உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஸ்டாலின் ஆட்சியே காமராஜர் ஆட்சி : செல்வப்பெருந்தகைக்கு இளங்கோவன் பதிலடி

ஸ்டாலின் ஆட்சியே காமராஜர் ஆட்சி : செல்வப்பெருந்தகைக்கு இளங்கோவன் பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சமீபத்தில், திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், 'எவ்வளவு காலம் தான் இன்னொரு கட்சியிடம், எங்களுக்கு தொகுதிகள் கொடுங்கள் என, கையேந்தி நிற்பது? ஒரு காலத்தில், நாம் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை பங்கிட்டு கொடுத்தோம். அந்த நிலையை மீண்டும் ஏற்படுத்த, காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும்' என்றார்.அவரது பேச்சால், தி.மு.க., மேலிடம் அதிருப்தி அடைந்தது. தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'ராகுல் என்ற மனிதனுக்காக, அவர் குடும்பத்திற்காக, ஸ்டாலின் மிகவும் பெருந்தன்மையோடு நடந்து கொள்கிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zdphpd89&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்தியில் ஆட்சி அமையாவிட்டாலும், தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது. ஆனால், காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்கவில்லை என்றால், உங்களுக்கே தெரியும் என்னவாகும் என்று' என, பதிவிட்டிருந்தார்.இந்நிலையில், செல்வப்பெருந்தகையின் பேச்சுக்கு எதிராக, 'ஸ்டாலின் ஆட்சியே காமராஜர் ஆட்சி தான்' என்று பேசி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன், தி.மு.க.,வை குளிர வைத்துள்ளார்.ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் இளங்கோவன் பேசியதாவது:என்னை பொறுத்தவரையில் தொண்டர்களுக்கு மனவருத்தம் இருந்தாலும்கூட, ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சி என, சொல்வதில் சிறிதும் தயக்கம் கிடையாது.தேர்தலுக்கு முன் காமராஜர் ஆட்சி பற்றி நாம் பேசியிருக்க முடியாது; பேசவும் கூடாது. நல்லவேளை, தேர்தல் முடிந்த பின் பேசினோம். யார் நல்லாட்சி தந்தாலும், அது காமராஜர் ஆட்சிதான்.ஸ்டாலின் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார். அவரை முழு மனதோடு பாராட்டுகிறேன். ஆட்சிக்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் வைக்கலாம். காமராஜர் ஆட்சி என, பெயர் வைக்கலாம்; திராவிட மாடல் ஆட்சி என்றும் பெயர் வைக்கலாம். கக்கனின் நேர்மையையும் சொல்லலாம். நல்லாட்சி நடத்துகிறவர்களுக்கு, நாம் துணை நிற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதுபற்றி, செல்வப்பெருந்தகை கூறியதாவது:காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இருக்கிறது. அதற்கான முயற்சி எடுப்பதற்கு எங்களுக்கு எல்லா தகுதியும் இருக்கிறது. காமராஜர் கண்ட கனவை ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். அதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நல்லாட்சி நடக்கிறது. சட்டசபையில் பலமுறை பாராட்டி பேசியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

P.Sekaran
மே 24, 2024 16:55

இன்றைய காங்கிரசார் காமராஜ் பெயரையும் கக்கன் பெயரையும் சொல்ல லாயக்கற்றவர்கள். உண்மையான காங்கிரஸார் இல்லை. உண்மையான காங்கிரசார் இப்பொழுது காங்கிரஸ் கட்சியில் இல்லை. பணத்திற்காக ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் தான் உள்ளனர்.உண்மையான காங்கிரஸ் விசுவாசிகள் காங்கிரஸ் கட்சியில் இல்லை


s sambath kumar
மே 20, 2024 15:58

காமராஜரை இப்படியா இழிவு படுத்துவது?


shyamnats
மே 19, 2024 13:05

அக்னி நட்சத்திர பாதிப்பில், தமிழக கான் கிராஸார் இவர்கள் எப்போது திருந்தி, மக்களிடம் தங்கள் இருப்பை காண்பிக்க போகிறார்கள்? நடப்பு ஆட்சியை பற்றி தெரியாத மாதிரி நடிப்பு வேறு மொத்தத்தில் காமராஜரை கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்


vijay
மே 19, 2024 09:49

ஸ்டாப்களின் ஆட்சிதான் காமராஜர் ஆட்சி என்றால் ராகுல் சாரிடம் சொல்லிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை கலைச்சிட்டு போயி திமுகவில் சேருங்க இம்புட்டு சோற்றுக்கு எப்படி எல்லாம் அடிமை வேலை பார்க்க வேண்டிருக்கு


R SRINIVASAN
மே 19, 2024 07:55

தயவு செய்து காமராஜர், ராஜாஜி ,கக்கன்ஜி மத்ரும் பழைய காங்கிரெஸ்க்காரர்களின் பெயர்களை இன்றய காங்கிரெஸ்க்காரர்கள் யாரும் சொல்ல வேண்டாம் -ல் திமுகவுடன் இந்திராகாந்தி காங்கிரஸ் சேர்ந்து காமராஜரை தோற்கடித்தவர்கள்இந்த தேசத்தை நாசமாக்கின நேரு இந்திராகாந்தி காங்கிரெஸ்க்காரர்கள் வருடம் ஆட்சி செய்து ஜாதி மதத்தை அடிப்படையாக வைத்து இந்த நாட்டை சுடுகாடாக்கி விட்டார்கள்எல்லா இடத்தையும் பிராம்மணர்கள் என்ற மாயையை உருவாக்கி அழித்து விட்டார்கள் இன்றய நிலை என்ன? ENGINNERING கல்லூரிகளில் % பாஸ் கர்நாடகாவில் எஸ் எஸ் ல் சி பாஸ்% % உடனே எல்லா மாணவர்களுக்கும் இலவசமாக மார்க்குகளை அள்ளிக்கொடுத்து பாஸ்%% என்று காண்பித்து விட்டார்கள் மக்களை திசை திருப்ப ப்ரெஜிவால் ரேவண்ணாவின் கதை கையில் எடுத்து விட்டார்கள் சித்தராமையா தேவகௌடா கட்சியிலிருந்து காங்கிரஸ்கு தாவினவர் அவருக்கு ரேவண்ணாவின் கதை தெரியாமலாயிருக்கும் D K சிவகுமாரை முதல்வராக நியமத்திருந்தால் காங்கிரஸின் கெளரவம் KAPPATHRAPATTIRUKKUM


S Parthasarathy
மே 18, 2024 21:10

நல்லவர், சிறந்த நிர்வாகி, ஏழை பங்காளன், தேசியவாதி அவர் பெயரை உச்சரிக்க காங்கிரஸ்காரர்களுக்கு தகுதி இல்லை அவர் இடத்தை நிரப்ப இதுவரை தமிழக அரசியலில் யாரும் வரவில்லை


VENKATASUBRAMANIAN
மே 18, 2024 21:08

பதவி பணம் பேசுகிறது


Sivakuamar Panneerselvam
மே 18, 2024 20:26

இந்த கொசுங்க தொல்லை தாங்க முடியவில்லை.


lana
மே 18, 2024 17:29

அவர் பெயர் செல்வ பெருந் தொகை. பேர் சொன்னா போதும் தரம் எளிதில் விளங்கும்


lana
மே 18, 2024 17:27

எனக்கு இந்தியன் திரைப்படம் காமெடி நினைவுக்கு வருகிறது. இங்க chandru ன்னு ஒரு மானஸ்தன் இருந்தான். அவன் எங்க ன்னு தேடுகிறேன்


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி