உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / க்ரீம் பன்னால் வெடித்த சர்ச்சை: ஜிலேபி சாப்பிடலை என்கிறார் வானதி

க்ரீம் பன்னால் வெடித்த சர்ச்சை: ஜிலேபி சாப்பிடலை என்கிறார் வானதி

கோவை: கோவை கொடிசியா வளாகத்தில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொழில்துறை அமைப்புகளுடன் கலந்தாய்வு கூட்டம் 11ம் தேதி நடந்தது. இதில், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் பேசியதாவது:எங்களுக்கு ஒரே ஒரு இஷ்யூ தான் மேடம். உங்க பக்கத்துல இருக்கற எம்.எல்.ஏ., வானதி எங்களுக்கு ரெகுலர் கஸ்டமர். வர்றப்பல்லாம் சண்டை போடுறாங்க. ஏன்னா, எங்களுக்கு நீங்க ஸ்வீட்டுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., வச்சுருக்கீங்க. 'இன்புட்' குடுக்கறீங்க. சாப்பாட்டுக்கு 5 சதவீதம் வச்சுருக்கீங்க. 'இன்புட்' இல்லை. காரத்துக்கு 12 சதவீதம் வச்சுருக்கீங்க.பேக்கரியில், பிரட்டும், பன்னும் விட்டுட்டீங்க. மீதி எல்லாத்துக்கும் 28 சதவீதம் வரை வச்சுருக்கீங்க. இந்தம்மா (வானதி) வர வேண்டியது; ஜிலேபி சாப்பிட வேண்டியது. அடுத்து காபி குடிக்கணும், காரம் வேணும்ங்கறது. காரத்துக்கு 12 சதவீதம்னு சொன்னா, உடனே சண்டைக்கு வர்றது. இது மாதிரி தினமும் எங்க வியாபாரத்துல பிரச்னை நடக்குது. ஒரே பில்லில், ஒரு குடும்பத்துக்கு விதவிதமாக ஜி.எஸ்.டி., போட்டுக் குடுக்கறது கஷ்டமா இருக்கு.பன்னுக்கு ஜி.எஸ்.டி., இல்லை. பன்னுக்குள் கிரீம் வைத்தால், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., ஆகி விடுகிறது. கஸ்டமர், 'கிரீமையும், ஜாமையும் கொண்டாங்க. நானே வைத்துக் கொள்கிறேன்' என்கிறார். கடை நடத்த முடியல. அதனால், ஒன்றாக எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரி ஜாஸ்தி பண்ணிவிடுங்கள்.இன்னொன்னு, உங்க எம்.எல்.ஏ., அம்மா தான் இதெல்லாம் பண்றது. எங்க தொகுதில இருக்காங்க. கடையில் வந்துட்டு, 'வடநாட்டுல அதிகம் ஸ்வீட் சாப்பிடுறாங்க. அதனால தான் அம்மா (நிர்மலா சீதாராமன்) அதற்கு 5 சதவீதமும், காரத்துக்கு 12ம் பண்ணிருக்காங்க' என்கிறார். நான் சொன்னேன்; அப்படி எல்லாம் இல்லை. தமிழ்நாட்டில் ஸ்வீட், காரம், காப்பி; அப்படித் தான் போகும். அதை தயவு செய்து 'கன்சிடர்' செய்யுங்கள் மேடம். இவ்வாறு கொங்கு பாணியில் நகைச்சுவையாக கோரிக்கை வைத்தார்.அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “ஒவ்வொரு மாநிலத்துக்கும், தனித்தனியாக வரி விதிப்பதில்லை. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரே வரி விகிதம் தான்,” என்றார்.அப்போது மீண்டும் பேசிய சீனிவாசன், “இந்தியாவுக்கு பூராவும் சேர்த்து ஏத்திவிட்டாலும் சரிங்க. ஒரே மாதிரி பண்ணுங்க. தனித்தனியா வைக்காதீங்க. ஒரு குடும்பம் வந்தா, பில் போடறதுக்குள்ள கம்ப்யூட்டரே திணறுதுங்க மேடம்.“ஜி.எஸ்.டி., அதிகாரிகள் இன்புட்டுடன் கிரெடிட் எடுக்கறப்ப, ஒரே கிச்சன்ல தான் எல்லாம் பண்றாங்க. “இன்புட் எடுக்கும்போது, அதே காஸ், அதே ஸ்வீட் மாஸ்டர், அதே கடலை மாவு, அதே மைதா மாவு. இன்புட் எப்படிங்க மேடம் எடுக்க முடியும். ஆபிசர்ஸும் திணறுறாங்க. அவங்களுக்கும் ஹெல்ப் பண்ணுங்க,” என்றார்.வட்டார வழக்கிலான அவரது பேச்சு அடங்கிய இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவியது.நேற்று முன்தினம் மாலை, நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அமைச்சரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பிய போது, “அவர் பெரியவர். நீண்ட நாட்களாக தொழிலில் உள்ளார். அவர் ஸ்டைலில் பேசினார்; அதில் தவறில்லை,'' என்றார். அதன்பின், அன்னபூர்ணா சீனிவாசன் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரிய வீடியோ வெளியானது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்., தலைவர் கார்கே முதல் தி.மு.க., -- காங்., -- சீமான் என, அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, வெளிநாட்டில் இருந்து இதற்கு வருத்தம் தெரிவித்தார். வானதி தன் பங்கிற்கு, “அவராக வலிய வந்து தான் மன்னிப்புக் கேட்டார்,” என, விளக்கம் கொடுத்தார்.

ஆணவம்... அவமரியாதை!

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் அறிக்கை: கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் போன்ற சிறு தொழிலதிபர்கள், நம் அமைச்சரிடம் எளிமையான ஜி.எஸ்.டி., வரி குறித்து கோரிக்கை எழுப்பினால், அவர்களின் கோரிக்கை ஆணவத்துடன், அவமரியாதையுடனும் அணுகப்படுகிறது. அரசின் கோடீஸ்வர நண்பர் விதிகளை வளைக்கும்படி கேட்டால், பிரதமர் மோடி சிவப்பு கம்பளம் விரிக்கிறார். அதிகாரத்தில் இருப்போரின் ஈகோ புண்படுத்தப்பட்டால் அவர்கள் அவமதிப்பர். என்பது கண்கூடாகத் தெரிகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ராகுலைத் தொடர்ந்து, காங்., தலைவர் கார்கேயும், கோவை விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சரை கண்டித்துள்ளார்.துாத்துக்குடி எம்.பி., கனிமொழி கூறுகையில், 'பணியுமாம் என்றும் பெருமை சிறுமை; அணியுமாம் தன்னை வியந்து' என்கிறது திருக்குறள். மத்திய அரசும், மத்திய அமைச்சர்களும், தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்க மிரட்டவில்லை

கோவை தெற்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி கூறியதாவது: கோவையில் கடந்த 11ம் தேதி, மத்திய நிதியமைச்சர் தொழிலதிபர்களுடனான கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, ஹோட்டல் உரிமையாளர் ஜி.எஸ்.டி., தொடர்பாக பேசினார். என் பெயரை குறிப்பிட்டு, 'எம்.எல்.ஏ., அம்மா எங்க உணவகத்துக்கு வருவாங்க. ஜிலேபி, சாப்பிடுவார், சண்டை போடுவார்' என சொன்னார்.'நான் எத்தனை முறை அன்னபூர்ணா உணவகத்துக்கு வந்திருக்கிறேன்; ஜிலேபி சாப்பிட்டுள்ளேன்' என, கேட்டிருக்க முடியும். நான் அந்த இடத்தில் சபை நாகரிகம் கருதி எதுவும் பேசவில்லை. அடுத்த நாள் காலை, சீனிவாசன் எனக்கு போன் செய்து, 'அமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, கூறினார். 'மதியம் பார்க்கலாம்' என்று சொன்னேன். மதியம் நிதியமைச்சரை சந்தித்த்து மன்னிப்பு கோரினார். பின், என்னிடமும் மன்னிப்பு கோரினார். மேடையில் ஆண் அமைச்சர், ஆண் எம்.எல்.ஏ., இருந்திருந்தால், இப்படிப்பட்டஉரையாடல்நடந்திருக்குமா? சீனிவாசனை மிரட்டி,மன்னிப்பு கேட்க வைத்தோம் என சொல்கின்றனர். தொழில்துறையை மேம்படுத்தவந்த நிதி அமைச்சரிடம்,இப்படி பேசியது வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

என்ன பேசினார்?

ஹோட்டல் அறையில் நிர்மலாவிடம், ஹோட்டல் அதிபர் கூறுகையில், ''சங்கத்தில் விவாதித்த விஷயங்களை தான் பேசினேன். நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும். தமிழகத்தில் சிறிய கடை, பெரிய கடை அல்லது ஸ்டார் ஹோட்டல்கள், தெருவோர கடைகள் உள்ளிட்ட அனைவரையும் சேர்த்து நீங்கள் ஒரு கூட்டம் நடத்த வேண்டும்,'' என்றார்.

அன்னபூர்ணா ஓனரிடம் அண்ணாமலை மன்னிப்பு

அமைச்சர் நிர்மலாவுடன், ஹோட்டல் நிறுவனர் பேசிய வீடியோவை, கட்சியினர் வெளியிட்ட செயலுக்கு நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதற்காக, அன்னபூர்ணா நிறுவனர் சீனிவாசனிடம் வருத்தம் தெரிவித்தேன். அவர், தமிழகத்தின் வணிக சமூக துாணாக இருக்கிறார்.தமிழகம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களித்து வருகிறார். இத்துடன் இந்த விவகாரத்தை முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Indian
செப் 17, 2024 13:45

ஒரு தொழிலும் செய்ய முடியாத நிலை வரும் ?


அப்பாவி
செப் 14, 2024 18:47

அமைச்சரெல்லாம் மக்களிடம் நேரடியா பேசபடாது. ஒரு தொழிலதிபரே இப்பிடி போட்டு வாங்குறாரு. மக்களிடம் பேசுனா இன்னும் செமையா அறிவுரைகள் கிடைக்கும். அமைச்சர் போய், எழுதிக்குடுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிங்களை கேட்கட்டும்.


MEERA TEXTILES P LTD VEDASANDUR
செப் 14, 2024 18:17

திருப்பூரிலும் கோவையிலும் ஜவுளி துறை வளர்ச்சி முன்னேற்றத்திற்கு பதிலாக ஜிலேபி வகைகள் பற்றி விவாதத்திற்கு அவசியமே இல்லை .


yts
செப் 14, 2024 16:39

அன்னபூர்ணா ஹோட்டல் ஏகப்பட்ட தடவை ஈக்கள் செத்துக் கிடந்து உள்ளது இவர் பேச வந்துட்டாரு


Srinivasan Narasimhan
செப் 14, 2024 15:42

இந்த அன்னபூர்ணா ஓனர்கிட்டா கேக்கனும்??? 1 கப்பு மாவு ஊத்தி 1 கப்பு சாம்பார் குடுத்து இட்டிலின்னா 1செட் 40ஓவாய் ? அதே இட்டிலிக்கு கிண்ணத்துல சாம்பார் ஊத்தி சாம்பார் இட்லின்னா 55ஓவாய்? அதே 1கப் மாவுல நீளம ஊத்தி தோசைன்னா 110 ஓவாய்? அதையவே குட்டையா ஊத்தோன ஊத்தாப்பம்னு 95 ஓவாய் ? அதே தோசை மேல இட்டிலிக்கு தர்ர பொடிய தூவுண பொடி தோசைன்ணு 125 ஓவாய் வாங்குறாறு? அதே 1 கப்பு மாவு அதே மாஸ்ட்டர் அதே gas ஒண்ணுமே புரியல கோவிந்தா???


MEERA TEXTILES P LTD VEDASANDUR
செப் 14, 2024 18:22

அருமை நண்பா


Ram pollachi
செப் 14, 2024 15:14

குடிசை தொழில் என்று சொல்லி பலர் பல விதமான தின் பண்டங்களை தயாரித்து கடை கடையாக ஏறி இறங்கி விற்க வசதி இல்லை, இதை சிலர் சரியாக பயன்படுத்துகிறார்கள் எல்லாத்தையும் நானே வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி தயாரிப்பு ஸ்டிக்கர் ஒட்டி நம்பவே முடியாத லாபத்தில் விற்று அரசுக்கு வரி கட்டாமல் ஏமாற்றி ஊர் முழுவதும் சொத்துக்களை வாரி குவிக்கிறார்கள் பாரம்பரியம் ஒன்றுமில்லை எப்படி இது சாத்தியம்? வெறும் மிக்சர், முறுக்கு, விற்று பல கோடிகள் சொத்து, வாரிசுகளுக்கு ஆடம்பர திருமணம், .... ஒரே கொண்டாட்டம் தான். இவர்களுக்கு முகவரி கொடுத்தது யார்? மக்களே உஷார்....


Ram pollachi
செப் 14, 2024 14:38

பேக்கரி படு பிரபலம் நகரில் எங்கு பார்த்தாலும் இருக்கும் பயங்கர பிஸி அதன் முதலாளி தான் சங்கத் தலைவர்.... சின்ன பிரச்சினை விலை அதிகம் என்று மொட்ட கடிதம் போட்டு வருமானவரி துறை வந்து எல்லாத்தையும் வாரி கொண்டு.... முகவரியை தேடி இங்கு வந்து ஊரை வளைத்தவர் துணை தலைவர் எல்லா கல்வி நிறுவன கேன்டீனில் இவர்களின் முட்டை பப்ஸ் சப்ளை.... வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் இப்படி சம்பாதிக்க முடியாது.... இவர்களின் நிழல் யார்? இவர்கள் கூடி பேசிய சத்தியமான உண்மை தான் இன்று உலகம் முழுவதும் பேசும் பொருளாக மாறிவிட்டது....


Ram pollachi
செப் 14, 2024 14:23

கீரிம் பன்/ ஜாம் பன் ₹.15/- தேங்காய் பன் ஒரு ரோல் ₹.40/- க்கு தரமாக சுத்தமாக தயாரித்து மகிழ்ச்சியாக குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான் குறிப்பாக எந்த சங்கத்திலும் இல்லை... சங்கத்தை வைத்து ஒரு கூட்டத்தை சேர்த்து கண்டபடி விலையை ஏற்றி மக்களை பாடாபடுத்தும் இவர்களை நினைத்தால் ..... 60 பைசாவுக்கு குடித்த அதே டீ யில் பாதி தான் தருகிறார் விலை ரூபாய் 15/-. நீங்கள் நியாயமாக நடந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது....


Ram pollachi
செப் 14, 2024 14:09

கடையில் வேலை செய்பவர்களுக்கு எல்லாம் ஒரே மாதிரியான கூலி/சம்பளம் தர முடியாதா? அதில் என்ன வித்தியாசம் ? லீவு போட்டால், தாமதமாக வந்தால் சரியாக கட்டிங் போட்டு தரும் கணினி அரசு வரி என்றால் பயந்து தொங்குதோ? விறகு, அரிசி, கடலை, தேயிலை, காப்பி கொட்டை , காய்கறி, பழங்கள் எல்லாம் நேரடியாக விவசாயிகளிடம் வாங்கினால் அதற்கு உண்டான வரியை கையில் இருந்து நாம் கட்டிவிட்டு அடுத்த மாதம் கழித்து விடலாம் இது நடைமுறை நேற்று வந்தது அல்ல. வரி கட்ட பிரியம் இல்லை என்றால் வணிகத்தை குறைத்து அளவாக வாழலாம் இலவச பட்டா வீடுகளும் தப்பித்து விடும். உங்க பாரம்பரியமான தொழிலை மறந்து விட்டு ஐயா தாமேதரசாமி சம்பாதித்து வைத்த பெயரையும், புகழையும் ஒரே நாளில் கெடுத்துக் கொண்டீர்கள்...


venugopal s
செப் 14, 2024 13:14

அக்கா வெங்காயம் பூண்டு சாப்பிட மாட்டார்கள்,தங்கை ஜிலேபி சாப்பிட மாட்டாரா? அதனால் அதற்கெல்லாம் வரி அதிகம் போடுவார்களோ?


முக்கிய வீடியோ