உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இந்திய - இலங்கை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தணும்

இந்திய - இலங்கை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தணும்

''மீனவர்கள் பிரச்னையை தீர்ப்பதற்கு, இந்தியா - இலங்கை அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கைக் குழு மற்றும்இரு நாட்டு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு போன்றவை, நேரில் சந்தித்து ஆலோசிப்பதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று, கனிமொழி கூறினார்.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவங்கள் குறித்து, நேற்று டில்லியில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.பி.,க்கள் கனிமொழி மற்றும் நவாஸ்கனி ஆகியோர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினர். பின் கனிமொழி அளித்த பேட்டி: இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வருகின்றனர்.சமீபத்தில் கூட ராமேஸ்வரம் மீனவர்கள், கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டு, சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள், கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, இந்தியா மற்றும்இலங்கை அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கைக்குழு கூடி பேச வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன், இதுபோன்ற ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.தற்போது எழுந்துள்ள இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு, விரைவில் இந்த ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட வேண்டும். இரு தரப்பு அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை மட்டுமல்லாது, இருநாட்டு மீனவ சங்க பிரதிநிதிகளும் சந்தித்து, தங்களுடைய பிரச்சனைகளை, நேருக்கு நேர் பேசி, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம். விரைவில் ஏற்பாடு செய்வதாக அமைச்சரும் வாக்குறுதி கொடுத்து உள்ளார். நாங்கள் மத்திய அமைச்சரை சந்திக்கப் போகும் விபரம் அறிந்து கொண்டு, முன்கூட்டியே பா.ஜ., தலைவர்கள் இதே மாதிரியான சந்திப்பை நிகழ்த்தி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

சோலை பார்த்தி
ஆக 07, 2024 22:16

அவங்க. . .யாருடா . . என் புருச..... . .அப்படின்னு கேட்கிற மாதிரி இருக்கு


vijai
ஆக 07, 2024 17:52

இந்த மாதிரி பயமுறுத்தும் போட்டோவை போட வேண்டாம் குழந்தைகள் பயப்படுறாங்க


naranam
ஆக 07, 2024 15:15

இந்த மாதிரி படத்தப் போட்டு பயமுறுத்தாதீங்கப்பா


VENKATASUBRAMANIAN
ஆக 07, 2024 12:39

இவர்கள் ஆட்சியில் இருந்த போது என்ன கிழித்தார்கள்.


Ramesh Sargam
ஆக 07, 2024 12:16

ஆம், மத்திய அரசு ஒரு நிரந்தர முடிவு இந்த மீனவர் பிரச்சினைக்கு கண்டறிந்தபிறகு, அதற்கு அண்ணன் ஸ்டாலின் படத்துடன் ஒரு ஸ்டிக்கர் ஒட்டி ஏதோ அவர் தீர்வுகண்டதாக தற்பெருமை பேசுவார்


ஆரூர் ரங்
ஆக 07, 2024 11:33

இனிமேல் மீனவர்கள் எல்லை தாண்டினால் நமது கடலோர காவல்படையே அவர்களை வேறு மாநில சிறைகளில் அடைத்து மீண்டும் மீன்பிடிக்கும் வேலை செய்ய நிரந்தர தடை விதிக்க வேண்டும். படகுகளை SCRAP செய்ய ஏலம் விட வேண்டும். இவர்களால் பாதிக்கபடுவது வட இலங்கை தமிழ் மீனவர்கள்தான். அவர்களும் தொப்புள் கொடி உறவுகள்தான்.


jaya
ஆக 07, 2024 19:41

பிரச்சினையே எல்லை மீறுவதால் தானே , இந்த பாப்புவுடைய பாட்டி தான் கச்சத்தீவை வாரிக்கொடுத்தார் , இது இன்றைக்கு கூப்பாடு போடுகிறது .


xyzabc
ஆக 07, 2024 11:29

கனி மா நீ என்ன செய்ய போகிறாய் ? உன் அண்னன் என்ன செய்ய போகிறான் ?


வீரா
ஆக 07, 2024 10:51

தமிழ் நாட்டின் சொர்ணாக்கா


பேசும் தமிழன்
ஆக 07, 2024 08:59

இலங்கை ஆட்கள் உங்கள் அனுதாபிகள் தானே ....அங்கே போய் விருந்துண்டு ...பரிசு பொருள் வாங்கி கொண்டு வந்த ஆட்கள் தானே நீங்கள் ...நீங்களே அவர்களிடம் சொல்லலாம் அல்லவா ???


tmranganathan
ஆக 07, 2024 07:56

andha 2G வழக்கை மீண்டும் விசாரித்து கனியை திஹார் ஜெயிலில் போடணும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை