விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய தெரியாமல் 1.61 லட்சம் ஆசிரியர்கள் திரு திரு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மத்திய அரசு நடத்தும், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'சி டெட்' தேர்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களில், 1.61 லட்சம் பேர் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யாததால், அவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. தகுதித் தேர்வு
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, நாடு முழுதும் உள்ள பள்ளிகளில், ஆசிரியரா க பணியாற்ற, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட் டாயம். இதற்காக, மத்திய இடைநிலை கல்வி வாரியம் எனும் சி.பி.எஸ்.இ., 'சி டெட்' தகுதித் தேர்வை நாடு முழுதும் நடத்துகிறது. அதன்படி, வரும் பிப்., 8ம் தேதி 'சி டெட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு, நவ., 27 முதல் டிச., 18 வரை நடந்தது. நாடு முழுதும், 25.30 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இந்நிலையில், 'தொழில்நுட்ப கோளாறால், சி டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும்' எ ன, பலர் சி.பி.எஸ்.இ.,க்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, சி.பி.எஸ்.இ., ஆய்வுகள் மேற்கொண்டது. அதில், 'தொழில்நுட்ப கோளாறு எனும் குற்றச்சாட்டு தவறானது. பலர் முறையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவில்லை' என்பது தெரிய வந்தது. இது குறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'சி டெட்' தேர்வுக்கு விண்ணப்ப பதிவு முடிந்த பின், தொழில்நுட்ப கோளாறால் விண்ணப்பிக்க முடியவில்லை. எனவே, விண்ணப்பப் பதிவு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, சிலர் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து, விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. குற்றச்சாட்டு
மொத்தம் 25 லட்சத்து 30,581பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில், 3 லட்சத்து 53,218 பேர் கடைசி தேதிக்கு முந்தைய நாளிலும், 4 லட்சத்து 14,981 பேர் கடைசி நாளிலும் விண்ணப்பித்துள்ளனர். எனவே, இணையதளம் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு முழுமையாக ஆதாரமற்றது. மேலு ம், அந்த ஆய்வில், 1 லட்சத்து 61,127 பேர் விண்ணப்பங்களை முழுமையாக நிறைவு செய்து, சமர்ப்பிக்காமல் இருப்பது க ண்டறியப்பட்டுள்ளது. 'சி டெட்' தேர்வு ஓராண்டுக்கு பின் நடப்பதால், விண்ணப்பப் பதிவு செயல் முறையை துவக்கியவர்களுக்கு, ஒருமுறை மட்டும் அவர்களின் விண்ணப்பங்களை முடித்து சமர்ப்பிக்கும் வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் 30 ம் தேதிக்குள் விண்ணப்பத்தை முழுமையாக சமர்ப்பிக்கலாம். புதிய பதிவுகளுக்கு அனுமதி கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.