உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராஜ்யசபா சீட் ஒதுக்காததில் அ.தி.மு.க., மீது மன வருத்தமில்லை

ராஜ்யசபா சீட் ஒதுக்காததில் அ.தி.மு.க., மீது மன வருத்தமில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அவனியாபுரம்: ''ராஜ்யசபா சீட் பிரச்னையில் அ.தி.மு.க., மீது மனவருத்தம் எதுவுமில்லை'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: பா.ஜ.,வுடன் கூட்டணி வைப்பதற்கு மற்ற கட்சிகள் தவம் கிடக்கின்றன என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். அவருடைய கருத்தை எப்படி எடுத்துக் கொள்வது என தெரியவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0v90gv6g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு, மீனவர்கள் பிரச்னைகள் மட்டுமே முக்கியமான பிரச்னைகளாக உள்ளன. தமிழகம் முழுதும் தம் மொழியை கட்டாயமாக்க வேண்டும்.தமிழகத்தில் லோக்சபா தொகுதிகள் குறையும் என தகவல் பரப்புகின்றனர். அதற்காக அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 40 எம்.பி., தொகுதிகளை குறைக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டால், அப்போதைக்கு தமிழக அரசுடன் இணைந்து தே.மு.தி.க., போராடும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் உயிர் இழப்பதும் தொடர்ந்து நடக்கின்றன. பிரதமர் மோடி இலங்கை செல்லும்போது, இது தொடர்பாக இலங்கை அரசிடம் பேசி ஒப்பந்தம் போட வேண்டும். கச்சத்தீவை திரும்பப் பெற்றால், மீனவர்கள் பிரச்னை ஓயும். தே.மு.தி.க., வுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும் என அ.தி.மு.க., தெரிவித்தது. இப்போது இல்லை என்கின்றனர். அதற்காக மன வருத்தம் எதுவும் இல்லை. அப்பிரச்னையில், என்ன நடந்தது என்பதை காலம் வரும்போது கூறுகிறேன். தற்போதைய அரசியல் இயக்கங்கள், வெற்றிக்காக வியூக வகுப்பாளர்களை நம்புகின்றனர். ஆனால், நாங்கள் மக்களை மட்டுமே நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

kr
மார் 10, 2025 22:21

Will have to accept what they give.


kulandai kannan
மார் 10, 2025 14:50

காயலான் கடை கட்சி


ராமகிருஷ்ணன்
மார் 10, 2025 14:38

இரு கட்சிகளும் தங்களது தராதரம் அறிந்து நடப்பது நல்லது. ஓவர் நினைப்பு, கூட்டணி பேச சிறிதும் தகுதி இல்லாதவர்கள், எது எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டில் B J P வளர்ச்சி அடைய உதவுகின்றவர்கள்.


Oviya Vijay
மார் 10, 2025 12:30

தமிழகத்தில் தொண்டர்களே இல்லாத கட்சி என்றால் அது தேமுதிக தான்... கேப்டன் மறைவுக்கு கூடிய கூட்டம் அவரின் மேல் கொண்ட அன்பால் தானேயொழிய தேர்தலில் முரசு கொட்டுவதற்காக அல்ல... அதை உணராமல் எப்பேர்ப்பட்ட மனிதன் ஆரம்பித்த கட்சி இப்போ எப்படி சீரழிஞ்சு கெடக்கு பார்த்தியா என்று எதிர்காலத்தில் மக்கள் ஏளனமாக பேசுக்கூடிய நிலைக்கு கொண்டு சென்று விடாதீர்கள் என்று தான் கூறுகிறேன்...


Oviya Vijay
மார் 10, 2025 07:58

மக்கள் கேப்டனை மட்டும் தான் நம்பினார்கள். உங்களை அல்ல... கேப்டன் நல்ல உடல்நலத்துடன் இப்போது உயிரோடிருந்திருந்தால் அரசியல் களமே வேறாக இருந்திருக்கும். மக்கள் மனதில் கேப்டனுக்கான இடத்தில் பிரேமலதாவுக்கு என்றைக்குமே இடமில்லை. இனிமேலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படாமல் இருக்க நீங்கள் கட்சியைக் கலைத்துவிட்டு நிம்மதியாக ஓய்வெடுக்கலாம்... யோசித்து முடிவெடுங்கள்...


ராஜாராம்,நத்தம்
மார் 10, 2025 08:54

ஏலே நீ திமுகவிற்கு முட்டுக் கொடுப்பதோடு நிறுத்திக் கொள். கேப்டனின் கட்சிக்கு புத்திமதி சொல்லத் தேவையில்லை. நானும் கருத்தை சொல்றேன்னு காலங்காத்தால கெளம்பி வந்திட்றானுக...


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 10, 2025 09:51

ஆமாம் ஆமாம் இவர் சொல்வதை போல எல்லா திராவிட கட்சிகளும் புதிதாக தோன்றிய திராவிட மாடல் திராவிட கட்சி உட்பட எல்லாரும் கட்சியை கலைச்சுட்டு திமுகவிலே போய் சேர்ந்துக்கோங்க. அதுக்கு பின்னாடி துண்டு சீட்டை தூக்கி வீசிட்டு ஜாலியா பேசலாம் பழகலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். வெயில் அதிகமாயிடுச்சு எல்லாரும் கொஞ்சம் ஓரமா போங்க காத்து வரட்டும்


சமீபத்திய செய்தி