மது ஒழிப்பு மாநாட்டுக்கு, அ.தி.மு.க., - த.வெ.க., தலைவர்களை அழைப்பது குறித்து, கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h45q5lvr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இம்மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.க.,வுக்கு நேற்று முன்தினம் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார்.விழுப்புரத்தில் நேற்று அவரை சந்தித்த நிருபர்கள், 'விஜய் தலைமையிலான த.வெ.க.,வை அழைப்பீர்களா' என, கேட்டனர்.அதற்கு பதிலளித்த திருமாவளவன், ''விஜய்க்கும் மது ஒழிப்பில் உடன்பாடு இருக்கும். அவரும் கட்டாயம் பங்கேற்கலாம்,'' என்றார்.இதுகுறித்து வி.சி., வட்டாரங்கள் கூறியதாவது:
அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரையும், த.வெ.க., சார்பில் மாநில நிர்வாகி ஒருவரையும், மது ஒழிப்பு மாநாட்டுக்கு அனுப்பி வைக்க அக்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.இது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி முக்கிய புள்ளி ஒருவரிடம், பழனிசாமியின் குடும்ப உறுப்பினரும், விஜய்க்கு நெருக்கமான தொழிலதிபரும் பேச்சு நடத்தியுள்ளனர்.மாநாட்டு அழைப்பிதழில் அவர்கள் பெயரை அச்சிடுவது குறித்தும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, த.வெ.க., தலைவர் விஜய் ஆகியோரை சந்தித்து அழைப்பிதழ் கொடுப்பது குறித்தும், கட்சியின் உயர்மட்டக் குழுவை கூட்டி ஆலோசிக்கலாம் என, திருமாவளவன் கூறியிருக்கிறார்.இந்த வார இறுதிக்குள் உயர்மட்டக் குழு கூடி, இந்த விஷயத்தில் முடிவு எடுக்கும் என தெரிகிறது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில், 11 குடும்பத்தினருக்கு, வி.சி., தலைவர் திருமாவளவன் தலா 10,000 ரூபாய் வழங்கினார். பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: வி.சி., கட்சி சார்பில் மாநில அளவிலான போதை ஒழிப்பு மாநாடு, உளுந்துார்பேட்டை, அரசு ஐ.டி.ஐ., அருகில் அக்., 2ம் தேதி நடக்கிறது.இளைய சமுதாயத்தை சீரழிக்கும் மதுவை ஒழிப்பது தான் எங்களின் நோக்கம். அதற்காக கட்சி, அரசியல் கடந்து, ஜனநாயக சக்திகளின் துணையோடு போராட உள்ளோம். நாடு முழுதும் மதுவிலக்கை கொண்டுவர வேண்டும். அதற்கான பொறுப்பு, வி.சி., கட்சிக்கு மட்டுமல்ல; கூட்டணி கட்சியான தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும், இந்தியாவை ஆளும் பா.ஜ.,வுக்கும் உள்ளன.தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தேர்தல் குறித்த பணிகளை செய்வோம். மற்ற நேரங்களில் கூட்டணி சேரலாமா, சேரக்கூடாதா, லாபம் கிடைக்குமா, கிடைக்காதா என்பது குறித்து நாங்கள் சிந்திப்பது இல்லை.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -