உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சிறார் குற்றங்களில் தமிழகம் நான்காமிடம்; ஆட்டிப்படைக்கும் போதைப்பொருட்கள்

சிறார் குற்றங்களில் தமிழகம் நான்காமிடம்; ஆட்டிப்படைக்கும் போதைப்பொருட்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ''சிறார் குற்றங்களில், தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது,'' என, தமிழ்நாடு மனநல மருத்துவ சங்கத்தின், முன்னாள் மாநில தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

நம் நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில், 18 வயதுக்கு உட்பட்டோர், 33 சவீதம் பேர் உள்ளனர். இவர்களில், 6 -7 சதவீதம் பேர், குற்றங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களில், ஆண்கள், 80; பெண்கள், 20 சவீதம் பேர் என்ற வகையில் உள்ளனர். சிறார் குற்றங்களில், மேற்கு வங்கம், உ.பி., பீஹாருக்கு அடுத்த நிலையில் தமிழகம் உள்ளது.தமிழகத்தில், 16.4 சதவீத இளம் வயதினர் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தென்மாநிலங்களில் நடக்கும் சிறார் குற்றங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, சிறார்களிடம், வன்முறை, போதைப்பழக்கம், பெரும் பிரச்னையாக உருவெடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. ஒரு லட்சம் சிறார்களில், 17 சதவீதம் பேருக்கு, எளிதில் கோபப்படுதல், உடல் ரீதியாக தாக்கும் குணம் உள்ளது. மேலும், 44 சதவீதம் பேருக்கு, பிறரை கோபப்படுத்தும் வகையில் திட்டுவது உள்ளிட்ட பழக்கம் இருக்கிறது; 15 சதவீதம் பேருக்கு, பாலியல் ரீதியான தவறான எண்ணங்கள் உள்ளன. அத்துடன், சிறார்களில், 14 - 18 வயதுக்கு உட்பட்டோரில், 50 சதவீதம் பேர், ஒரு முறையேனும் போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளனர் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மன நல சிகிச்சைக்கு வருவோரை கண்காணித்ததில், போதைப்பழக்கம் சிறார்களை ஆட்டிப்படைப்பது தெரிய வருகிறது. சிறார்கள் முன் பெற்றோர் சண்டையிடுவது, மது, புகைப் பழக்கம், கூடா நட்பு, வசிப்பிட சூழல் உள்ளிட்ட காரணங்களால், சிறார்கள் வழி மாறக்கூடும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், சிறார்களின் நடவடிக்கைகள் குறித்து, கூர்ந்து கவனிக்க வேண்டும். இதற்காக நாங்களும் அவர்களுக்கு பயற்சி அளித்து வருகிறோம். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
மார் 11, 2025 13:08

கவலைப்படாதீர்கள். திமுக ஆட்சி முடிவதற்குள் தமிழகம் முதலிடத்தை கண்டிப்பாக பிடித்துவிடும்.


theruvasagan
மார் 11, 2025 10:44

நாலாவது இடம் என்கிற நிலைமை கவலையளிக்கிறது. கடுமையாக உழைத்துக் கொண்டுதானிருக்கிறோம். சீக்கிரமே இதிலேயும் நமபர் ஒன் மாநிலமாக மாற்றிவிடுவோம். அவசரப்படாமல் கொஞ்சநாள் பொறுமை காக்கவும்.


orange தமிழன்
மார் 11, 2025 08:06

இது மிகவும் கவலை தரக்கூடிய செய்தி......அரசு என்ன நடவடிக்கை மற்றும் ஆலோசனை கூறினாலும் மக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்......முதல்வர் அவர்கள் போதை ஒழிப்பு விளம்பரம் மட்டும் செய்தால் போதாது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.....


अप्पावी
மார் 11, 2025 06:40

பொறுமையா இருங்கோ. உ.பி யை குணப்படுத்திட்டு, தமிழகம் வர்ரோம். இல்லே அங்கே தகராறு செய்யும் சிறார்களை தமிழகத்துக்கு விரட்டி விட்டு தமிழகத்தை நம்பர் ஒன் ஆக்கிடறோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை