உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆகஸ்ட் மாத நீரின் அளவை இறுதி செய்ய 30ல் கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு

ஆகஸ்ட் மாத நீரின் அளவை இறுதி செய்ய 30ல் கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வரும் ஆகஸ்ட் மாதத்திற்குரிய காவிரி நீரை தடங்கலின்றி திறந்துவிட வேண்டுமென, காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இது குறித்து ஆலோசிக்க, வரும் 30ம் தேதி ஒழுங்காற்றுக் குழு கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32வது ஆலோசனை கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பின், தமிழக நீர்வளத்துறை கூடுதல் செயலர் மணிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:இதுவரை வந்து சேர்ந்துள்ள நீரின் அளவு குறித்த விபரங்களை இந்த கூட்டத்தில் சமர்ப்பித்தோம். அது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவில், மாதந்தோறும் தமிழகத்துக்கு தர வேண்டிய நீரின் அளவு குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்துக்கு வர வேண்டிய காவிரி நீரின் அளவு முழுமையாக வந்து சேர்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டுமென வலியுறுத்தினோம். இறுதி தீர்ப்பில் கூறியுள்ளபடி, ஆகஸ்ட் மாதத்திற்குரிய தண்ணீரை வழங்க வேண்டுமென கேட்டுள்ளோம். இதற்காக வரும் 30ம் தேதி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் மழை நன்றாக பெய்து வருவதால், தண்ணீர் வரத்து உள்ளது. இந்த மாதம் தண்ணீர் பிரச்னை இல்லை. கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து, 30,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினியில் இருந்தும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.வருங்காலங்களில் தமிழகத்துக்கு உண்டான பங்கீட்டு தண்ணீரை திறந்துவிட வேண்டுமென்பது தான் நம் கோரிக்கை. வரும் ஆகஸ்டில் 45 டி.எம்.சி., தண்ணீரை எக்காரணம் கொண்டும் குறைவில்லாமல் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளோம். இந்த கூட்டத்தில், மேகதாது அணை குறித்து எதுவும் பேசவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

G. Srinivasan
ஜூலை 28, 2024 09:55

கர்நாடக அரசு காவிரி நீரை தமிழ்நாட்டில் வடிகாலாக பயன்படுத்துகிறது. பாசனத்திற்கு தண்ணீர் கொடுக்க மனமில்லை இதை அழுத்தம் கொடுக்க வேண்டும்


K.n. Dhasarathan
ஜூலை 26, 2024 10:16

இந்த குழு/ ஆணையம் ஒரு காலி டப்பா இதனால் என்ன செய்ய முடியும்? கர்நாடகா தண்ணீர் தரவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்திலே போயி முறையிட்டு பல மாதங்கள் போராடி, நீர் பெற்று, பருவம் தப்பி பயிர் செய்கிறோமே அதற்கு, தண்ணீர் தரவில்லையெனில் எனில் உடனே உச்ச நீதி மன்றம் போகணும், அப்போதான் சரிவரும் .


ஆரூர் ரங்
ஜூலை 25, 2024 11:38

ஆறு குளங்களை ஆக்கிரமித்து அழித்து விட்டார்கள். அவற்றை தூர் வாரி பயன்படுத்துவதற்கு பதில் மனிதனின் மோசமான கண்டுபிடிப்பு ஆறுகளின் குறுக்கே அணை கட்டுதல்.தமிழக அணைகளின் பெரும்பகுதி சேறு, சகதி, வண்டல், சவுடு தேங்கி கொள்ளளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது. இன்னும் சில ஆண்டுகளில் முழுவதும் அடைபட்டு பயனில்லாமலாகிவிடும். டெல்டாவுக்கு நீர் வராது. அணையை தூர் வாரினா பல கோடி டன் மண்ணை எங்கு கொட்டுவது? பூகம்பம் வரவும் காரணமாகி விடும். மேலை நாடுகளில் அணைகளை உடைத்துக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் புதிய அணைகளைக் கட்ட கோருகிறோம்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 25, 2024 09:42

வெள்ள தண்ணி கேட்டாலும் கேக்காட்டியும் எப்படியும் வரப்போகுது. அப்புறம் என்னத்துக்கு இந்த காவிரி மேலாண்மை ஆணையம்? என்று மக்கள் கேட்கிறார்கள்.


சூரியா
ஜூலை 25, 2024 05:42

வெள்ளம் பெருகி வரும் காலங்களில் கர்நாடகா இந்த அளவை எடுக்கிறது. ஒருமுறை நாம் அவர்களது வெள்ளத்தை வாங்க மறுத்தால், பிறகு ஒழுங்காக மாதா மாதம் இந்தக் கணக்கைப் போடுவார்கள் .


AG.ஜெகநாத்
ஜூலை 25, 2024 08:18

என்னங்கடா உங்க கணக்கு மழை பெய்தால் தண்ணிவரும். மழை இல்லை என்றால் தமிழ்நாட்டு மக்கள. கருநாடக முதல் மந்திரியை தமிழ்நாட்டு மக்கள்.....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை