உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: மாதாஜி இல்லை

டில்லி உஷ்ஷ்ஷ்: மாதாஜி இல்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்டில் இப்போது எதிர்க்கட்சிகள் அடிக்கடி தர்ணா, கூச்சல், கோஷம் என குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.இந்த சமயத்திலும் சில சுவாரசியமான விஷயங்களும் நடக்கின்றன. இந்த சந்தர்ப்பங்கள் படு சூடாக இருக்கும் எம்.பி.,க்களைக்கூட சிரிக்க வைத்துவிடுகின்றன.இப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தது. மத்திய அரசின் பட்ஜெட் மீது தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது. ராஜ்யசபாவில் நடைபெற்ற விவாதத்தில் காங்கிரசின் தேசிய தலைவரும், சபையின் எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பேசிக்கொண்டிருந்தார்.கடுமையாக விமர்சித்த இவர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பார்த்து, 'மாதாஜி, கருணை காட்டுங்கள்' என, ஹிந்தியில் கூறினார்.துணை ஜனாதிபதியும், சபையின் தலைவருமான ஜக்தீப் தன்கர், உடனே கார்கேவைப் பார்த்து. 'கார்கேஜி, நிர்மலா உங்கள் மாதாஜி இல்லை. உங்கள் மகள் மாதிரி' என்றார். 82 வயதாகும் கார்கே எப்படி 64 வயதாகும் நிதி அமைச்சரை மாதாஜி என அழைக்க முடியும் என்பது சபை தலைவரின் வாதம்.நிர்மலா எழுந்து நின்று சபை தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கை கூப்பினார். சபையில் ஒரே சிரிப்பலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ