உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: பெரிய பங்களா கிடைக்குமா?

டில்லி உஷ்ஷ்ஷ்: பெரிய பங்களா கிடைக்குமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: புதிதாக மத்திய அமைச்சரவையில், அமைச்சரானவர்களுக்கு டில்லியில் அரசு பங்களா ஒதுக்குவதில் பிரச்னை ஏற்பட்டது. காரணம், முன்னாள் அமைச்சர்கள் பலர், தங்களுடைய பங்களாக்களை காலி செய்யவில்லை; ஆனால், உள்துறை அமைச்சர் அமித் ஷா சம்பந்தப்பட்டோருடன் பேசிய உடனேயே, இவர்கள் தங்கள் பங்களாக்களை காலி செய்தனர்.இந்நிலையில், தனக்கு பெரிய பங்களா ஒதுக்கப்பட வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவரான ராகுல் கோரிக்கை வைத்துள்ளாராம். இவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு இருப்பதால், அதற்கு ஏற்றாற்போல் பங்களா வேண்டும். மேலும், '20 கார்கள் வரை நிறுத்தும் வசதி வேண்டும்; என் அம்மா சோனியா வசிக்கும் 10, ஜன்பத் பங்களாவிற்கு அருகேயே வீடு வேண்டும்' என, சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதியுள்ளாராம், ராகுல்.'ராகுலின் செக்யூரிட்டி காரணமாக, 25 போலீசார் அவரது வீட்டில் இருக்க வேண்டும். அதற்கேற்ப பெரிய பங்களாவை தேடி வருகின்றனர். இதனால், மத்திய அமைச்சர்களில் யாராவது ஒருவரின் பங்களாவை, அவருக்கு ஒதுக்கும் நிலை ஏற்படலாம்' என, சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Vijay D Ratnam
ஜூலை 15, 2024 23:44

இந்தியாவிலேயே அதிகம் கொள்ளையடித்த குடும்பம். அவுங்களுக்கு பெரிய பங்களா தேவைதான்.


kumarkv
ஜூலை 14, 2024 19:38

இவர் வீடு இல்லாம நடைபாதையில் கிடக்கிறாரா.


RAAJ68
ஜூலை 14, 2024 16:36

இவருடைய பாதுகாப்புக்காக 20 காவலர்கள் வீண் செலவு. 20 கார்கள் நிறுத்துவதற்கு இடம் தேவையா. என்ன ஒரு ஆடம்பரம் அரசு செலவு.


bhuvanesh
ஜூலை 14, 2024 16:27

எல்லாரும் நல்ல கருத்து சொல்லுங்க ஆனா திமுக ஜெயிக்க வச்சுருங்க


VENKATASUBRAMANIAN
ஜூலை 14, 2024 08:20

மக்கள் வரிப்பணம் இப்படி போகிறது. அனைத்து கட்சி எம்பிக்களும சம்பளம் வாங்கிகொண்டு வீடும் வாங்கி கொண்டு மக்களுக்காக என்ன செய்கிறார்கள். என்ன அக்கவுண்டபிளிட்டி. எதுவும் செய்யாத எம்பிக்களிடமிருந்து எல்லா வற்றையும் திரும்ப வசூல் செய்யவேண்டும்


ஆரூர் ரங்
ஜூலை 14, 2024 07:43

அம்மாவுக்கும் மகனுக்கும் தனித்தனி சொகுசு பங்களா என்பது . கட்சியின் எளிமைக்கு எடுத்துக்காட்டு.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 14, 2024 13:34

தாய்லாந்தில் விளையாடும் விளையாட்டை இங்கேயே விளையாடப் பிரியப்பட்டால் தாய் முன்பா விளையாட முடியும் அவரே முன்னாள் சாம்பியனாக இருந்தாலும் ????


N.venkatachalam
ஜூலை 14, 2024 07:16

கொடுக்கவேண்டியது தான்


sankaranarayanan
ஜூலை 14, 2024 06:39

சோனியாவை 10, ஜன்பத் பங்களாவிலிருந்து காலி செய்ய சொல்லலாமே அவ்வளவு பெரிய பங்களா அவருக்கு எதற்கு அவரை பாராளுமன்ற மேல் சபை உறுப்பினர்மட்டும்தானே அவரும் மற்றவர்கள்போலத்தானே அவருக்கு மட்டும் என்ன தனி சலுகை அதையே பப்புவிற்குக்கூட வழங்கலாமே எப்படி நம்ம ஐடியா நிறைவேறுமா


A Viswanathan
ஜூலை 14, 2024 10:01

இவர்கள் தான் காப்பாற்றுவார்கள். இவரது குடும்பம் எப்போது நாட்டை விட்டு போகிறதோ அன்று தான் நல்லது.நடக்கும் நாட்டில்.


ayen
ஜூலை 14, 2024 20:02

மக்கள் இவரை பப்பு என்று சரியாக தான் கூப்பிடுகிறார்கள். இன்னும் அம்மா வீட்டிற்கு பக்கத்தில் வீடு வேண்டும் என்று அடம் பிடிப்பதில்லை தெரியவில்லையா?


Vijayakumar Srinivasan
ஜூலை 16, 2024 00:10

உண்மை தான் சார்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை