உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விடாது விரட்டும் எதிரிகள் தொல்லை: கேரளாவில் பழனிசாமி வளர்த்த யாகம்

விடாது விரட்டும் எதிரிகள் தொல்லை: கேரளாவில் பழனிசாமி வளர்த்த யாகம்

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம். ஜோதிட கணிப்பில் இவருக்கு தற்போது, 6ல் சனி பகவான் உள்ளது. அதனால், அவருக்கு யோகமே பலன் என, ஜோதிடர்கள் பொதுவாக கூறுகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அவசரமாக கேரளா சென்ற பழனிசாமி அங்கு, வராஹி மற்றும் கால பைரவருக்கு வழிபாடு செய்ததோடு, யாக பூஜையிலும் பங்கேற்றுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jajm4q6p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 இதுகுறித்து, பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்கு முன், 2023 செப்., 27ல், ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா கனகதுர்கா கோவிலில், எதிரிகளை வீழ்த்துவதற்காக சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார் பழனிசாமி. லோக்சபா தேர்தலுக்கு பின்,கடந்த 24ல், சென்னையில், அ.தி.மு.க., மாவட்ட செயலர், தேர்தல் பணி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, தேர்தலில் சில இடங்களில் நிர்வாகிகள் சரிவர பணி செய்யவில்லை என்ற, தன் கோபத்தையும் வெளிப்படுத்தி பேசியுள்ளார்.மறுநாள் சேலம் வந்த பழனிசாமி, இரண்டு நாட்களாக தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து, வெயில் அதிகமாக இருப்பதால், கட்சியினர் யாரும் தன்னை சந்திக்க வர வேண்டாம் என்று சொல்லி விட்டு, வீட்டில் ஓய்வெடுத்தார். நேற்று முன்தினம் காலை, 11:00 மணியளவில், சேலத்தில் இருந்து காரில் கோவை வழியாக, கேரள மாநிலம் வயநாட்டுக்கு சென்றார். அங்கிருக்கும் அம்மன் கோவிலில், வராஹி மற்றும் பைரவர் வழிபாடு நடத்தினார். கூடவே, குறிப்பிட்ட அந்த நாள் தேய்பிறை பஞ்சமி மற்றும் சஷ்டி நாளாக இருந்ததால், இரவு நேரத்தில் நடத்தப்பட்ட யாக பூஜையிலும் பங்கேற்றார். விடாது விரட்டும் எதிரிகள் தொல்லை மற்றும் நோய்கள் நீங்க தேய்பிறை பஞ்சமி நாளில் வழிபாடு செய்வதுடன், யாகம் நடத்தி பூஜையில் பங்கேற்பது நல்லது என்பதால், அதை செய்துள்ளார்.ஜோதிடர்கள் அறிவுரைப்படி நடத்தப்பட்டிருக்கும் யாக பூஜையை கேரள நம்பூதிரிகள் நடத்தி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

kumar
மே 02, 2024 02:12

சிறு பான்மையினரின் ஒட்டுக்க்காக நெத்தில இத்தனை வருஷம் வச்ச திருநிறை அழிச்சு சுத்தினவனுக்கு இப்போதான் இந்து மதம் ஞாபகத்துக்கு வருதா ? இந்த ஒட்டுக்காக மாறும் பச்சோந்திக்கு இருக்கு ஆப்பு இந்து வாக இருப்பதென்பதே சமூகநீதி தான் என்று துணிவோடு சொல்லாத இந்த தொடை நடுங்கி எத்தனை கோவிலுக்கு போனாலும் என்ன


V GOPALAN
மே 01, 2024 21:17

To get minority vote first he will garland Periyar Next he will go to temple for Hindu vote We must kill these people


Jagan (Proud Sangi)
மே 01, 2024 18:28

அரசியல் கத்துக்குட்டிகளை சவுக்கு போன்ற சில்லறைகளை கேட்டு அதிமுகவை ஒரு கவுண்டர் கட்சி என்று சுருக்கி விட்டார் அதிலும் வயதான சிலரே அந்த சமூகத்திலும் இருவருக்கு ஆதரவு இளைஞர்கள் மற்றும் கழங்களினால் சலிப்படைந்த கவுண்டர்கள் கூட இப்ப அண்ணாமலை பக்கம் தான் சாணக்கியன் அல்ல வெறும் வெல்ல மண்டிகாரர் தான் என்று நகர்வுகள் மூலம் நிரூபித்து விட்டார் யார் யார் கிட்ட ஆலோசனை கேட்பது என்று கூட தெரியல இனி பிஜேபி தனி கொடி நாட்டும் வெற்றி பெறும்


GSR
மே 01, 2024 18:23

முன் ஜென்ம பாவம், பித்ரு சாபம், ராகு கேது தோஷம் ஆகியவற்றை ஒரே ஒரு விதமான தியான முறையில் மட்டுமே சாத்தியம்.


enkeyem
மே 01, 2024 15:23

தானம் தர்மம் யாகம் எதுவும் நேர்மையாளர்களை எதுவும் செய்யாது இறுதியில் யார் செய்தார்களோ அவர்களையே பல மடங்கு திருப்பித் தாக்கும்


குமரி குருவி
மே 01, 2024 12:55

எத்தனை யாகம் பண்ணினாலும் துரோகம் துரத்தும்


SP
மே 01, 2024 12:04

எத்தனை பூஜைகள் செய்தாலும் செய்நன்றி கொன்றதற்கு மன்னிப்பே கிடையாது


saravan
மே 01, 2024 11:14

இந்த குப்பையை தூக்கி வெளிய போடுங்க


மோகனசுந்தரம்
மே 01, 2024 09:43

மனம் போல் மாங்கல்யம் என்பது போல் உன்னுடைய எண்ணங்களே உன்னை நசி பிச்சுக்களையும். நீ இந்த உலகத்தில் வாழ்ந்து பயனில்லை.


பேசும் தமிழன்
மே 01, 2024 08:52

எங்கே போனாலும் தேர்தல் முடிந்தவுடன் ...பழனிக்கு ஆப்பு கண்டிப்பாக இருக்கு.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை