உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி? காங்., பொதுக்குழுவில் கொந்தளிப்பு

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி? காங்., பொதுக்குழுவில் கொந்தளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணியா அல்லது தனித்து போட்டியா என்பது குறித்து ஆராய்வதற்கு நடந்த தமிழக காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக கோஷ்டி தலைவர்கள் பேசியதற்கு எதிர்ப்பு வெடித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9x9cbeqn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அதன் விபரம்:

தமிழக காங்கிரஸ் எஸ்.சி., துறை தலைவர் ரஞ்சன்குமார்: ராகுல் நடைபயணத்தாலும், கார்கே தலைமையாலும் தேசிய அளவில், 35 தலித் எம்.பி.,க்கள் கிடைத்துள்ளனர். இந்திரா, ராஜிவ் காலத்திற்கு பின் தலித் ஓட்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு அதிகரித்துள்ளன. காமராஜர் ஆட்சி அமைப்போம் என்ற முழக்கத்தை சில தலைவர்கள் விரும்பாமல் உள்ளனர்.அகில இந்திய காங்கிரஸ் செயலர் விஸ்வநாதன்: சட்டசபை, லோக்சபா தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுகிறது. இந்த இரு தேர்தல்களுக்கு பணம் செலவு செய்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும்போது செலவு செய்தால், கட்சி வெற்றி பெறும். கட்சியின் கட்டமைப்பு வலுவடையும்; தொண்டர்களும் உற்சாகம் அடைவர்.முன்னாள் தலைவர் இளங்கோவன்: தனியாக நின்றபோது, நாம் இரண்டு தொகுதிகளை தவிர அனைத்து தொகுதிகளிலும் டிபாசிட் இழந்தோம். தனியாக நிற்பேன், தனியாக தோற்பேன் என்றால் உங்கள் இஷ்டம். தனித்து நிற்போம் என்ற ஆசை இருக்கலாம்; பேராசை இருக்கக் கூடாது.மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்: லோக்சபா தேர்தலில், 100 சதவீத வெற்றிக்கு முதல்வர் ஸ்டாலின் உழைப்பு மகத்தானது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., கூட்டணியில், எத்தனை இடங்களை பெற வேண்டும் என்பதை முன்கூட்டி பேசுவதற்கு குழு ஒன்றை அமைக்க வேண்டும்.முன்னாள் தலைவர் அழகிரி: மேடையில் பேசுவோர் அனைவரின் குரலும் ஒன்றுபோல இருக்க வேண்டும். அப்படி பேசுவதற்கு முன் நாம் அனைவரும் கலந்தாலோசிக்க வேண்டும். தலைவர்கள் தெரிவிக்கிற கருத்துக்கு, தொண்டர்கள் எதிர்ப்பு குரல் கொடுத்து விட்டு வீட்டிற்கு சென்று விடுவீர்கள். ஆனால், கட்சி தலைமையின் வழிகாட்டுதலின்படி பணிகள் தொடரத்தான் போகின்றன.தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: வரும் காலங்களில் நாம் பிறரை சார்ந்து இருக்கப் போகிறோமா, சுயமாக இருக்கப் போகிறோமா என்பதை மனதில் வைத்து தலைவர்கள் பேச வேண்டும். எத்தனை காலம் சார்ந்து இருக்க போகிறோம்; நாம் எந்த திசையில் செல்கிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். கூட்டணி என்பது வேறு; சார்ந்து இருப்பது வேறு.இவ்வாறு அவர்கள் பேசினர்.பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய தலைவர்களில் சிலர், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாகவும், முதல்வர் ஸ்டாலினை பாராட்டியும் பேசிய போது, தொண்டர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.'தேர்தல் வெற்றிக்கு ராகுல் தான் காரணம்; உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்' என சில தலைவர்கள் பேசியதை, தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு டீ, காபி, பிஸ்கட் வழங்கவில்லை என்று, காங்கிரசார் குறை கூறினர்.உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்ற முழக்கத்திற்கு ஒருமித்த ஆதரவு கிடைத்துள்ளதால், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

rama adhavan
ஜூன் 12, 2024 20:47

பாலைவனத்தில் கூட அடைமழை பெய்யும். காடுகள் தோன்றும், வளரும். ஆனால் காங்கிரஸ் தமிழ் நாட்டில் இன்னும் 100 வருடத்திற்கு தனியாக நிற்காது. ஏன் எனில் மாட்டு உண்ணி பூச்சி மாட்டின் உடலில் ஒட்டிக்கொண்டு இருந்து மாட்டின் இரத்தம் குடித்து வளர்ந்து வருமே தவிர மாடு ஆகாது.


Ms Mahadevan Mahadevan
ஜூன் 12, 2024 20:14

சபாஷ் தனித்து போட்டியிட்டு 25 சதவீத வாக்கு வாங்குங்கள் கட்சி. தலைவரும் தேர்தல் முறையில் தேர்ந்தெடுங்கள் உட் கட்சி ஜனாயகதை முதலில் கையில் எடுங்கள்.வாழ்க பரதம்!


Sivaraman
ஜூன் 12, 2024 19:53

1967 ஆண்டுக்குப்பிறகு எத்தனை முறை சந்தர்ப்பம் வந்தது . இன்று ஆட்சிக்கட்டிலிலோ அல்லது எதிர்கட்சியாகவோ ஆகியிருக்கலாம் . ஆனால் பாஜக வளர்ச்சியைப் பார்த்து இந்த சிந்தனை வந்துள்ளது . பல இன்றைய காங்கிரஸ்காரர்கள் திமுக சிந்தனையில் கரைந்து போய்விட்டதால் இனி பாஜக போன்று திமுகவை எதிர்க்க முடியாது . பழைய காங்கிரஸ்/ புரட்சித்தலைவர் / புரட்சித்தலைவி திமுகவை மிகக்கடுமையாக எதிர்த்து ஓட்டுவங்கியை உயர்த்தினார்கள் . பாஜக கையில் அது இன்று சென்றுவிட்டது . காங்கிரஸ்க்கு இனி வாய்ப்பில்லை .


பச்சையப்பன் கோபால் புரம்
ஜூன் 12, 2024 17:10

எங்கள் தள்ளபதிக்கு சொல்லியிருந்தால் அவர் டன் கணக்கில் பிசுகட்டும் லிட்டர் கணக்கில் டீயும் அனுப்பி வைத்திருப்பார்.


ram
ஜூன் 12, 2024 13:51

தேர்தலுக்கு முன்னாள் கொந்தளித்திருக்கணும் இப்போது எதுக்கு முடிந்தால் திருட்டு திமுக அமைச்சரவில் உங்கள் ஆட்களுக்கு மந்திரி பதவி கேளுங்கள்.


Santhakumar Srinivasalu
ஜூன் 12, 2024 13:10

செல்வபெருந்தகை காங்கிரஸ் தனித்து நின்றால் தொண்டர்கள் பணஆதரவு மற்றும் தேர்தல்பணி செய்வர் என்கிறார். அவர் விருப்பத்தை திமுக நிறைவேற்றி இந்த உள் ஆட்சி தேர்தல் உடன் கணக்கை முடிச்சு விடனும்!


பேசும் தமிழன்
ஜூன் 12, 2024 09:00

உங்களை யார் தடுத்தா..விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட போட்டியிடலாம் ....அப்போது தானே உங்கள் கட்சியின் உண்மையான ஓட்டு சதவீதம் வெளியே தெரியும் ....கண்டிப்பாக நோட்டவை விட கீழே தான் ஓட்டு வாங்குவீர்கள்......மானம் போய் விடும்.


VENKATASUBRAMANIAN
ஜூன் 12, 2024 08:11

காங்கிரஸ் திமுக மேல் சவாரி செய்து அதன வலிமையை இழந்துள்ளது. இப்போதாவது பாஜக போல் விழித்துக் கொண்டால் தேறுவதிற்கு ஒரு வாய்ப்பு உண்டு. இல்லையேல் 8 10 சீட் மட்டுமே கதி என்று கிடக்க வேண்டியதுதான்


CHELLAKRISHNAN S
ஜூன் 12, 2024 12:35

fully correct


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை