மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
17 hour(s) ago | 29
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
19 hour(s) ago | 4
பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
20 hour(s) ago | 7
வரலாறு காணாத வெப்பம் நிலவுவதால், அதிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்பதற்காக டில்லி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகளுக்கு என, ஏர் கூலர் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளை செய்யும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் தலைநகர் டில்லியை சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், டில்லி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகளை வெப்ப அலை தாக்கலாம் என்றும், இந்த வெப்பத்தால், அவை உயிரிழக்கவும் நேரிடலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால், அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.இதுகுறித்து டில்லி உயிரியல் பூங்காவின் இயக்குனர் சஞ்சீத் குமார் கூறியதாவது:வெப்பம் தகித்துக் கொண்டிருக்கும் நிலையில், நாளுக்குநாள் இதன் தாக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விலங்குகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.பூங்காவுக்குள் கூடுதல் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. யானை போன்ற விலங்குகள் மீது, தண்ணீர் தெளிப்பது உள்ளிட்ட பணிகளும் துவங்கியுள்ளன.கடும் வெப்பத்தை தாங்கும் அளவிலான உணவுகளை விலங்குளுக்கு தருவது என முடிவெடுக்கப்பட்டு, அதற்காக மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டு, விலங்குகள், பறவைகளை கூர்ந்து கவனிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெப்ப அலையால் கடும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலையை சமாளிக்க தேவையான மருந்துகளுடன் கூடிய, அவசரகால மருத்துவ ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.நண்பகல் நேரங்களில் விலங்குகளை உன்னிப்பாக கவனித்து, அவற்றின் குணம் மற்றும் போக்குகளில் புதிய மாற்றம் தென்படுகிறதா என்பதை கண்காணிக்கும்படி பூங்கா பணியாளர்களுக்கு சிறப்பு உத்தரவு போடப்பட்டுள்ளது.வெப்பத்தில் நீண்ட நேரம் இருக்க வைப்பதை தவிர்க்கும் நோக்கில், வழக்கமான முறையில் இல்லாமல், அவ்வப்போது மட்டும் கூண்டுகளை திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது.தண்ணீர் தொட்டிகளை எந்நேரமும் கண்காணித்து, அவற்றின் கொள்ளளவு முழுமையாக நிரப்பி வைக்கப்படும். இக்கட்டான இந்த நேரத்தில், தண்ணீர் வாயிலாக நோய் ஏதும் ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக, தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.சிங்கம், புலி, சிறுத்தை, கழுதைப்புலி, நரி, காட்டு நாய் உள்ளிட்ட சில வகை விலங்குகளின் கூண்டுகளில் ஏர்கூலர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவ்வப்போது தண்ணீர் தெளிக்கப்பட்டும் வருகிறது.விலங்குகள் ஓய்வெடுப்பதற்காக, ஆங்காங்கே தடுப்புகள், கூடாரங்கள், மூங்கில் தட்டிகள் கொண்ட நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் உயிரினங்களுக்கு பழங்களால் தயாரிக்கப்பட்ட ஐஸ் உருண்டைகள் வழங்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
17 hour(s) ago | 29
19 hour(s) ago | 4
20 hour(s) ago | 7