உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜய் கட்சிக்கு 2026 தான் இலக்கு: கூறுகிறாார் புஸ்ஸிஆனந்த்

விஜய் கட்சிக்கு 2026 தான் இலக்கு: கூறுகிறாார் புஸ்ஸிஆனந்த்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: ''தமிழக வெற்றிக் கழகத்திற்கு, 2026 தான் இலக்கு. கண்டிப்பாக 2026ல் வெற்றி பெறும்,'' என, புதுக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலர் புஸ்ஸிஆனந்த் தெரிவித்தார்.புதுக்கோட்டையில் நடிகர் விஜயின், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழகத்திலேயே முதன்முதலாக மாவட்ட அலுவலகம் புதுக்கோட்டையில் தான் திறக்கப்படுகிறது. இந்த அலுவலகத்தை கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸிஆனந்த் திறந்தார்.பின், தொண்டர்களிடம் அவர் பேசியதாவது:நடிகர் விஜயின் கட்டளையை நிறைவேற்ற தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும். முதலில் தொழில் நடத்தி சம்பாதிக்க வேண்டும். அதன்பின் குடும்பத்தை கவனிக்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக சம்பாதித்த காசில் 1 சதவீதமோ, 2 சதவீதமோ பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் நடிகர் விஜயின் கட்டளை. அதை ஒவ்வொரு தொண்டனும் நிறைவேற்ற வேண்டும்.நடிகர் விஜய் கூறியபடி, 2026 தான் நமது இலக்கு. 2026ல் கண்டிப்பாக தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும். அதற்கு ஒவ்வொருவரும் அயராது உழைக்க வேண்டும். நாம் யாரையும் விமர்சனம் செய்து பேச வேண்டாம். நம் மக்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். பொதுமக்கள் பிரச்சனையில் முன்னுரிமை கொடுத்து அவருடைய பிரச்சனையை தீர்ப்பதற்கு தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:நடிகர் விஜய் கூறியபடி நாங்கள் மக்கள் பணி செய்கிறோம். நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி சேருவது பற்றி, எங்களுடைய தலைவர் நடிகர் விஜய் தான் அறிவிப்பார். மாநில கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரிப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷன் எழுப்பிய கேள்விக்கு நாங்கள் பதில் கொடுத்துள்ளோம். அதன்படி தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும்.தமிழக வெற்றிக் கழகம் மக்களோடு இணைந்து மக்கள் பணியாற்றி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கூட்டம் வரும் 18ம் தேதி நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அது தவறு. அப்படி ஒரு கூட்டம் நடப்பதாகவே இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

hariharan
ஜூன் 10, 2024 20:35

கோவாலுசாமி வைகோ என்று பெயரை மாற்றினார், அதுமாதிரி ஆனந்த் முன்னாடி வருகிற பெயரை மாற்றினால் நன்றாக இருக்கும்.


Ms Mahadevan Mahadevan
ஜூன் 10, 2024 17:09

.வென்றவர்கள் 30 சதவீத ஓட்டு வாங்கி ஜைப்பார்கள் 70 சதவீத ஓட்டு என்ன பதில் எனவே 25சதவீத ஓட்டு தனித்தனியா நிற்று வாங்க வேண்டும்


kuppusamy India
ஜூன் 10, 2024 13:32

ஜோசப் விஜய் அவர்கள் 2016 ல் கமல் போல் கட்சியை அடமானம் வைத்து தொண்டர்களுக்கு அறிவிப்பு விடுவார்.


venugopal s
ஜூன் 10, 2024 12:35

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று விரைவில் அரசியலை விட்டு விஜய் ஓடி விடுவார்!


இங்கிலீஷ்காரன்
ஜூன் 10, 2024 10:30

புஸ்ஸி ஆனந்தா? பேரே சரியில்லையே?


மோகனசுந்தரம்
ஜூன் 10, 2024 06:01

என்னடா இந்த புசிக்கு வந்த சோதனை.


Rajarajan
ஜூன் 10, 2024 05:00

அடுத்தவங்களுக்கு உபதேசம் எல்லாம் இருக்கட்டும். முதலில் உங்க வாரிசை தமிழ் வழியில், அரசு பள்ளியில் படிக்க வெப்பீங்களா ?? GST பத்தி பேசின நீங்க, மாநில அரசின் GST பங்கை என்ன செய்வீங்க ? விவசாயம், உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து, மின்சாரம், மலை கிராமங்களுக்கு அடிப்படை வசதி இப்படி ஏகத்துக்கும் அடுக்கவேண்டிய விஷயம் நிறைய இருக்கு. இதை தவிர, அரசு பணிகளில் லஞ்சம் இன்றி, விரைவாக எல்லா பொதுமக்களின் சேவைகளையும் எப்படி நிறைவேத்துவீங்க. அரசின் கடன் சுமையை எப்படி விரைவா குறைச்சி காட்டுவீங்க ?? தமிழகத்தின் விலைவாசியை எப்படி கட்டுப்படுத்துவீங்க ?? அரசின் மொத்த வருவாயில் தொண்ணூறு சதவிகிதம் அரசு ஊழியரின் சம்பளம், சலுகை, ஓய்வூதியமா போகறப்ப, அவங்க மேலும் மேலும் கேட்கும் சம்பளம் மற்றும் சலுகையை எப்படி சமாளீப்பீங்க ?? நஷ்டத்தில் இயங்கும் / தேவையற்ற அரசு பொதுத்துறை மற்றும் அரசு துறை நிறுவனங்களை தொடர்ந்து ஏற்று நடத்தி, அந்த நஷ்டத்தை ஈடுசெய்யா, பொது மக்களின் வரிப்பணத்தை உயர்த்திட்டே போவீங்களா ? முதல்ல இதுக்கு எல்லாம் மட்டும் தெளிவா, அக்குவேறு ஆணிவேரையா பதில் சொல்லுங்க. நம்ம அடுத்த ரவுண்டுல சந்திப்போம்.


Bala
ஜூன் 10, 2024 03:42

இனிமேல் எல்லாம் தமிழகத்தில் எந்த சினிமா நடிகனும் தனியாக அரசியலில் வெற்றிபெற முடியாது. ஒன்று 2026 இல் விஜய் கட்சி மண்ணை கவ்வும் அல்லது கட்சியை திமுக அல்லது நாம் தமிழருடன் கமல் செய்ததுபோல் கட்சியையும் தொண்டர்களையும் அடமானம் வைத்துவிடுவார். ஊழல் கஞ்சா டாஸ்மாக்க தீவிரமாக எதிர்ப்பவர்ககளை மட்டுமே இனிவரும் காலங்களில் தமிழக மக்கள் ஆதரிப்பார்கள். தேசியத்தையும் தமிழ்மண்ணின் தெய்வீகத்தையும் போற்றுபவர்களே தமிழக அரசியலில் வெற்றிபெறமுடியும். தமிழகத்தின் கட்டுமானம், வளர்ச்சி மற்றும் விவசாயிகளின், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுதல் போன்றவற்றில் ஒரு தீர்க்கமான கொள்கைகள் இருந்தால் மட்டுமே வருங்காலங்களில் தமிழக மக்கள் ஆதரிப்பார்கள்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ