டிரை சைக்கிளில் பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் நிரப்பி கொண்டு வருவது போன்றும்; அவருக்கு வண்டியை தள்ளுவதில் ஒரு சிறுவன் உதவி செய்யும் வகையிலும், அந்த புகைப்படம் அமைந்திருந்தது. "இந்த புகைப்படம் உணர்த்துவது என்ன, இந்த படத்தில் இருந்து என்ன பார்க்கிறீர்கள், வயதானவர் வண்டியில் என்ன விற்பனை செய்கிறார், வயதானவருக்கு சிறுவன் எப்படி உதவி செய்கிறான், டிரை சைக்கிளில் உள்ளது என்ன, முதியவர் மற்றும் சிறுவனை பார்க்கும் போது ஏற்படும் தாக்கம் என்ன?&' என, 5 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. புகைப்படத்திற்கு கீழ், "நன்றி தினமலர் மதுரை, 19.2.2012" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்