உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருக்குறளை 100 மொழிகளில் மொழிபெயர்க்க திட்டம்

திருக்குறளை 100 மொழிகளில் மொழிபெயர்க்க திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருக்குறளை 100 மொழிகளில் மொழி பெயர்க்க, செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தகுதியான நிபுணர்களை தேர்வு செய்ய உள்ளது.சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், சங்க இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள், உரைகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், மொழிபெயர்ப்புகள் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. அந்த வகையில், திருக்குறள் ஏற்கனவே 36 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், 20 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், மேலும் 100 மொழிகளில் மொழி பெயர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிபுணர்களுக்கு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து, செம்மொழி நிறுவன இயக்குனர் சந்திரசேகர் கூறியதாவது:தற்போது, 55 இந்திய மொழிகள், 45 வெளிநாட்டு மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, செய்யுள் வடிவிலோ, உரைநடை வடிவிலோ நேர்த்தியாக, 10 மாதங்களில் மொழிபெயர்க்க வேண்டும். ஒவ்வொரு மொழிக்கும், 1.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.மொழிபெயர்ப்பு திறமையும், தகுதியும் உள்ள வல்லுனர்கள், 'இயக்குனர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழி சாலை, பெரும்பாக்கம், சென்னை - 100' என்ற முகவரிக்கோ, cict.inஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 'www.cict.in' என்ற இணையதளத்தை காணலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Shankar
ஜூன் 25, 2024 19:27

டேய் திருட்டு திராவிட வந்தேறி தமிழர்களே உனக்கு எதுக்கு தமிழ் மொழி பற்று தமிழ் இலக்கண இலக்கியத்தில் எங்காவது தமிழன் பெயர் இருக்கிறதா இவ்வளவு நாட்கள் இல்லாத பொறுப்பு திமுக ஆட்சியில் ஏன் வருகிறது காரணம் திமுக அரசு அடுத்த ஆண்டு கருணாநிதி பிறந்த நாளில் அதாவது ஜூன் 3ல் செம்மொழி நாளாக அறிவிக்க உள்ளது இதுதாண்டா காரியம் உங்க பொறுப்பான முயற்சியில் தமிழ் விளங்கிடும் பாரு


ஆரூர் ரங்
ஜூன் 25, 2024 15:25

எந்த மந்திரிக்கு 1330 குறள்களும் மனப்பாடமாகத் தெரியும்?.நாமே முழுமையாக அறியாத ஒன்றை பிற மொழி மக்களுக்கு அளிப்பதில் என்ன லாபம்? ஆக இது அடுத்த பேக்கேஜ்?


அப்புசாமி
ஜூன் 25, 2024 11:54

மொழி பெயர்த்து டார்ச்சர் குடுக்காதீங்க.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ