உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடலால் ஒடிசாவுக்கு சென்ற தமிழகத்தின் வாய்ப்பு

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடலால் ஒடிசாவுக்கு சென்ற தமிழகத்தின் வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது, தமிழக தொழில் துறையில், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.துாத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை, கடந்த 2018ல் ஆண்டு மூடப்பட்டது. அந்த ஆண்டு மே 22ல், ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில், 13 பேர் இறந்தனர்.துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் தாமாக முன்வந்து எடுத்து விசாரிக்கப்பட்ட வழக்கு, அதே ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது, 'அப்பாவி பொதுமக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்காக எந்த அதிகாரியும் இதுவரை வருந்தவில்லை. அதிகாரிகள் மீது கொலை வழக்கு ஏன் தொடரக் கூடாது; துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்; இத்தனை உயிர்கள் பறிபோனதற்கு பொறுப்பேற்று கொள்ளப்போவது யார்?' என, நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினர்.'இத்தனை ஆண்டுகளாக சி.பி.ஐ., விசாரணை நடந்தும், இந்த வழக்கில் பலன் இல்லாமல் உள்ளது. சி.பி.ஐ., விசாரணை சரியில்லை. ஒரு நபர் ஆணையம் அமைத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் பின்புலம் என்ன என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்.'இந்த வழக்கை பொறுத்தவரை, அந்த காலகட்டத்தில் சில நபர்கள் வழியே, அரசு அதிகாரிகள் குறிப்பாக காவல்துறை சார்ந்த அதிகாரிகளின் சொத்துக்கள் மதிப்பு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க வேண்டும். அவர்களுடைய சொத்து பட்டியலை எடுக்க வேண்டும். அந்த விவரங்களை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம், துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, அதிகார மட்டத்தில் ஏற்பட்ட குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டியுள்ளது. நீதிபதிகளோ, ஒரு நபர் ஆணையமோ, துாத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை குறித்து, எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.அதேநேரம், தாமிர உருக்கு ஆலை மூடப்பட்டதால், தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மின்சார வாகனங்களின் மோட்டார்கள் மற்றும் இதர பாகங்களின் உற்பத்தியில், தாமிரம் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் தாமிரம் உற்பத்தி செய்த, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், வேறு சில நிறுவனங்களும் தமிழகத்துக்கு வருவதை தவிர்த்து, வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன.உதாரணமாக, தமிழகத்தில் மின்சார பேட்டரிகள் உற்பத்தி மையத்தை நிறுவ திட்டமிட்டிருந்த ஜே.எஸ்.டபிள்யூ., குழுமம், ஒடிசா மாநிலத்திற்கு சென்று விட்டது. அங்கு, 40,000 கோடி ரூபாயில், மின்சார பேட்டரி ஆலை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இதன் வழியே, பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு, அந்த மாநிலத்தின் பொருளாதாரத்துக்கு பெரிய அளவில் பங்களிப்பு செய்யப் போகிறது; இது தமிழகத்திற்கு பேரிழப்பு.ஏற்கனவே, ஸ்டெர்லைட் ஆலை மூடலால், சிறு, நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தாமிர உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஆண்டுக்கு, 3,000 கோடி ரூபாய், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதோடு, தொழில் நிறுவனங்களும் தமிழகத்திற்கு வர தயங்குவதாலும், மாநிலத்தில் வளர்ச்சியும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.இவ்விவகாரத்தை தமிழக அரசு கூர்ந்து கவனித்து, பாதகங்களைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

SUBBIAH RAMASAMY
ஜூலை 21, 2024 19:04

இந்திய கம்யூனிஸ்ட்கள் சீனாவின் தூண்டுதல் பேரில் இந்திய பொருளா தாரத்திற்கு கணிசமான அளவிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதை இன்னும் உணராத தமிழ் மக்கள்....எப்பொதான் நாட்டின் இழப்பை உணர போகிறார்களோ


venugopal s
ஜூலை 19, 2024 18:19

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் தூத்துக்குடி மற்றும் தமிழக மக்களுக்கு எந்த விதமான பாதிப்போ நஷ்டமோ கிடையாது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஹைட்ரஜன் மற்றும் வின்ஃபாஸ்ட் கம்பெனிகள் மூலம் ஒரு லட்சம் கோடிக்கு மேல் புதிய முதலீடுகள் வந்துள்ளன. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த ஸ்டெர்லைட் உருட்டலையே உருட்டிக் கொண்டு இருக்கப் போகிறீர்கள்? இல்லை இதுபோல் எத்தனை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன?


lana
ஜூலை 19, 2024 23:29

என்ன வேணு sir 200 க்கு பதிலாக 2000 ஆக கொடுத்து விட்டார்கள் ஆ. 1 லட்சம் கோடி அப்படி ன்னு அடிச்சு விடுறீங்க. 1 லட்சம் கோடி க்கு எத்தனை பூஜ்யம் ன்னு தெரியுமா


Krishna R
ஜூலை 19, 2024 17:42

தமிழக மக்களின் வரிப்பணத்தில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதி,தூத்துக்குடி மக்களுக்கு இந்த ஸ்டெர்லைட் கூப்பர் ஆலையால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து கவலை இல்லை, நான் தனிப்பட்ட முறையில் எனது நண்பர்கள் வீட்டில் 2 மாதங்கள் தங்கியிருந்தேன். அமில மழை மற்றும் அசுத்தமான நிலத்தடி நீர் யார் கவலைப்படுகிறார்கள்? தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு ஸ்டெர்லைட் பணம் வழங்கியது இப்போது தமிழகத்தின் பொருளாதாரத்திற்கு பெரிய இழப்பு அல்ல?????┇


Rangarajan Cv
ஜூலை 19, 2024 14:53

We (TN) should be responsible for this situation. CM travelled twice abroad to attract investments. Nothing significant happened


Ramesh s
ஜூலை 19, 2024 13:36

சீனா முதலிய வியாபார நோக்கிலான அன்னிய சக்தி உள்ளூர் அரசியல் கட்சிகள் மற்றும் மத போதகர்களின் தூண்டுதலால் அப்பாவி மக்கள் பலி. அவர்கள் நோக்கம் அந்த பகுதி முன்னேற்றம் கண்டால் தங்கள் பிடி போய் விடும் என்ற சுயநலம். தமிழகம் மற்றும் இந்தியாவுக்கு பேரிழப்பு. அதனால் என்ன. இவர்கள் பை நிரம்பியது.


karthick ns
ஜூலை 19, 2024 13:57

கரெக்ட் கரெக்ட்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 19, 2024 10:36

தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலை மூடப்படுவதற்கு முன்னுதாரணமாக கோவையில் செளத் இண்டியா விஸ்கோஸ் ஆலை மூடல். கோவை பஞ்சாலைகளுக்கு காலத்திற்கு தகுந்தாற்போல் போல் ஊக்குவிப்பு திட்டம் வழங்காமல் மூடப்பட்டது ஆகியவை திராவிட மாடல்.


ஆரூர் ரங்
ஜூலை 19, 2024 10:31

பொய்யாக கேன்சர் பயத்தை உருவாக்கிய ஆட்களின் மீது தேசப் பாதுகாப்பு சட்டம் பாய வேண்டும்.


lana
ஜூலை 19, 2024 07:02

எங்களுக்கு அதை பற்றி கவலை இல்லை. எங்களுக்கு தேவை குவாட்டர் கோழி பிரியாணி 500 ரூபாய் இதை கொடுத்தால் போதும் கிணற்றில் கூட விழுவதற்கு தயார். கேட்டால் படித்து மாநிலம். படித்து விட்டு நம் பிள்ளைகள் வேலைக்கு எதிர் காலத்தில் வடக்கு நோக்கி செல்லும் நிலை வரும்.


Velan
ஜூலை 19, 2024 04:19

சமூக அர்வலர். என்றும். மற்றும் வினோதமான பெயர்கள் உடய இயக்கங்களும் . கழிசடை கட்சிகளும். இறுதியாக கையால் ஆகாத தமிழக அரசும் காரணம்


sankaranarayanan
ஜூலை 19, 2024 02:24

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடலால் தமிழகத்தில் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசும் இதைப்பற்றி கவலைப்பட்டதே கிடையாது துாத்துக்குடியில் லாரி ஓட்டுனர்கள் கான்டராக்டர்கள் ஆலையில் வேலைபார்த்த பல்லாயிர பாமர மக்கள் தமிழகத்திற்கும் வருவாய்துறையில் பெரிழைப்பு நாட்டிற்கு அந்நிய நாட்டு வருமானம் இழப்பு பல்லாயிரம் மக்கள் இந்த தொழிசாலையை நம்பி இருந்தவர்களுக்கு புழைப்புக்கே நாசம் இவைகளை யாராவது அலசி பார்த்து திரும்பவும் அந்த தொழிற்சாலை துவங்க யாருக்காவது அக்கறை உள்ளதா எந்த அரசாவது நாட்டின் நலம் கருதி மக்களின் வேலைவாய்ப்பு வாழ்வாதாரம் கருதி ஆலையை திரும்ப துவங்க முயற்சிகள் எடுக்குமா இல்லையேல் இந்த ஆலை விரைவிலேயே அடுத்த மாநிலம் சென்றால் நமக்குத்தான் எல்லா விதங்களிலும் நஷ்டம்


மேலும் செய்திகள்