மண் வளமே மனித வளம்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சங்க இலக்கியங்கள் தமிழக நிலத்தை ஐவகையாக வகைப்படுத்தின. அவை குறிஞ்சி, முல்லை மருதம், நெய்தல் மற்றும் பாலை என்பன. மருத நிலத்தை வேளாண்மைக்கு ஏற்ற நிலமாக்கினர். மண்ணின் இயல்புகளை கொண்டு, நிலங்களை மென்புலம், பின்புலம், வன்புலம், உவர்நிலம் என்று வகைப்படுத்தி இருந்தனர்.தமிழகத்தில் 130 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு நிலமுள்ளது. இதில், 63 லட்சம் ஹெக்டேர் நிலம், வேளாண்மைக்கு ஏற்ற மண் வளத்தைப் பெற்றுள்ளது. ஆண்டுக்கு 100 செ.மீ., மழை பொழிகிறது.இம்மழையளவில் ஐந்தில் ஒரு பங்கு நீர், மண்ணால் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீராகிறது. உலக வேளாண்மைக்குரிய அனைத்து மண் வகைகளும் தமிழகத்தில் உள்ளதென்று வேளாண் அறிஞர்கள் உரைக்கின்றனர்.இந்திய மண்ணை அதன் வளத் தன்மையின் அடிப்படையில் எட்டு வகைகளாக பிரிக்கலாம்.அவை வருமாறு:- செம்மண் மணற்பாங்கான மண் மணற்குறு மண் குறு மண் களி மண் கரிசல் மண் செம்புறை மண் வண்டல் மண்/அடை மண்பாறைகளிலிருந்து தோன்றிய மண், பாறைகளின் தன்மைகளிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது. மண் பரிசோதனை மூலம் மண் வளத்தை கண்டறியலாம். தாவரத்திற்கு மண்ணிலிருந்து நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகம், இரும்பு, மாங்கனீசு, போரான், தாமிரம், துத்தநாகம், குளோரின், மாலிப்டினம் போன்றவை சத்துக்களாக கிடைக்கின்றன. மண் பரிசோதனை
தற்போது நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு உணவு தேவையை சமாளிக்க, பயிர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாய தருணத்தில், மண் வளத்தை பாதுகாக்க வேண்டியது நம் தலையாய கடமை.விளை நிலங்களுடைய சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது; மண் வளத்தையும் சரியாக பாதுகாக்காததால் பயிர் மகசூல் குறைந்து வருகிறது. மண் வளத்தை பாதுகாக்க மண் பரிசோதனை செய்து, பரிந்துரைக்கப்பட்ட கனிம உரங்களையும், இயற்கை எருக்களையும் அதிகமாக்க வேண்டிய கட்டாய தருணத்தில் உள்ளோம். மண் பரிசோதனை ஏன்?
உரச் செலவை குறைத்து அதிக மகசூல் பெற, மண்ணில் உள்ள களர், அமிலத்தன்மைகளை அறிந்து தக்க சீர்திருத்தம் செய்ய, தழை உரம், தொழு உரம், ஜிப்சம், சுண்ணாம்பு இவற்றின் அளவை அறிந்து இடவும், மண்ணின் உவர் தன்மைகளை அறிந்து வடிகால் வசதியை பெருக்கவும் மண் பரிசோதனை அவசியம்.உப்பை தாங்கி வளரும் சூரியகாந்தி, பருத்தி, மிளகாய் பயிர்களை சாகுபடி செய்தல்; மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் சத்துக்களின் அளவை அறியவும், பயிர்களுக்கு தேவையான உரமிடும் அளவை அறிந்து உரமிடவும், உரச்செலவை குறைக்கவும், இடும் உரம் பயிருக்கு முழுமையாக கிடைக்கவும், அங்ககச் சத்தின் அளவு அறிந்து நிலத்தின் நிலையான வளத்தை பெருக்கவும், மண்ணின் தன்மைக்கேற்ப பயிரைத் தேர்ந்தெடுக்கவும் மண் பரிசோதனை அவசியம். மண் வளமே மூலதனம்
உலகில் உற்பத்தி செய்யப்படும் 95 சதவீத உணவுக்கு மண் தான் அடிப்படை. ஒரு நாட்டின் மூலதனம் என்பது, அந்நாட்டு விவசாயிகளால் பராமரிக்கப்படும் மண்ணில் தான் இருக்கிறது.உலக அளவில் ரசாயன உரங்களின் பயன்பாடு பல ஆயிரம் மடங்கு அதிகரித்து விட்டது. மண் வளத்தைப் புறக்கணித்துவிட்டு, விளைச்சலில் மட்டுமே கவனம் செலுத்தியதால் தான், சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி, நம் உடல் நலனுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.இந்த மண்ணில் இருந்து எந்த அளவுக்கு சத்தை எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு திரும்ப கொடுக்க வேண்டும். அப்போது தான் பூமியையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்.அரிசியை மட்டும் எடுத்துவிட்டு வைக்கோல், உமி போன்றவற்றை எரிப்பது, சுற்றுச்சூழலுக்கு கேடு தரும். அதை மட்க வைத்து, அதே நிலத்துக்கு உரமாக தர வேண்டும்.சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், தனி மனிதர்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது அவசியம். இவை எல்லாம் ஏற்கனவே இந்தியாவில் நடைமுறையில் இருந்தவை. அவற்றை அறிவியல்பூர்வமாக மேம்படுத்தி, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதும் அவசியம். வானின்று அமையாது ஒழுக்கு
ஒழுக்க நெறி நிற்பதற்கு ஏற்ற உடல் நலம் தேவை. உடல் நலம் பாதுகாப்பதற்கு தட்பவெப்பச் சூழ்நிலை தேவை. உடலின் கருவிகளை சீராக இயக்க, நல்ல சமவிகித உணவு தேவை. இவ்வளவும் அமைந்தால் தான், ஒழுக்கமுள்ள ஒரு சமுதாயம் அமையும். இந்த ஒப்பற்ற சமுதாய அமைப்புக்கு அடிப்படையாக அமைவது மழை. அதனால், 'வானின்று அமையாது ஒழுக்கு' என்றார் திருவள்ளுவர்.நிலம் பசுமை போர்த்ததாக இருக்க வேண்டும். அங்ஙனம் நிலம் பசுமை தாங்கி விளங்குவது நிலத்திற்கும் நல்லது, உயிர் குலத்திற்கும் நல்லது. நிலமகள் பசுமைக்கோலம் பூண்டு விளங்க வேண்டுமானால், வான் நின்று மழை பொழிய வேண்டும்.வான் நின்று மழை பொழியத் தவறி விடுமாயின், நிலத்தில் பசிய புல்லின் தலையைக் கூட காணல் அரிது என்கிறது வள்ளுவம். வளர்ந்த புள் அல்ல; முளைத்தெழும் புல் என்பதை, 'பசும்புல் தலை' என்றார் திருவள்ளுவர். வான் நின்று மழை பொழியத் தவறினால், நிலத்தில் பசும்புல் தலை இல்லை. ஏன்?காற்றினாலோ, தன் போக்கில் தண்ணீர் வேகமாக ஓடுவதாலோ, கால்நடைகள் கண்டபடி மேய்வதாலோ, நிலத்தின் மேற்பரப்பு சமமாக இல்லாமல் மிக அதிகமான மேடு, பள்ளமாக இருப்பதாலோ இந்த மேல்மணற்பரப்பு அழிகிறது. இதை, வேளாண்மைத் துறை விஞ்ஞானிகள் மண்ணரிப்பு என்பர்.இந்த மண்ணரிப்பு வராமல் நிலத்தைப் பாதுகாப்பதற்கு மழை இன்றியமையாதது. தண்ணீரைப் போற்றணும்
நம் நாட்டு வாழ்வியலில் தண்ணீரின் அருமை பலருக்குத் தெரிவதில்லை. நெறிமுறையின்றி தாராளமாகச் செலவு செய்பவர்களை, 'தண்ணீர் மாதிரி செலவு செய்கின்றனர்' என்று சொல்வதுண்டு. ஆனால், உலக வாழ்க்கையில் தண்ணீர் இன்னும் பற்றாக்குறையென்பதை மறந்துவிடக்கூடாது. ஆதலால், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.தண்ணீருக்கு காரணமாக இருக்கிற வான் மழையைப் பெறுவதற்கு முதல் துணையாக இருக்கிற நீர் நிலைகளைப் பேணி, நீரைத் தேக்கி வைக்க வேண்டும். நீர்த்திவலைகள் நிறைந்த மேகத்தை மழையாக மாற்றித் தரும் ஈரப்பதக் காற்றைப் பராமரித்து வர வேண்டும். இதற்கு நிறைய மரங்களை வளர்க்க வேண்டும்.வீட்டிற்கு ஒரு மரம் என்ற செயற்பாடு போதாது. வாழும் ஒவ்வொருவருக்கும், ஆண்டுக்கு ஒரு மரம் என்ற நியதியை ஏற்றுக்கொண்டு மரம் வளர்க்க வேண்டும். மா மழை வழங்கும் தண்ணீரே இந்த உலகம். இளங்கோவடிகளும், 'மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்' என்று வாழ்த்தினார். மண் அரிப்பு தடுப்பு
மண் அரிப்பதிலிருந்து பாதுகாத்தல், களை நிறுத்தம் அல்லது மிகை நீராவியாதல் ஆகிய செயல்பாட்டை மூடு பயிர்கள் செய்கின்றன. எனினும், அவை முக்கிய மண் ரசாயன செயல்பாடுகளையும் செய்யலாம்.எடுத்துக்காட்டாக, அவரையினங்கள் மண் நைட்ரேட்களை வளரச் செய்வதற்காக ஆழமாக உழப்படலாம். மேலும், மற்ற தாவரங்கள் மண்ணிற்கான கெடுதல்களை வளர்சிதை மாற்றம் செய்யும் திறன் அல்லது பாதகமான மாற்றம் செய்யும் திறனை கொண்டிருக்கின்றன.அடர்த்தியான வரிசைகளை போதுமான அளவு நடுவதன் மூலம் அல்லது மரங்களின் வரிசைகளால் காற்றடிக்கும் விவசாய நிலத்திற்கு காற்று அரிப்புக்கான வெளிக்காட்டல் மூலமாக காற்றுத் தடுப்புகள் உருவாக்கப்படுகின்றன.வருடம் முழுமைக்கான பாதுகாப்பிற்கு எப்போதும் பசுமையான வகைகள் விரும்பப்படுகின்றன. இருப்பினும், வறண்ட மண் மேற்பகுதிகளில் இலைகளின் இருப்பு உள்ள வரை, பலன் அளிக்கும் மரங்களும் போதுமானவற்றை அளிக்கின்றன.மரங்கள், குட்டைச் செடிகள் மற்றும் நிலமூடல் ஆகியவையும் மேற்புறப் பரப்பு தடுத்தலை உறுதி செய்யப்படுவதன் மூலமாக, மண் அரிப்பு தடுப்பிற்கான திறன் வாய்ந்த செயல்பாடாக இருக்கின்றன. அமிலத்தன்மை மேலாண்மை
அமிலத்தன்மை பூமியின் விவசாயம் செய்யக்கூடிய மூன்றில் ஒரு பங்கு நிலத்தை பாதிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மண் அமிலத்தன்மை பெரும்பாலான பயிர்களில் வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கிறது. மேலும், மண் அரிப்பு பொதுவாக தாவரத் தோல்விக்கு காரணமாகிறது.அமிலத்தன்மையானது அதிக நீர்ப்பாசனத்தால் வறண்ட நிலங்களிலும், மேலீடான உப்பு நீர் படிமம் உள்ள பகுதிகளிலும் நிகழ்கிறது. மிகை நீர்ப்பாசன நிகழ்வில் உப்புக்கள் மேல்புற மண் படிமங்களில் பெரும்பாலான மண் ஊடுருவலின் துணை விளைவாகும்.மிகை நீர்ப்பாசனம் வெறும் உப்பு படிதலின் விகிதத்தை உயர்த்துகிறது. ஹூயூமிக் அமிலத்தின் பயன்பாடு குறிப்பாக மிகை நீர்ப்பாசனம் நடைமுறையில் உள்ள இடங்களில் மிகை உப்புத்தன்மையைத் தடுக்கும்.அது, உப்பு நீரைத் தாங்கி நிற்கும் தாவரங்களைக் கண்டறியப் பயன்படுகிறது. அதை மேற்புற நீரில் உப்புத்தன்மை குறையும் வரை பயன்படுத்தலாம். மண் நுண்ணுயிரிகள்
மண் வளத்தை பாதுகாப்பதில் பயன் தரும் மண் நுண்ணுயிரிகளை மேம்படுத்தும் சாத்தியம், ஒரு முக்கிய கூறாகும். மேலும் இது பேரளவு உயிரி வகைகளை உள்ளிட்டிருக்கிறது, மண் புழுக்களின் காற்று மற்றும் ஊட்டச்சத்து கிடைப்பது போன்ற சாதகமான விளைவுகள் நன்கறியப்பட்டவை. புழுக்கள் காஸ்ட் வடிவில் எச்சமிடுகையில், கனிமங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மண்ணுக்கு கிடைக்கின்றன.பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் போன்றவை, தாவரங்களை வளர்க்க பயன்படுத்துவதன் மூலம், மண் கனிமங்களின் எதிர்ப்பாற்றல் குறையும். சில நேரங்களில் ரசாயன உபயோகத்தின் எதிர்பார்க்காத அல்லது திட்டமிடப்படாத செயல்கள், மண் கனிமங்களை இறக்கச் செய்துவிடும்.மண் கனிமங்களில் உள்ள நச்சுத்தன்மை மேலும் புவியின் சூழல் நிலைகள் ஆகியவற்றை முழுமையாக புரிந்து கொண்ட பின்பு தான் பூச்சிக்கொல்லிகளை உபயோகிக்க வேண்டும்.மண் அசுத்தப்படுவதை சரி செய்வதற்கான செலவுகள், விவசாயம் சார்ந்த சிக்கன பகுப்பாய்வில் எளிதாக தீர்மானிக்க கூடியவை அல்ல.சுத்தப்படுத்துவதற்கான செலவுகள், மிகவும் அதிகமாக உள்ள போதிலும், மனித நலத்தைக் கருத்தில் கொண்டு, நாடுகள் மற்றும் மாநிலங்களின் சுற்றுச்சூழல் நலக் குழுமங்கள், அடிக்கடி மண் சுத்தப்படுத்தும் பணியைச் செயல்படுத்த வேண்டும்.நிலத்தின் மேற்பரப்பிலுள்ள மண் நிலத்திற்கு இன்றியமையாதது. இந்த மேற்பரப்பு மண் தோன்ற பல்லாயிரம் ஆண்டுகளாகின்றன.இந்த மண் காற்றால் துாசியாகப் பறந்து போய்விடாமல், நிலத்தின் மேலேயே மழைத்துளிகளால் நனைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. நிலத்தின் மேலுள்ள மணற்பரப்பு, மண்ணின் வளத்திற்கு உயிர் நிலையாகும். மண் பரப்பைக் காப்பது நம் கடமை! மண்ணின் மாறுபட்ட தன்மைகளால் ஏற்படும் விளைவுகள்
1 மண்ணில் களர் தன்மை அதிகரித்தால், பயிருக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதனால், பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும்; மகசூல் குறையும்.2 உவர் தன்மை அதிகரித்தாலும், பயிருக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும்; மகசூல் குறையும்.3 தழைச்சத்து, பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. அளவு அதிகமானால், பயிர் அதிகம் வளர்ந்து பூச்சி நோய் தாக்குதலுக்கு உட்படுகிறது; மகசூல் பாதிக்கப்படும்.4 மணிச்சத்து, பயிரில் மணிகள் முதிர்ச்சி அடையவும், வேர் வளர்ச்சிக்கும் உதவுகிறது; அளவு அதிகமானால், பயிருக்கு கிடைக்காமல் மண்ணில் வீணாகிறது.5 சாம்பல் சத்து, பயிரில் பூச்சி நோய்கள் வராமல் காக்கிறது; வறட்சியை தாங்க உதவுகிறது; அளவு அதிகமானால், பயிருக்கு கிடைக்காமல் மண்ணில் வீணாகிறது.பல அறிவியல் சார்ந்த துறைகள் கிராமப் பொருளாதாரம், நீர் சக்தி, மண் அறிவியல், வானிலை ஆய்வு, நுண்ணுயிரியல் மற்றும் சூழல் ரசாயனம் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கின்றன.ஏற்ற பயிர் சுழற்சி, மூடு பயிர்கள் மற்றும் காற்றுத் தடுப்புகள் தொடர்புடைய முடிவுகளானது, மண் அரிப்பு சக்திகள் மற்றும் நுண்ணுாட்டச் சத்து குறைதலின் ரசாயன மாற்றங்கள் ஆகிய இரண்டிலும் மண் அதன் உறுதியை தாங்கி நிற்கும் திறனுக்கு மையமாக இருக்கிறது. பயிர் சுழற்சி என்பது குறிப்பிட்ட நிலத்தில் எளிமையாக மரபு ரீதியிலான பயிர் மாற்றாக இருக்கிறது. வானை இடமாகக் கொண்டு நீர்த்துளிகள் மழையாகப் பொழிவதால் வான் சிறப்பு எனப் பெற்றது. வான் சிறப்பு என்று கூறினாலும், வானின் பயனாக இருக்கின்ற தண்ணீர் என்றே கொள்ள வேண்டும். தண்ணீரின்றி உலக இயக்கமில்லை; உயிர் வாழ்வன இல்லை. அதனால் திருவள்ளுவர், 'நீரின்றியமையாது உலகு' என்றார்.உலகின் அனைத்து பொருட்களிலும் நீர் கலந்திருக்கிறது. நீர் கலவாத, நீர் இல்லாத இடமில்லை. தண்ணீர் ஊடுருவி நிற்காத பொருளுமில்லை. நம் மானிட உடம்பில் 70 சதவீதம் தண்ணீர் இருக்கிறது.இந்தத் தண்ணீர் உயிர்நிலை வாழ்வுக்கு இன்றியமையாதது. அதுமட்டுமல்ல; பூமண்டலத்தில் தட்பவெப்ப நிலைகளைப் பாதுகாக்கவும் தண்ணீர் பயன்படுகிறது. தண்ணீர் உணவாகவும், பிற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் சாதனமாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும், அழுக்குகளை நீக்கி துாய்மை செய்வதற்கு தண்ணீரே பயன்படுகிறது.