உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 4,500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை

4,500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பதவியில், 4500 இடங்கள் காலியாக உள்ளதால், பிற ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பாடங்கள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் 38மாவட்டங்களில், 37,000 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 4500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 2994 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் மட்டும், தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.தலைமை ஆசிரியரின் பணி, சம்பந்தப்பட்ட பள்ளியின் பிற பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கு,கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாட வேளைகளில், அவர்களால் வகுப்புகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: தலைமை ஆசிரியர் பதவி உயர்வுகளை அரசு விரைந்து வழங்கினால், காலி இடங்கள் நிரப்பப்படும். அதன்பின், புதிய ஆசிரியர்களை நியமிக்கலாம்.ஆனால், தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பதில், பள்ளிக்கல்வி துறை அலட்சியமாக உள்ளதால், காலியிடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகி, பள்ளி நிர்வாகப் பணியும், மாணவர்களுக்கான பாடம் நடத்தும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Shankar
ஜூலை 10, 2024 21:57

தலைமை ஆசிரியர் இருக்கட்டும் அங்கே தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவச் செல்வங்களில் நிலைமையை பாருங்கள் அழுக்கான ஆடை மக்கிய மட்ட ரகமானஆடை மூஞ்சில் எண்ணெய் வழிய சோகம் மரமண்டை என இதுதான் அங்கே கல்வியை சொல்லித் தருகிறார்கள் அந்த ஆசிரியர்களுக்கு கூட ஆடையில் நாகரிகம் தெரியவில்லை இது இன்றைய திராவிட கட்சிகளின் ஆட்சி இலட்சணம் தலைமை அமைச்சர்கள் பளிச்சென்று இருந்தாலும் கல்வி நிலைகளில் எதிர்கால மாணவர்களின் எதிர்கால தமிழ்நாட்டில் இலட்சணம் இருட்டில் இருப்பது போன்று இது இருக்கிறது????


sundaran manogaran
ஜூலை 10, 2024 19:27

அரசு நடுநிலைப் பள்ளிகளில் அறிவியல், ஆங்கிலம், மற்றும் கணித ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களில் தமிழ் ஆசிரியரும், தமிழ் ஆசிரியராக இருந்து பணி உயர்வு பெற்றவர் தலைமை ஆசிரியராகவும்நியமனம் செய்யப்படுவதால் இரண்டு தமிழாசிரியர்கள் இருப்பதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வீரபாண்டி,அலங்காநல்லூர்
ஜூலை 10, 2024 19:19

திமுகவின் ஆபாச பேச்சாளர் திண்டுக்கல் லியோனியை தமிழக பாடநூல் கழகத்தின் தலைவராகவும், உதயநிதியின் ரசிகர்மன்ற தலைவரான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பள்ளிக் கல்வித்துறைக்கு அமைச்சராகவும் நியமித்தால் தமிழக பள்ளிகளின் நிலைமை இப்படித்தான் படுமோசமாக படு பாதாளத்திற்கு போகும். இவர்கள் இப்போதுள்ள கல்வியின் தரத்தை மிக மோசமாக கையாண்டு இப்போதைய இளம் தலைமுறை மாணவர்களின் கல்வியை வீணடித்து விட்டனர்.


lana
ஜூலை 10, 2024 16:44

அந்த அந்த ஊரில் டாஸ்மாக் கடை இருக்கிறதா என்று மட்டும் பார்க்காமல் பிற வசதி உண்டா என்று பார்த்து வாக்களியுங்கள்


Jai
ஜூலை 10, 2024 16:23

மிகக் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில்தான் இது போன்று தலைமை ஆசிரியர்கள் இல்லை என்பதெல்லாம். மிகக் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை எந்த ஆசிரியர்களும் தேவையில்லை, பக்கத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பீஸ் கட்டி அரசே மாணவர்களை படிக்க வைக்கலாம்.


konanki
ஜூலை 10, 2024 14:06

கொஞ்சம் பொறுங்கள்..ஆர்.எஸ் பாரதி பிச்சை போடுவாரு


Ramesh Sargam
ஜூலை 10, 2024 09:47

அந்த அளவுக்கு படித்தவர்கள் இல்லையோ?


A
ஜூலை 10, 2024 09:26

they will try to open more Tasmac.. no way at all for teachers appointment... VIDIYAL ? ? ? ?


hari
ஜூலை 10, 2024 08:19

சில திராவிட முட்டுக்களுக்கு இந்த பதவிகளை கொடுக்கலாம்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி