உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காங்., மேலிடம் எச்சரிக்கையால் அடக்கி வாசித்த தமிழக கோஷ்டிகள்

காங்., மேலிடம் எச்சரிக்கையால் அடக்கி வாசித்த தமிழக கோஷ்டிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் காங்., கோஷ்டி தலைவர்கள், 'ஆட்சியில்பங்கு, தனித்துப் போட்டி' என்றெல்லாம் பேசாமல் அடக்கி வாசித்ததற்கு, மேலிடத்தின் கண்டிப்பே காரணம் என கூறப்படுகிறது.லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் 10ல் போட்டியிட்டு, அனைத்திலும் வெற்றி பெற்றது. பங்கு வேண்டும்'இந்த வெற்றிக்கு, தி.மு.க., தான் காரணம்' என, ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.,வான இளங்கோவன் உட்பட காங்.,கில் இருக்கும் பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில், சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரமோ, 'ஆட்சியில் பங்கு வேண்டும்; தி.மு.க., அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும்' என்று பேசினர்.ஒரு சிலர், 'தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும்' என்று பேசி, கூட்டணியில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தினர்.அவரது பேச்சுக்கு கடும் எதிப்பு தெரிவித்த இளங்கோவன், 'முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் நடப்பதே காமராஜர் ஆட்சிதான்' என்றார். இதையடுத்து, கார்த்தி ஆதரவாளர்களும், இளங்கோவன் ஆதரவாளர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.கார்த்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு, முன்னாள் மாநில தலைவர் அழகிரி ஆதரவாளர்கள் கட்சி மேலிடத்தில் புகார் அளித்தனர்.தி.மு.க., தரப்பிலும், டில்லி காங்., மேலிடத்தில், தமிழக காங்கிரசாரின் பேச்சு குறித்து புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து, 'தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும், இனி கூட்டணி குறித்தும், ஆட்சியில் பங்கு குறித்தும் பேசக் கூடாது' என, டில்லி மேலிடம் கட்சியின் தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார் வாயிலாக கண்டித்துள்ளது.தவிர்ப்புஇந்நிலையில், தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்தழகன் தலைமையில், காமராஜர் பிறந்த நாள் விழா தி.நகரில் நடந்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். ஆனால், ஆட்சியில்பங்கு, தனித்துப் போட்டியிடலாம் என்ற கருத்துகளை சமீப காலமாக முழங்கி வந்த கட்சி நிர்வாகிகள் பலரும், இக்கூட்டத்தில் பேசினர். ஆனால், தாங்கள் ஏற்கனவே வலியுறுத்திய எந்தக் கருத்தையும் பேசாமல் தவிர்த்து விட்டனர்.மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், “யார் வேண்டுமானாலும் காமராஜரை கொண்டாடலாம்; ஆனால், அவரை சொந்தம் கொண்டாடும் உரிமை காங்கிரசுக்கு மட்டும் தான் உள்ளது,” என்று பொத்தாம் பொதுவாக பேசி அமர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RAAJ68
ஆக 02, 2024 14:05

இதே இளங்கோவன் கருணாநிதி ஆட்சி காலத்தில் கூட்டணியில் இருந்த போது மந்திரி சபையில் பங்கு வேண்டும் என்று கொடி பிடித்தவர் தான் அதற்காக கருணாநிதியிடம் சரளமாக அசிங்கமாக திட்டு வாங்கியதை அவர் மறந்தாலும் நாங்கள் மறக்க மாட்டோம். 50 வருடங்களாக நடந்து வரும் எல்லா அரசியல் நிகழ்வுகளும் நினைவில் உள்ளன .


Prabakaran SS
ஆக 02, 2024 13:57

ஈரோடு கிழக்கு தொகுதியில் பல கோடி ரூபாய் செலவு செய்து வெற்றி பெற வைத்ததற்கு இது என்ன இதற்கு மேலும் பேசுவார். ஆனால் ஒன்று காமராஜரை இதை விட யாரும் கேவலப்படுத்த முடியாது.


Swaminathan L
ஆக 02, 2024 13:15

எதுக்கு வம்பு? காமராஜரைத் தவிர்த்து வேறாவது பேசலாமே? இல்லாவிட்டால், தேர்தலே காமராஜர் தேர்தல், கூட்டணியும் காமராஜர் கூட்டணி, ஆட்சியும் காமராஜர் ஆட்சி, அவ்வளவு ஏன், ஜனங்கள் ஒவ்வொருவரும் காமராஜரே என்று கூடப் பேசலாமே?


Palanisamy T
ஆக 02, 2024 11:17

அன்று கர்நாடகாவுக்கு சாதகமாக நின்று காவேரி ஆற்றில் வலுக் கட்டாயமாக அணைக் கட்ட அனுமதித்தீர்கள். கச்சத் தீவை யாருக்கோ தாரை வார்த்துக் கொடுத்தீர்கள் . இன்று பூர்வீக இலங்கை தமிழர்களை அனாதையாக்கினீர்கள். என்றோ பிஹார் இந்தியாவிலிருந்து குடியேறிவனுக்கு மட்டும் ஆதரவாக நின்கிறீர்கள். இன்று தமிழக மீனவர்கள் பாதுகாப்பின்றி பயத்தோடு கடலுக்குச் செல்லுகின்றாரகள் அவர்களுக்கு பாதுகாப்பில்லை .உங்களுக்கு ஆட்சியில் பங்கா? இனி எந்த நல்ல தமிழனும் உங்களை நம்பமாட்டான். உங்கள் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் தூக்கி யெறிந்துவிட்டேன்


VENKATASUBRAMANIAN
ஆக 02, 2024 07:43

இப்போது உள்ள காங்கிரஸ் ஏ ஒரிஜினல் இல்லை. இது இந்திரா காங்கிரஸ். இவர்கள் காமராஜருக்கு எதிரானவர்கள். இது செல்வப் பெருந்தகை க்கு தெரியாது.


A Viswanathan
ஆக 02, 2024 10:40

இளங்கோவன், அழகிரிக்கு காமராஜர் பெயரை சொல்வதற்கு அருகதை அற்றவர்கள். இப்போது நடைபெறுவது காமராஜர் ஆட்சிதான் என்றசொல்வது என்னை போன்றவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.இவரை போன்றவர்கள் உள்ளவரை காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணிதான்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ