உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / செல்வப்பெருந்தகைக்கு எதிராக 25 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி

செல்வப்பெருந்தகைக்கு எதிராக 25 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி

தமிழக காங்கிரசில் உள்ள அதிருப்தி மாவட்ட தலைவர்கள், 25 பேர் தனி கோஷ்டியாக செயல்படுவதுடன், டில்லி சென்று கார்கேவிடம், மாநில தலைமை மீது புகார் அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

எதிர்ப்பு

தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்ற பின், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, 'கட்சி பணிகளில் சரிவர செயல்படாத மாவட்டத் தலைவர்களை மாற்றிவிட்டு, புதியவர்கள் நியமிக்கப்படுவர்' என, அறிவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s2wuh2tw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன் தொடர்ச்சியாக, மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர் பதவிகளுக்கு இணைய தளம் வாயிலாக, 5,000 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என, தமிழக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. கட்சியில் உள்ள 72 மாவட்டத் தலைவர்களில், 25க்கும் மேற்பட்டவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களில் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் எம்.பி., செல்லக்குமார், ஆந்திர மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர் ஆதரவு மாவட்டத் தலைவர்கள் ஓரணியாக திரண்டனர். கட்சி தலைமை நடத்திய, 'வீடியோ கான்பரன்ஸ்' கூட்டங்களை, அவர்கள் புறக்கணித்தனர்.

அதிருப்தி

அவர்களை சமதானப்படுத்தும் வகையில், 'ஜனநாயகம் காக்க, விண்ணப்ப நடைமுறை அவசியம்; கட்சி பணியாற்ற ஏராளமானோர் காத்திருக்கின்றனர். வேலை செய்யும் மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட மாட்டார்கள்' என, செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்தார். ஆனாலும், அழகிரி, செல்லக்குமார், மாணிக்கம் தாகூர் ஆதரவு மாவட்டத் தலைவர்கள், செல்வப்பெருந்தகைக்கு எதிராக திரும்பிஉள்ளனர். சென்னையில் நேற்று முன்தினம் அவர்கள் தனி கூட்டம் நடத்தி, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதில் எடுக்கப்பட்ட முடிவுப்படி, அதிருப்தி மாவட்ட தலைவர்கள் 25 பேர் டில்லி சென்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலர் கே.சி.வேணுகோபாலை சந்தித்து, மாநில தலைமை மீது முறையிட உள்ளனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ராம்பாபு
பிப் 19, 2025 21:47

இவரைவிட கில்லாடிங்கள்லாம் காங்கிரஸ் தலைவரா இருந்து கோஷ்டி கானத்தில் காது ஜவ்வு கிழிஞ்சு ஓரமா கெடக்கறாங்க. இவரும் போய் சேந்துக்க வேண்டியது தான். தமிழக காங்கிரஸ் கோஷ்டிகளை அடக்க அந்த ஆண்டவனாலும் முடியாது.


PalaniKuppuswamy
பிப் 19, 2025 20:45

எதற்கும் லாயக்கற்ற கட்சி கான் +கிராஸ் அதற்கு தலைவர் டெல்லி பப்பு எதற்கும் லாயக்கற்றவர் .. இங்கே அது போல் எதற்கும் லாயக்கற்ற முன்னாள் குண்டர் சட்ட குற்றவாளி சில்லறை தொகை .. காவல் பதிவை பார்த்தல் இவர் உண்மை kd பில்லா–வா ரௌடி ரங்கனா என்பது தெரியும்.


V வைகுண்டேஸ்வரன்,Chennai
பிப் 19, 2025 20:40

பெருந்தகை–யா இல்லை பெருந் தொகை–யா...?


sankaranarayanan
பிப் 19, 2025 18:33

அவர் அகில இந்திய காங்கிரசு தலைவர் கார்க்கிக்கு பெருந்தொகை கொடுத்து மதரிதியாக அமைக்கப்பட்டவர் .அதனால்தான் அவருக்கே செல்வ பெருந்தொகை என்றே பெயர் .அவரை மாற்றவோ அசைக்கவோ யாராலும் முடியாது. அவர் பல பல கட்சிகளை பார்த்தவர் .கடைசியில் காங்கிரசில் அவருக்கு அடைக்கலம் கிடைத்தது.சற்றே பொறுங்கள் விரைவில் இன்னும் ஒரு பெருந்தொகை கையில் அகப்பட்டதும் அவர் தானாகவே அடுத்து கட்சியில் ஐக்கியமாகி விடுவார்


Bala
பிப் 19, 2025 15:31

இந்த செல்வ பெருந்தகை எதுக்கும் லாயக்கில்லை


SUBRAMANIAN P
பிப் 19, 2025 14:18

கொஞ்சம் கூட வெட்கம், கூச்சம் இல்லாமே திமுக ஆட்சியை காமராஜர் ஆட்சியோட ஒப்பிட்டு பேசி உண்மையான காங்கிரஸ் தலைவர் காமராஜரை சொந்த கட்சி தலைவரை அசிங்கப்படுத்தியவர். பணம் பதவிக்காக இன்றைய காங்கிரஸ் தங்களை தாங்களே சேற்றில் முக்கிக்கொள்வார்கள்.


SP
பிப் 19, 2025 13:00

காங்கிரஸ் தலைவராக இருக்க தகுதி,எந்த கிரிமினல் வழக்கும் இல்லாதவராக இருக்க வேண்டும் இவரை போன்றவர்களை எல்லாம் உடனடியாக நீக்க வேண்டும். இவரை போன்றவர்களால் தான் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிவிட்டது


jayvee
பிப் 19, 2025 10:42

தமிழகத்தில் இப்படிப்பட்ட அஞ்சு கட்சி அமாவாசைகளை நம்பித்தான் பல கட்சிகள் உள்ளன.. சிலர் அமைச்சராகவும் உள்ளனர் ..


அப்பாவி
பிப் 19, 2025 08:21

இவர் திமுகவை சேர்ந்தவர்கள்தான் காங்கிரஸ் கட்சி அல்ல


Venkidusamy
பிப் 19, 2025 14:22

உண்மை


Hari Raj
பிப் 19, 2025 07:39

இவனை போன்ற சால்ரா பேர்வழி தலைவர் ஆக்கியது மூலம் தமிழ்நாடு காங்கிரஸ் தனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பினையும் இழந்து விட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை