உள்ளூர் செய்திகள்

90 நாளில் மதிப்பெண் சான்றிதழ் பெற தவறினால் அழிக்கப்படும்: மாவட்ட அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டத்திற்குட்பட்ட தனித்தேர்வு மையங்களில், மார்ச் 2023 முதல் ஜூன் / ஜூலை 2023 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை எழுதிய தனித்தேர்வர்கள், இதுவரை சான்றிதழ்களை பெறவில்லை என்றால், 90 நாளுக்குள் கோவை மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனரக அலுவலகத்தில், பெற்றுக்கொள்ள வேண்டும்.இந்த பருவத்தேர்வுக்கான சான்றிதழ்கள், தற்போது கோவை மாவட்ட அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருக்கின்றன. முன்னதாக, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, அந்தந்த தேர்வு மையங்கள் வழியாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன.ஆனால், சில தனித்தேர்வர்கள் நேரில் பெற்றுக்கொள்ளாததால், அவர்களின் சான்றிதழ்கள் இன்னும் அலுவலகத்தில் உள்ளன. இதனுடன், எட்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது இணைத்த அசல் மாற்றுச்சான்றிதழ்களும் இருக்கின்றன.தனித்தேர்வர்கள் நேரில், சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். அல்லது, ரூ.45 மதிப்புள்ள ஸ்டாம்ப் ஒட்டிய, சுய முகவரி எழுதப்பட்ட உறையுடன், தேர்வரின் கையொப்பமிடப்பட்ட கோரிக்கை கடிதம் மற்றும் தேர்வுக்கூட அனுமதி சீட்டின் நகலை இணைத்து அனுப்பி, அஞ்சல் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.நிர்ணயிக்கப்பட்ட 90 நாளுக்குள் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள், தேர்வுத்துறை விதிமுறைகளின்படி அழிக்கப்படும்.இத்தகவலை, கோவை மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்