உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பாத்ரூம் போக பர்மிஷன் வாங்கணும்; ரயில் பெண் டிரைவர்கள் வேதனை

பாத்ரூம் போக பர்மிஷன் வாங்கணும்; ரயில் பெண் டிரைவர்கள் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ரயில்களில் பணியாற்றும் பெண் டிரைவர்கள்,கழிப்பறைக்கு செல்வதற்கு, 'வாக்கி டாக்கி' வாயிலாக தகவல் தெரிவிக்க வேண்டியுள்ளது, நெருடலாகவும், சிக்கலாகவும் உள்ளதாக கூறியுள்ளனர்.இந்தியன் ரயில்வேயில், 1,700 பெண் ரயில்வே டிரைவர்கள் உள்ளனர். இவர்களில், 90 சதவீதம் பேர் உதவி டிரைவர்களாக உள்ளனர். அதனால் ரயிலில், ஆண் டிரைவருக்கு உதவியாக பணியாற்ற வேண்டியுள்ளது. இந்த பெண் டிரைவர்கள், பணியின்போது பல சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது.இது குறித்து பெண் டிரைவர்கள் கூறியுள்ளதாவது:ரயிலில் பணியாற்றும்டிரைவர்கள் மற்றும் உதவி டிரைவர்கள், கழிப்பறை செல்வதற்கு அல்லது உணவு சாப்பிட செல்வதற்கு, வாக்கி டாக்கி வாயிலாக தகவல் தெரிவிக்க வேண்டும். ரயில் இன்ஜினில் உள்ள லோகோ பைலட் என்ற டிரைவருக்கு தெரிவிக்க வேண்டும். அவர், அதற்கடுத்து வரும் ஸ்டேஷன் மாஸ்டருக்கு வாக்கி டாக்கி வாயிலாக தெரிவிப்பார். அவர், கட்டுப்பாட்டு துறைக்கு தெரிவிப்பார்.பயணியர் ரயிலாக இருந்தால், அதில் ஏதாவது ஒரு பெட்டியில் உள்ள கழிப்பறையை பயன்படுத்தலாம். சரக்கு ரயிலாக இருந்தால், அதற்கடுத்த ரயில் நிலையத்தில் நிறுத்தி, அங்குள்ள கழிப்பறையையே பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு வாக்கி டாக்கியில் தகவல்களை பரிமாறிக் கொள்வது, நெருடலாகவும், சிக்கலாகவும் உள்ளது. இந்த நடைமுறை பல காலமாக உள்ளது. பெண்களுக்கு உள்ள இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ச. ராமச்சந்திரன்
மே 15, 2024 13:41

Accept women ஆர் capable of doing ஜாப் like the men folk, certain jobs like army, running loco etc are fit for women because of their physique


பல்லவி
மே 13, 2024 19:06

தேவையான வசதிகள் செய்து கொடுக்க லாலு யாதவ் போன்றவர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்தால் ஊழியர்களுக்கு சௌகரியமாக இருக்கலாம்


சுலைமான்,கோரிப்பாளையம் மதுரை 625002
மே 13, 2024 16:50

படிச்ச ஆண்கள் நெறய பேர் வேலை கிடைக்காம சுத்திக்கிட்டு திரியிறாங்க இவர்களை யார் இந்த வேலைக்கு வரச்சொன்னது இதே தான்


மு.செந்தமிழன்
மே 13, 2024 22:29

அப்ப கூட பாத்ரூம் கட்டி கொடுக்கணும் அப்படின்னு சொல்ல மனசு வரல ஆம்பளைங்க எங்களுக்கு வேலை கொடுத்தா நாங்க பாத்ரூமில் போக மாட்டோம் ஒன்னுக்கு வந்தா ரயில்வே டேக்கிலே புடிச்சிட்டு வந்துருவோம்.


JeevaKiran
மே 13, 2024 14:47

என்ஜினிலேயே அல்லது சரக்கு ரயிலின் கார்டு பெட்டியில் இந்த வசதி செய்து தரலாம்


தமிழ்வேள்
மே 13, 2024 14:45

ஒரு சில வேலைகள் பெண்களுக்கு ஒத்துவராது என்று சொன்னால் கேட்பதில்லை இப்போதே இந்த மாதிரி கடினமான வேலை செய்யும் பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் அதிகம் ஏற்படுகின்றன ஹார்மோன் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்பு அதிகம் சொல்பேச்சு கேட்கவில்லை என்றால் இம்சை படப்போவது இவர்கள்தான் பட்டாவது திருந்துகிறார்களா என்று பார்ப்போம்


N Sasikumar Yadhav
மே 13, 2024 06:26

ரயில் ஓட்டுனர்களுக்கு கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை