புதுடில்லி: லோக்சபாவின் எதிர்க்கட்சி தலைவராகி விட்டார் ராகுல். 'எனக்கு இந்த பதவி வேண்டாம்' என முதலில் மறுத்தவர், கட்சி தலைவர்களின் வற்புறுத்தலால் பதவியை ஏற்றுக் கொண்டார்.எதிர்க்கட்சி தலைவர் ஆனதுமே, பார்லிமென்டில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். 'நீட்' விவகாரம், எமர்ஜென்சி என, இரண்டு விஷயங்களிலும் சபையில் அமளியை ஏற்படுத்தி, இனிமேல் அவை எப்படி நடைபெறும் என்பதை சுட்டிக்காட்டி விட்டார் ராகுல்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wyf71woi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எதிர்க்கட்சி தலைவருக்கு அமைச்சர் அந்தஸ்து கிடைக்கும்; அத்துடன், பார்லிமென்டில் பெரிய அலுவலகமும் உண்டு; உதவியாளர்களை பார்லிமென்ட் செலவில் வைத்துக் கொள்ளலாம்; பொது கணக்கு குழுவின் தலைவராக ராகுல் இருப்பார்; அரசு பொது நிறுவனங்களின் செயல்பாடுகளை, இந்த குழு கண்காணிக்கும்.இது, மிகவும், 'பவர்புல்' பதவி. எந்த ஒரு முக்கிய விஷயத்திலும், எதிர்க்கட்சி தலைவரான ராகுலுக்கு பேச வாய்ப்பளிக்கப்படும்.'ராகுல் அதிகம் படிப்பதில்லை; எந்த ஒரு சிக்கலான விஷயத்திலும், அதிக கவனம் செலுத்த மாட்டார். ஒரு விஷயத்தைப் பற்றி அவரிடம் ஆலோசிக்க சென்றால், முதல் இரண்டு நிமிடங்கள் நம் பேச்சை கேட்பார்; பின் மொபைல்போனை நோண்ட ஆரம்பித்து விடுவார்' என, தனக்கு நேர்ந்த அனுபவத்தை, காங்., சீனியர் தலைவர் குறிப்பிட்டார். ராகுலின் இந்த வழக்கம் பா.ஜ.,வினருக்கு நன்றாக தெரியும்.'எதிர்க்கட்சி தலைவராகி விட்டதால் குஷியாக இருக்கின்றனர் ராகுலும், அவரது கட்சியினரும். ஆனால், இது ஒரு பொறுப்பான பதவி; வெளிநாட்டு பயணங்களின் போது கண்டபடி உளற முடியாது' என்கின்றனர் பா.ஜ.,வினர்.'ராகுலின் வெளிநாட்டு பயணங்களின் போது, யாரை சந்தித்தாலும் இந்திய துாதரக அதிகாரிகள் உடன் இருப்பர். அதே போல, வெளிநாட்டில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போதும், இந்திய துாதரக அதிகாரிகள் இருப்பர்; இனி, இந்தியாவிற்கு எதிராக ராகுல் கண்டபடி பேச முடியாது. எதிர்க்கட்சி தலைவர் பதவி, ராகுலுக்கு ஒரு கால்கட்டு' என்கின்றனர் பா.ஜ.,வினர்.