உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மோசடி அதிகாரிகள் மீது பதிவுத்துறை அதிரடி

மோசடி அதிகாரிகள் மீது பதிவுத்துறை அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பத்திரப்பதிவில் மோசடி செய்யும் சார் -பதிவாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் மீது, 'சஸ்பெண்ட்' உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை, பதிவுத்துறை மீண்டும் துவக்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில், சார் - பதிவாளர்களுக்கு ராசியான ஆவண எழுத்தர்கள் வாயிலாகவே, பதிவு உள்ளிட்ட பணிகள் முடிக்கப்படுகின்றன. இதில், வெளியில் உள்ள தரகர்கள் வாயிலாக, பெரும் தொகை கைமாறுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பதிவுத்துறை அமைச்சர், செயலர், ஐ.ஜி., உள்ளிட்ட அதிகாரிகள், பல்வேறு அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினர். இதில் சிக்கிய, 100க்கும் மேற்பட்ட சார் - பதிவாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது, இடமாற்றம், சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடந்த ஓராண்டாக, இந்த அதிரடி நடவடிக்கை சற்று ஓய்ந்து இருந்தது. தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பின், மீண்டும் அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. லஞ்சம் மற்றும் முறைகேடு புகாரில் சிக்கிய அதிகாரிகள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, கோவை வடக்கு பதிவு மாவட்டத்தில், உதவியாளராக இருந்த என்.ஜெயசுதாவை தற்காலிக பணிநீக்கம் செய்து, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து, பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அறிக்கை அடிப்படையில், மோசடி அதிகாரிகள் குறித்த கோப்புகள் தயாரிக்கப்பட்டு, தலைமையகத்தில் ஆய்வு செய்யப்படுகின்றன. இதில் இடம்பெற்றுள்ள சார் - பதிவாளர்கள், உதவியாளர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கைகள் பாய உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
ஜூன் 10, 2024 20:13

அப்போ நூறு கோடியில் திருமணம் நடத்திய மூர்த்தாவின் கைசுத்தம் ன்னு அர்த்தமா?


sundaran manogaran
ஜூன் 10, 2024 17:17

மோசடி பதிவுகள் அதிகம் நடக்கும் நீலகிரி மாவட்டத்தில் இதுபோன்ற அதிரடி எதுவும் நடப்பதில்லை என்பதற்கு பின்னால் அரசியல் இருக்கும்...


S.kausalya
ஜூன் 10, 2024 16:01

ஒரே ஒரு கேள்வி மட்டுமே எனக்குள் இருக்கிரது. காமராசர் காலம் வரையில் அதிகாரிகள் ஊழல் செய்தார்களா? ஏன் அண்ணா காலத்திலும் கிடையாது. அப்புறம் வந்த ஆட்சியாளர்கள் தானே,தனது கொள்ளையை நியாய படுத்த , கொள்ளையில் அரசு ஊழியர்களையும் சேர்த்து,அவர்களையும் ஊழல் செய்ய வைத்தது யார்?


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 10, 2024 10:56

அருமையான நாடகம் தமிழக அரசால் நடத்தப்படுகிறது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை வீட்டுக்கு அனுப்புவதை விட்டுவிட்டு இடமாற்றம் என்று கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். அரசு ஊழியர்கள் தப்பு செய்தால் நிரந்தர பணிநீக்கம் ஒன்றே சரியான தீர்வு. மற்றதெல்லாம் ஏமாற்று வேலை.


rama adhavan
ஜூன் 10, 2024 17:58

இத் துறைக்கு அரசு நிர்வாகம் தேவை இல்லை. தனியார் வசம் கமிஷன் அடிப்படையில் பாஸ்போர்ட் சேவை போல் விடவும். ஊழல் இருக்காது. செய்வார்களா?


rama adhavan
ஜூன் 10, 2024 04:03

நம்பி விட்டோம் அய்யா. நம்பி விட்டோம்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ