உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்குங்கள்

தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்குங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

''தமிழக ரயில்வே திட்டங்கள் மற்றும் சாலை திட்டங்களுக்கு, போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்,'' என, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.டில்லியில் நேற்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதித் துறை அமைச்சர்களுடன், மத்திய பட்ஜெட் தொடர்பான கூட்டம் நடந்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார். அதில், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:கடந்த 2021 - 22ம் ஆண்டு பட்ஜெட் உரையில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப் பணியை, 63,246 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு திட்டமாக மத்திய நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். இத்திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து, நடப்பாண்டு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்க வேண்டும்.தமிழகத்தில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான சீரமைப்பு பணிகளை செய்ய, தமிழக அரசுக்கு 3,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். மத்திய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களில், மத்திய அரசு குறைந்தபட்சம் 50 சதவீதம் பங்களிப்பை வழங்க வேண்டும். பெரிய அளவிலான உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதை பொறுத்தவரை, தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்தி வருகிறது. அடுத்தடுத்து வந்த மத்திய அரசு பட்ஜெட்டில், குறைந்த எண்ணிக்கையிலான ரயில்வே திட்டங்களே தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நான்காவது ரயில் பாதை வழித்தடம்; திருப்பத்துார் - கிருஷ்ணகிரி - ஓசூர் புதிய வழித்தடம்; அருப்புக்கோட்டை வழியாக மதுரை - துாத்துக்குடி; மீஞ்சூர் - திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் - ஒரகடம் - சிங்கபெருமாள் கோவில் - மதுராந்தகம் வழித்தடம் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான உயர்மட்ட சாலை; செங்கல்பட்டு - திண்டிவனம் வரையிலான உயர்மட்ட சாலை ஆகியவற்றை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக்கொள்ள வேண்டும். சென்னை - கன்னியாகுமரி சாலையை விரிவாக்கும் புதிய திட்டத்திற்கு, போதிய நிதி ஒதுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.- நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

RAMESH
ஜூன் 24, 2024 18:14

மத்திய அரசு ஆன மர்மம் என்ன.....திராவிட மாடல் சறுக்குகிறதா


s chandrasekar
ஜூன் 24, 2024 16:24

உஷார் அம்மா usharu.


வாசகர்
ஜூன் 23, 2024 18:27

புகைப்படம் தெளிவாக திராவிட மாடலை வெளிப்படுத்துகிறது. இங்கே வீர வசனங்கள், அங்கே அப்படியே பம்முவது. எப்போதுமே வட்டத்தை விட்டு மாவட்டம் பெரிது, ஆனாலும் வீர வசனங்களுக்கு குறைவில்லை.


venugopal s
ஜூன் 23, 2024 15:15

என்ன செய்வது? அயோக்கியனுக்கு வாழ்க்கைப்பட்டால் பிடிக்காவிட்டாலும் குடும்பச் செலவுக்கு அவனிடம் தானே போய் கேட்க வேண்டியுள்ளது!


theruvasagan
ஜூன் 23, 2024 16:04

குடும்பத்துல இருக்கிற பொறுப்பில்லாத ஊதாரி செலவாளி குடும்பத் தலைவன் கிட்ட செலவுக்கு காசு கேட்கும்போது பம்மித்தான் ஆகணும். பணிஞ்சுதான் போகணும்.


ஆரூர் ரங்
ஜூன் 23, 2024 16:54

இதுதான் உள்ளாட்சிகளின் நிலை?


naranam
ஜூன் 23, 2024 14:37

இதே திருட்டு திமுவினர் தான் நிதியமைச்சரை அவர் ஜாதியைக் குறிப்பிட்டு அவதூராகப் பேசினர். திமுகவினர் வெட்கம் கெட்டவர்கள்.


த.நா.பரிதாபம்
ஜூன் 23, 2024 14:16

ஒரே திட்டம், உன்னதமான திட்டம், சுருட்டுதல் மற்றும் சட்ட விரோத செயல் மரணங்கள் ஊக்குவிப்பு உரிமை தொகை. விளங்கிடும் தநா.


ராமகிருஷ்ணன்
ஜூன் 23, 2024 14:05

விளம்பர விடியல் அரசு செய்யும் தண்ட செலவுகளுக்கு மத்திய அரசுக்கு சரியான கணக்கு கொடுத்தால் மட்டுமே பணம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் முழுசா முழுங்கி ஏப்பம் விட்டு விடுவார்கள். தோல் இருக்க சுளை முழுங்குவது திமுகவின் வாடிக்கை.


rao
ஜூன் 23, 2024 10:17

Allocation will be done by the central government,we will apply stickers to the projects


s chandrasekar
ஜூன் 24, 2024 16:27

குடுத்த பணத்திற்கு கணக்கு கேட்கணும் .


nv
ஜூன் 23, 2024 10:16

இவனுங்க கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் பத்து லட்சம் குடுக்கணும், மதம் மாற்றும் சக்திகளுக்கு படி அளிக்கவும், தன் குடும்ப சொத்து அதிகரிக்கவும் இவனுங்களுக்கு மத்திய அரசு அள்ளி குடுக்கணும்??


அருண், சென்னை
ஜூன் 23, 2024 09:43

ஒதுக்குங்கள் ... பயனாளி முதல் குடும்பம் மற்றும் திமுக அமைச்சர்கள், திமுக கௌன்சிலர்கள்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை