உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கன்டெய்னர்கள் தட்டுப்பாடு கலங்கும் ஏற்றுமதியாளர்கள்

கன்டெய்னர்கள் தட்டுப்பாடு கலங்கும் ஏற்றுமதியாளர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்:திருப்பூரில் இருந்து கன்டெய்னர் லாரிகள் மூலம், ஏற்றுமதிக்கான பின்னலாடைகள், துறை முகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.சென்னை, கொச்சி, துாத்துக்குடி துறைமுகங்களில், பெரிய சரக்கு கப்பல் வந்து செல்ல வசதி உண்டு. இருப்பினும், சீனாவில் இருந்து புறப்படும் கப்பல், கொழும்பு வந்து, அங்கிருந்து துாத்துக்குடி வந்துசெல்ல, கூடுதலாக, இரண்டு நாட்களாகிறது. துாத்துக்குடி செல்லும் ஏற்றுமதி கன்டெய்னர்கள், அங்கிருந்து சிறிய கப்பல்களில், கொழும்பு துறைமுகம் கொண்டு சென்று, அங்கு பெரிய கப்பலில் ஏற்றி அனுப்பி வைக்கப்படுகிறது.

நிரந்தரத் தீர்வு தேவை

திருப்பூர் எக்ஸ்போர்ட் கூட்ஸ் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ரத்தினசாமி:கடந்த ஒரு மாதமாக, சரக்கு அனுப்ப, கன்டெய்னர் கிடைப்பதே இல்லை; கடும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. துாத்துக்குடியில் மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. இதன் காரணமாக, வாடகை கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. இறக்குமதி சரக்கு வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், ஏற்றுமதிக்கான கன்டெய்னர் கிடைப்பதில்லை. பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தேவை.

கட்டண உயர்வு

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம்:சிறிய கன்டெய்னர் வாடகை, மே மாதம், 2.72 லட்சம் ரூபாயாக இருந்தது; கடந்த வாரம் 5.59 லட்சமாக உயர்ந்துள்ளது. பெரிய கன்டெய்னர் வாடகை, 3.53 லட்சம் ரூபாயாக இருந்தது; 7.26 லட்சமாக உயர்ந்துள்ளது.விமான சரக்கு போக்குவரத்து கட்டணமும் உயர்ந்துள்ளது.சென்னையில் இருந்து அமெரிக்கா அனுப்ப, கிலோவுக்கு, 561 ரூபாய்; பிரிட்டனுக்கு அனுப்ப, 332 ரூபாய் செலவாகிறது. விமானத்தில் சரக்கு அனுப்ப, 20 முதல், 25 சதவீதம் அளவுக்கு செலவு அதிகரிக்கும். பல்வேறு நெருக்கடியை கடந்து வந்து, எதிர்நீச்சல் போட்ட ஏற்றுமதியாளர்களுக்கு தற்போது புதிய சவால் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஆரூர் ரங்
ஜூலை 08, 2024 09:29

கன்னியாகுமரி இணையம் கன்டெய்னர் துறைமுகத் திட்டம் அமெரிக்க மிஷனரி அங்கிகளின் தூண்டுதலால் எதிர்ப்பு போராட்டத்தால் நின்று போனது. அது நிறைவேற்றியிருந்தால் இப் பிரச்சினை ஏற்பட்டிருக்குமா?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ