உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வை உருவாக்க முயற்சி; ரகசியமாக பேசும் முன்னாள் அமைச்சர்கள்?

ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வை உருவாக்க முயற்சி; ரகசியமாக பேசும் முன்னாள் அமைச்சர்கள்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லோக்சபா தேர்தல் முடிவுகளை அறியும் முன்னரே, அ.தி.மு.க., தலைவர்கள் பலருக்கும் தேர்தல் முடிவு சாதகமாக இருக்காது என்பது தெரிந்து விட்டதால், கட்சியை ஒருங்கிணைத்து காப்பாற்றும் முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க., உரிமை மீட்பு குழுவை சேர்ந்த முக்கிய தலைவர் வைத்திலிங்கத்தை, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது

பழனிசாமி தலைமையில், லோக்சபா தேர்தலை சந்திக்க திட்டமிட்டதும், கூட்டணியில் இருந்து பா.ஜ., கழற்றி விடப்பட்டது. அ.தி.மு.க., தலைமையில் வலுவான கூட்டணி அமைக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனால், நாங்கள் எதிர்பாராத விதமாக, பா.ஜ., வலுவான கூட்டணியை அமைத்து, லோக்சபா தேர்தலை எதிர்கொண்டது. இதனால், தி.மு.க., - அ.தி.மு.க., -- பா.ஜ., என, மூன்று அணிகள் மோதும் சூழல் ஏற்பட்டது.

வெற்றி வாய்ப்பு

வலுவான தி.மு.க., கூட்டணி சிந்தாமல், சிதறாமல் தேர்தலை சந்தித்ததால், அக்கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது. தனி அணி கண்ட பா.ஜ.,வும், இம்முறை ஓட்டுக்களை அள்ளும் என்று தெரிகிறது, பல தொகுதிகளில் அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பும் உள்ளது. இதையெல்லாம் அறிந்து தான், அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர்கள் பலரும், பா.ஜ.,வோடு இணக்கமாக போகலாம் என, தேர்தலுக்கு முன்பே பழனிசாமியிடம் கூறினர்; அதை அவர் கேட்கவில்லை. இப்போது, பெரிய அளவில் தோல்வியே கிடைக்கும் என்று உறுதியாக தெரியவந்திருப்பதை அடுத்து, அ.தி.மு.க.,வின் எதிர்காலம் குறித்து, பழனிசாமிக்கு பக்கபலமாக இருக்கும் தலைவர்கள் கவலைப்பட துவங்கி உள்ளனர். ஒன்றுபட்ட அ.தி.மு.க., தான் எதிர்காலத்தில் நிலைக்க முடியும் என்ற முடிவுக்கு வந்திருக்கும் அவர்கள், தன்னிச்சையாகவே பன்னீர்செல்வம் தரப்பினரோடு ரகசியமாக பேச துவங்கி உள்ளனர். தேர்தல் முடிவுகளுக்கு பின், பழைய அ.தி.மு.க.,வை கட்டமைக்க வேண்டும் என்பது தான் அவர்களுடைய எண்ணமும் முயற்சியும். அதற்கு பழனிசாமி உடன்படாவிட்டால், அவரை மட்டும் விட்டு விட்டு, மற்றவர்கள் ஒன்று சேர்வது என்று பேச துவங்கி உள்ளனர்.

முழு ஒத்துழைப்பு

இதற்கு பன்னீர்செல்வம் தரப்பு, முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறி விட்டது. எனவே, வைத்திலிங்கத்தை முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசியதகவல் வெளியாகி இருக்கிறது. வேறு சில முன்னாள் அமைச்சர்களும் பேசி வருகின்றனர். இந்த பேச்சுக்கு பின்னணியில், பன்னீர்செல்வம் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகரன், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தேர்தல் முடிவுகளுக்கு பின், இந்தமுயற்சிகள் வேகமெடுக்கும் என தெரிகிறது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

vaiko
மே 16, 2024 03:25

தம்பி, இந்துக்கள் வேறு, தமிழர்கள் வேறு இதை முதலில் புரிந்துகொள்


kumar c
மே 13, 2024 16:53

ஆட்சி இழந்தும் அசரதவர்,ஆட்சியை காப்பாத்துனவரு கூப்பிடும் கேட்க்காதவர் , இந்த எம்பி தேர்தல் முடிவுக்கு மட்டும் அரசுவாரா ? அதிமுக கடைசி தொண்டர் உள்ளவரை இவர் அடங்க மாட்டார்


kumar c
மே 13, 2024 15:05

உன் கதறலை கண்ட பிறகு இது நடந்து விட வாய்ப்பு உள்ளதா நம்புகிறேன்


venkatakrishna
மே 12, 2024 16:30

வாழ்த்துக்கள் ஆனால் இதில் உள்ள நபர்கள் கொங்கு நபர்கள் வெற்றி பெறுமா


V RAMASWAMY
மே 12, 2024 16:17

அ தி மு க வின் அமைப்புகள் அனைத்தும் உண்மை நிலையை புரிந்துகொண்டு தி மு க கொள்கைகளை பின்பற்றாமல்,தி மு க காணாமல் போய்விடும் மக்களுக்கு நன்மைகள் பல கிடைக்கும், போற்றுவார்கள்


பேசும் தமிழன்
மே 12, 2024 12:59

பழனியை நீக்கி விட்டு... மற்ற தலைவர்கள் எல்லாம் ஒன்று சேரலாம்.. எம்ஜியார்... ஜெயலலிதா... அனைவரையும் அரவணைத்து செல்வார்கள்.... கட்சிக்கு எது நல்லதோ அதை மட்டுமெ செய்வார்கள்.... தீப்பொறி ஆறுமுகம் என்ற திமுக ஆள் ஜெயலலிதா அவர்களை பற்றி பேசாத பேச்சா.....ஆனால் சிறு திரும்பும் பல் குத்த உதவும் என்று....அவரையும் கட்சியில் சேர்த்து கொண்டவர் தான் அந்த அம்மா ....ஆனால் பழனி யாரையும் அண்டவிடாமல்.....தான் மட்டுமே கட்சியில் இருக்க வேண்டும் என்று நினைத்தால் ....கட்சிக்கு அழிவு நிச்சயம் ......கட்சியை காப்பாற்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டும்.


Santhakumar Srinivasalu
மே 12, 2024 12:03

நல்ல முயற்சி!


N Sasikumar Yadhav
மே 12, 2024 11:19

சிறுபான்மையினரின் ஓட்டுப்பிச்சைக்காக இந்துக்களுக்கு துரோகம் செய்யும் திராவிட கட்சிகள் அழியவேண்டும்


SP
மே 12, 2024 09:55

முதலில் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கட்சி பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். அப்பொழுதுதான் இது சாத்தியம்.


ஆரூர் ரங்
மே 12, 2024 09:50

ஆண்டிமடம்.


கனோஜ் ஆங்ரே
மே 12, 2024 12:12

ஆண்டி மடம் கட்ன கதைன்னு


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ