உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கிளம்பியது கிரீம் பன்; பெரும் முயற்சி வீண்! மாற்றத்தை எதிர்பார்த்த கொங்கு தொழில்துறையினர் ஏமாற்றம்

கிளம்பியது கிரீம் பன்; பெரும் முயற்சி வீண்! மாற்றத்தை எதிர்பார்த்த கொங்கு தொழில்துறையினர் ஏமாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தின் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த தொழில்துறையினருக்கு, தொழில் நிமித்தமாக மத்திய - மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகள் இருக்கின்றன. இவ்விரு அரசுகளின் உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை தொழில்துறை பிரதிநிதிகள் அவ்வப்போது சந்தித்து முறையிட்டு வருவது வழக்கம்.நிதி சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக, தொழில்துறைக்கு மத்திய அரசு செய்து வரும் திட்டங்கள், மத்திய பட்ஜெட்டில் அறிவித்த சலுகைகளை விளக்கும் வகையில் தொழில்துறை சந்திப்பு கூட்டம் கோவையில் சமீபத்தில் நடத்தப்பட்டது. வழக்கமான சந்திப்பாக இல்லாமல் இம்முறை நடத்திய கூட்டம் தொழில்துறையினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.ஏனெனில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை வருவதற்கு ஒரு நாள் முன்னதாகவே, மத்திய அரசு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் பலரும் வருகை தந்தனர். யாருமே எதிர்பார்க்காத வகையில், டில்லியில் இருந்து எம்.எஸ்.எம்.இ., அமைச்சக கூடுதல் மேம்பாட்டு கமிஷனர், ஜி.எஸ்.டி., மற்றும் கலால் வரி முதன்மை தலைமை கமிஷனர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள், வங்கி மற்றும் காப்பீடு துறை அதிகாரிகள், டெக்ஸ்டைல் மற்றும் லெதர் போர்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் வந்திருந்தனர். அதாவது, முக்கியமான எட்டு துறைகள் மற்றும் இரண்டு வங்கிகளின் உயர்மட்ட அதிகாரிகள் என, 50க்கும் மேற்பட்டோர் முகாமிட்டனர். இவர்களை, தொழில்துறையினர் சந்தித்து துறை சார்ந்த கோரிக்கைகளை விரிவாக விளக்கினர். அவற்றை தொகுத்த அதிகாரிகள், நிதியமைச்சரிடம் தெரிவித்தனர்; இந்த ஆலோசனை ஒரு மணி நேரம் நடந்தது. இதன் பிறகே, தொழில்துறையினருடனான சந்திப்பு கூட்டம் நடந்தது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உயர் பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகளை ஒரு சேர சந்திப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல; அத்தகைய அதிசய நிகழ்வு கோவையில் நடந்திருக்கிறது. இதுவே முதல் முறை. அதிலும், 61 விதமான கோரிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதும், கூட்டத்திலேயே நிதியமைச்சர் வாக்குறுதி கூறியிருப்பதும், தொழில்துறையினரை மகிழ்ச்சி அடைய வைத்தது. அந்த மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை என்பதே துரதிர்ஷ்டம்.அக்கூட்டத்தில், ஹோட்டல் உரிமையாளர் பேசியதில், 'கிரீம் பன்னுக்கு ஜி.எஸ்.டி.,' என்கிற ஒரு பகுதியை மட்டும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வைரலாக்கப்பட்டது. இது, தொழில்சார்ந்தவர்களுக்கு தேவையற்ற சர்ச்சையை உருவாக்கியது; உடனே, ஹோட்டல் நிர்வாகியே நேரில் சென்று நிதியமைச்சரை சந்தித்து மன்னிப்பு கோரினார்; அந்த வீடியோவும் 'லீக்'காகி, அரசியல் வட்டாரத்தில் மாற்று திசையை நோக்கி, இவ்விவகாரம் சென்றதால், மேற்கு மண்டல தொழில்துறையினர் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.தொழில்துறை சார்ந்த பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கோரிக்கைகள் அனைத்தும் உயரதிகாரிகளின் கவனத்துக்கு நேரடியாக சென்றிருக்கிறது. தீர்வை நோக்கி, தொழில் வளர்ச்சிக்கான அடுத்தகட்ட நகர்வுகளுக்குச் செல்லும் தருணத்தில், அரசியல் கட்சியினரின் தேவையற்ற கருத்து மோதல்களால் அதிர்ச்சி அடைந்திருக்கும் தொழில்துறையினர், இவ்விவகாரத்தை இதோடு நிறுத்திக் கொள்ளவும், தொழில் வளர்ச்சிக்கு கரம் கொடுக்கவும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

இது ஒன்றே பரிகாரம்!

மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராகவும், ஜி.எஸ்.டி.,க்கு எதிராகவும் பொதுவெளியில் எப்போதும் கருத்துக்களை கூறி வருபவர்கள், இது தான் வாய்ப்பு என்கிற ரீதியில், 'கிரீம் பன்' விவகாரத்தில் பழி தீர்ப்பதுபோல் செயல்பட்டு வருகின்றனர். அரசியல் ரீதியாக இச்சம்பவங்களை கொண்டு செல்வது, தொழில்துறையினருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசுவோருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தொழில்துறையினர் முன்வைத்துள்ள கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து மத்திய அரசு தீர்வு காண்பதே, இப்பிரச்னைக்கு பரிகாரமாக அமையும்; அவற்றை நிறைவேற்றுவதற்கு பா.ஜ., உறுதுணையாக இருக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே மத்திய அரசு மீதான களங்கம் விலகும்; தொழில்துறையினருக்குள்ள நம்பிக்கை வலுவடையும் என்பது பரவலான எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Pushparaj Narayanasamy
செப் 21, 2024 20:15

ஊழலே இல்லை சரி சிலிண்டர் மானியம் எங்கே போனது சார்


Peer Mohammed
செப் 17, 2024 03:25

மும்பையில் வடபாவு என்பது ஏழைகளின் உணவு பன்னில் வடையை வைத்து சாப்பிடுவது.


Rasheel
செப் 16, 2024 18:42

ஹோட்டல்கள் அடிக்கும் கொள்ளை பற்றி எவன் பேசுவது?? அனைவரும் வரியை ஒழுங்காக கட்டினால் வரிகள் குறையும். 100 ரூபாய் வரியை வாங்கி 30 ரூபாய் கமிஷன் அடித்தால் நாடு எப்படி முன்னேறும். வரியை குறைத்து கட்டி சுவைத்தவனுக்கு, சரியான வரி காட்டும் போது வருவது வயிற்று வலி மட்டுமல்ல.


Parthasarathy Rajagopalan
செப் 16, 2024 17:13

Some conspiracy is hatched to derail the good efforts of Govt as they came prepared with concerned cental officials.May be some black sheep in Govt


Parthasarathy Rajagopalan
செப் 16, 2024 17:07

Some conspiracy to derail the good efforts/intention of Central govt.May be some insiders also involved. Will such questions be raised before T N MINISTERS. NO,Because, they may be necked out


radha
செப் 16, 2024 16:09

அதுத்தவன் தாலியை அறுக்க மட்டும் தான் தெரியும். நகைச்சுவையை ரசிக்க தெரியாது.


Manoharan. S. R.
செப் 16, 2024 16:03

பதினைந்து ரூபாய்க்கு விற்கும் இட்லியை அறுபது ரூபாய்க்கு விற்பார். ஆனால் ஜி எஸ் டி மட்டும் ஒரே மாதிரி இருக்க வேண்டுமா.


Jaisankar Natesan
செப் 16, 2024 13:39

மிகவும் சரியாக சொன்னீர்கள். எலக்ட்ரிசிட்டி பில் மூன்று முறை முன்னறிவிப்பில்லாமல் உயர்த்தியதை பற்றி பேச மாட்டார் "அன்னபூர்ணா கிரீம் பன்னார்". பொறுப்புள்ள பெண் அமைச்சர் முன்பு பொது வெளியில் பேசுகிறோம், கூட இருப்பவர்களும் பொறுப்புள்ள தொழில் துறையினர் என்பதையும் மறந்து, மைக் கிடைத்ததும் நக்கல் செய்பவர், இப்போது "பேர் போனவராகிவிட்டார்". ஆன்றோர் சொல் : - நுணலும் தன் வாயால் கெடும்.


Ram
செப் 16, 2024 13:11

யோவ் அவர் ஓட்டல் முதலாளிகள் சங்கத்துக்குதான் தலைவர்.


Parthasarathy Rajagopalan
செப் 16, 2024 17:09

That should be shown in polite representation, not in saric manner


SUNA PAANA
செப் 17, 2024 08:58

அதனாலே என்ன. பொறுப்போடு பேச தெரில. பெரிய பருப்பு மாதிரி பேசினார்.


saravanan
செப் 16, 2024 11:49

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை குறை கூறவே எதிர்கட்சிகளும் அவர்களின் ஆதரவு பெற்ற ஒரு கும்பலும் துடித்துக் கொண்டிருக்கிறது அவர்கள் நினைத்தது போல ஊழலோ முறைகேடாகவோ எதுவும் இந்த அரசில் நடக்க வில்லை என்பதால் அந்த ஆத்திரத்தில் சாதாரண விஷயங்களையும் ஊதி பெரிதாக்கி அதில் ஆதாயம் தேட முற்படுகின்றனர். மக்கள் நல திட்டங்களுக்கு செலவிடப்படும் ஜிஎஸ்டி முந்தைய சேவை வரிபோன்ற வரிகளை கூட ஏதோ புதிதாக மக்களிடம் வசூலிப்பதாக ஒரு தவறான பிம்பத்தை உருவாக்குகின்றனர் ரஷ்ய உக்ரைன் பேரினால் விலைகள் உயர்ந்தால் அதற்கும் ஜிஎஸ்டியையே காரணமாக்குகின்றனர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை