உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நிர்வாகிகளுக்கு வலை: சீமானை சீண்டும் தி.மு.க.,

நிர்வாகிகளுக்கு வலை: சீமானை சீண்டும் தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி தரும் வகையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளை இழுக்க, தி.மு.க., மாவட்டச்செயலர்களுக்கு உத்தரவு சென்றுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., -நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்கும் வகையில், அக்கட்சிகள் இணக்கமான நட்பை கடைப்பிடித்து வருகின்றன.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு, சி.பி.ஐ., விசாரணை கேட்டு, அ.தி.மு.க., மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, நாம் தமிழர் கட்சி ஆதரவு அளித்தது.இதையடுத்து, முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதுாறாக பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலர் 'சாட்டை' துரைமுருகனை போலீசார் கைது செய்தனர். இதற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.'சாட்டை' துரைமுருகனை தொடர்ந்து கருணாநிதியை விமர்சித்து சீமான் பாட்டு பாடியதையும், தி.மு.க., மேலிடம் ரசிக்கவில்லை. இதனால், சீமானுக்கு நெருக்கடி தரும் வகையில், அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பேச்சாளர்களை தங்கள் பக்கம் கொண்டு வரும் வேலைகளை, தி.மு.க., - மா.செ.,க்கள் துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது.இதற்கிடையில், கருணாநிதி பற்றி அவதுாறாக பேசிய சீமான் மீது, வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜன் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kumaravel Ramesh
ஜூலை 13, 2024 20:55

சூப்பர் சூப்பர்


Gopal,Sendurai
ஜூலை 13, 2024 10:29

இந்த நாதக வலை ஒண்ணுதான் கேடு!


சுலைமான்
ஜூலை 13, 2024 08:53

திமுக வின் பி டீம் தானே! ஒரு வார்த்தை சொன்னா வந்துட போறாங்க


DAYALAN S
ஜூலை 14, 2024 16:00

உங்களுக்கு தெரியுமா? நீங்க என்ன திமுக எ டீம் aaha


ராமகிருஷ்ணன்
ஜூலை 13, 2024 06:06

புல்லாக மெண்டல் கேசுங்க. சும்மா ஒரு பேச்சுக்கு வாங்க என்றாலே வந்துடுவாங்க, இதுலே வலை எல்லாம் வேஸ்ட். ஆனால் கட்சிக்கு வந்த பிறகு திமுகவினர் கிறுக்கு பிடிக்க வைச்சுருக்காங்க.


Kumaravel Ramesh
ஜூலை 13, 2024 20:53

சூப்பர்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை