உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஒரே அக்கவுன்டில் 2 பேருக்கு யு.பி.ஐ.,

ஒரே அக்கவுன்டில் 2 பேருக்கு யு.பி.ஐ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற ரிசர்வ் பேங்க் கூட்டத்தின் முடிவில் நேற்று, ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாக தொடரும் என, ரிசர்வ் பேங்க் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:வங்கிகளில் காசோலை டிபாசிட் செய்யப்பட்டதில் இருந்து, பரிவர்த்தனைகளை முடிக்க வங்கிகள் இரண்டு நாட்கள் வரை எடுத்துக் கொள்கின்றன. நெப்ட், ஆர்.டி.ஜி.எஸ்., போன்று, காசோலையை டிபாசிட் செய்த சில மணி நேரங்களுக்குள், காசோலை பரிவர்த்தனைகளை முடிக்க புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படும். யு.பி.ஐ., வாயிலாக வரி செலுத்துவதற்கான உச்ச வரம்பு, 1 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வரி செலுத்துவோர் வேலை சுலபமாகும். யு.பி.ஐ., பரிவர்த்தனைகளில் மற்றொரு பெரிய மாற்றமும் அறிமுகமாகிறது. ஒருவர் தன் வங்கி கணக்கில் இருந்து, தன் குடும்ப உறுப்பினர் ஒருவரை பணப் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கலாம். குறிப்பிட்ட தொகை வரை அவர் பரிவர்த்தனை செய்யலாம். அவருக்கு யு.பி.ஐ., உடன் இணைக்கப்பட்ட தனி வங்கி கணக்கு தேவையில்லை. இதன் முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.கடன் வழங்கும் நிறுவனங்கள், சி.ஐ.சி., எனப்படும் கடன் தகவல் நிறுவனங்களுக்கு தரவுகளை அளிப்பதற்கான அவகாசம், ஒரு மாதத்தில் இருந்து இரு வாரங்களாக குறைக்கப்படுகிறது. தங்களது கடன் விபரங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக புதுப்பிக்கப்படுவதால், கடன் வாங்குவோர் பயனடைவர். கடன் வழங்கும் நிறுவனங்கள், கடனாளிகள் குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்க உதவும்.இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

N Annamalai
ஆக 09, 2024 19:10

ஒரு கணக்கில் இருந்து ஒருவர் எடுப்பதில் எவ்வளவு திருட்டுகள் .எவ்வளவு பணம் மக்களை ஏமாற்றி திருடுகிறார்கள் .இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் .ரேசெர்வே வாங்கி அதற்கு ஒரு திட்டம் போடலாம்


kannagasabai
ஆக 09, 2024 10:19

செக் ஒரே நாளில் வசூல் ஏற்கனவே இருந்துதானே


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 09, 2024 14:25

செக் ஒரே நாள் வசூல் தான் ஆனால் டெபாசிட் செய்து அக்கவுண்ட்டில் அடுத்த நாள் தான் கிரெடிட் செய்யப்படும். அதுவும் அடுத்த நாள் வங்கி அலுவல் முடியும் நேரத்தில் தான் கிரெடிட் செய்வார்கள். இடையில் விடுமுறை வந்தால் மேலும் தாமதம் ஆகும். அதற்கு தான் தெஃப்ட் போல் இரண்டு மணி அல்லது அதிகபட்சம் ஜந்து மணி நேரத்திற்குள் கிரெடிட் வர வேண்டும். நெப்டுக்கு இரண்டு மணி நேரம் என்பதால் காசோலைக்கு நான்கு மணிநேரம் எடுத்து கொள்ளலாம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை