உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கனடாவை தொடர்ந்து பிரிட்டனிலும் காலை உணவு திட்டம் துவக்கம்!

கனடாவை தொடர்ந்து பிரிட்டனிலும் காலை உணவு திட்டம் துவக்கம்!

சென்னை: கனடாவை தொடர்ந்து பிரிட்டனிலும், அடுத்த மாதம் துவக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவங்க உள்ளதாக, தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் எண்ணியபடி, தமிழகம் இந்தியாவில் சிறந்த மாநிலம் என, புகழ் படைத்துள்ளது. இதனை பத்திரிகைகள், ஊடகங்கள் மட்டுமின்றி, மத்திய அரசின் துறைகளும் பாராட்டுகின்றன. மத்திய நிதி அமைச்சர், ஜன., 31ல் பார்லிமென்டில் அளித்த பொருளாதார அறிக்கையும் பாராட்டியுள்ளது. முதல்வரின் காலை உணவு திட்டத்தின் சிறப்புகளை கேட்ட தெலுங்கானா மாநில அதிகாரிகள், சென்னை வந்து திட்ட செயலாக்க முறைகளை பார்வையிட்டு பாராட்டினர். இந்த திட்டத்தை தங்கள் மாநிலத்திலும் செயல்படுத்தினர்.நாட்டின் பல மாநிலங்களும், இத்திட்டத்தை ஏற்று செயல்படுத்துகின்றன. இந்தியாவை கடந்து, இந்த திட்டம் கனடா அரசால் பாராட்டப்பட்டு, அங்கும் செயல்படுத்தப்படுகிறது. பிரிட்டனிலும் அடுத்த மாதம் துவக்கப் பள்ளிகளில், காலை உணவு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.இத்திட்டம் மட்டுமல்லாமல், மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தையும், புதுச்சேரி, கர்நாடகா, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் பின்பற்ற முனைந்துள்ளன. சமீபத்தில் நடந்த டில்லி சட்டசபை தேர்தலின் போது, 'பா.ஜ., ஆட்சி அமைத்ததும், மகளிருக்கு மாதம், 2,500 ரூபாய் வழங்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை, முதல்வரின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை போற்றி புகழ்ந்துள்ளது. இப்படி முதல்வரின் சிந்தையில் பூத்த திட்டங்கள் தமிழகம் மட்டுமல்லாமல், உலகம் எங்கும் மணம் பரப்பி, முதல்வருக்கு புகழ் குவிக்கின்றன. தி.மு.க., அரசு செயல்படுத்தி வரும் தொலைநோக்கு திட்டங்களால், வறுமை ஒழிப்பில் தமிழகம் நாட்டிலேயே முதலிடம் பெற்று திகழ்வதாக, மத்திய அரசின், 'நிடி ஆயோக்' அறிக்கையில் பாராட்டப்பட்டு உள்ளது. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசில்லாத எரிசக்தி போன்றவற்றில், தேசிய அளவில் தமிழகம் முதல் மாநிலமாக உயர்ந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் வளர்ச்சி குறித்த ஆய்வேட்டில், மனித வளங்களை வளர்ப்பதில், மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை விட, தமிழகம் முன்னேற்றம் கண்டு, முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.துணிகள் ஏற்றுமதியிலும் தமிழகம், நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளதாக, மத்திய அரசின் நிர்யாத் நிறுவனத்தின், 2022 - 23 ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் பாராட்டப்பட்டு உள்ளது. புதுமைப்பெண்கள் திட்டத்தால், கல்லுாரிகளில் சேரும் மாணவியர் எண்ணிக்கை, 34 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ் புதல்வன் திட்டத்தால், கல்லுாரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Ethiraj
மார் 02, 2025 18:04

In USA it is there for several decades. Transport ,tution fees also free there


sankar
மார் 01, 2025 21:53

யுனஸ்கோ அவார்டு?


Ram pollachi
மார் 01, 2025 14:50

அன்றைய காலகட்டத்தில் புத்தக பையில் ஒரு தட்டு, ஒரு டம்ளர் அனைவரிடமும் இருக்கும். பாடம் நடத்த நடத்த அந்த அரிசி பருப்பு சாப்பாட்டு வாசம் சாப்பிட அழைக்கும்... சாம்பார் சாதம் ரசம் சாதம் சத்துமாவு உருண்டை மற்றும் இலவசமாக கொடுக்கும் அரைக்கால் சட்டை டாயர், காலணி இதை எல்லாம் அப்பா, அண்ணன் தம்பி யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம்... இது தவிர நோட்டு புத்தகம் எழுது பொருள் எல்லாமே கொடுத்தார்கள்... நாம் படித்தால் போதும், கழிப்பறை கிடையாது, குடிநீர் தொட்டி பாசம் பிடித்து இருக்கும் தேர்வு விடுமுறை முடிந்து வகுப்புக்கு சென்றால் கழுதை, நாய் எல்லாம் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கும். இதை எல்லாம் கடந்து வந்த நமக்கு இன்றைய பள்ளிகளின் நிலையை பார்க்கையில் ஆச்சரியம் இல்லை.


ரதி
மார் 01, 2025 14:12

பார்த்து தமிழக திராவிட மாடல் அரசே! தமிழக கல்வி அமைச்சரின் சொந்த தொகுதியில் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள் போல் கனடாவில் இங்கிலாந்தில் மரத்தடி பள்ளி வைப்பார்களா


vijai hindu
மார் 01, 2025 13:47

காலை உணவு கொடுக்கிறதுல கூட உங்க கட்சிக்காரங்க கமிஷன் அடிக்கிறாங்க அதுக்காக சந்தோஷப்படுங்கள் சந்தோஷப்படுங்க


ஆரூர் ரங்
மார் 01, 2025 13:00

திருவாடானை அரசுப் பள்ளியில் அரசு கழிப்பிடம் கட்டாமல் இழுத்தடித்ததால் தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் கக்கூஸ் கட்டியுள்ளார். இதெல்லாம் கூட விடியல் சாதனைதான் ன்னு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வார்..


ஆரூர் ரங்
மார் 01, 2025 11:24

அங்கெல்லாம் பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுவதில்லை. கழிப்பறையில் பள்ளி மாணவிகள் பிரசவம் பார்த்துக் கொள்வதில்லை. முக்கியமாக பள்ளியை மாணவர்களே சுத்தம் செய்து தூய்மையாக வைத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலானவர்கள் பள்ளிப்படிப்பை முடிந்தவுடனே எதாவது வேலைக்குப் போய் சொந்த காலில் நிற்கிறார்கள். முக்கியமாக பள்ளிகளின் செயல்பாட்டில் வட்ட மாவட்டங்கள் தலையிடுவதில்லை.


Keshavan.J
மார் 01, 2025 11:10

எல்லாவற்றிக்கும் ஸ்டிக்கர் ஓட்டுவதுற்கு இவர்களிடம் கற்று கொள்ள வேண்டும்.


Shekar
மார் 01, 2025 10:20

தமிழகத்தில் தினமும் சிறுமிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கும் செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் தினமும் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் தமிழக அரசு பெருமிதம் என்று வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை


Shekar
மார் 01, 2025 10:15

கனடா, யூகே எல்லாம் காலை உணவு என்ன, 3 வேலை உணவும் தருவான். கட்டணத்தில் எல்லாம் கறந்து விடுவான். இங்கே போல தினம் உப்புமா போடமாட்டான். 5 ஸ்டார் ரேஞ்சுக்கு தருவான். அதையும் இதையும் ஒப்பிடுவது மூளையற்ற செயல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை