உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தென்மாவட்டங்களில் ஓராண்டில் 33,258 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்! 7272 வழக்குகள் பதிவு

தென்மாவட்டங்களில் ஓராண்டில் 33,258 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்! 7272 வழக்குகள் பதிவு

மதுரை : மதுரை உட்பட தென்மாவட்டங்களில் இந்தாண்டில் ஜனவரி முதல் நவம்பர் வரை 2098 கிலோ கஞ்சா, 27 ஆயிரத்து 458 கிலோ குட்கா, 3692 கிலோ கூல் லிப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா கடத்தியதாக, விற்றதாக 1935 வழக்குகள், குட்கா விற்றதாக 3886 வழக்குகள், கூல் லிப் விற்றதாக 1451 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதை முற்றிலும் ஒழிப்பதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி மதுரையை மையமாக வைத்து தென்மாவட்டங்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்தது.தென்மண்டல ஐ.ஜி.,யாக அஸ்ராகர்க் பொறுப்பேற்றதும் கஞ்சா வியாபாரிகள் பலர் கைது செய்யப்பட்டதோடு, கஞ்சா விற்று வாங்கிய சொத்துக்களை முடக்கினார். இதை தற்போது அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர். உயர்நீதிமன்றமும் பாராட்டியது.இந்நிலையில் தென்மண்டல ஐ.ஜி.,யாக பிரேம் ஆனந்த் சின்ஹா இந்தாண்டு ஜூலையில் பொறுப்பேற்றார். திருநெல்வேலி, துாத்துக்குடி பகுதி ரவுடிகளை கட்டுப்படுத்தியதோடு, போதைப்பொருட்கள் விற்பனை, கடத்தலை தடுக்க அந்தந்த மாவட்டங்களில் தனிப்படைகளை அமைத்தார். கிலோ கணக்கில் போதைப்பொருட்களை பறிமுதல் செய்ததோடு, நுாற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகமாக கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் மதுரையும், குட்கா வழக்கில் விருதுநகரும் முதலிடத்தில் உள்ளன.அதேசமயம் தேனி, ராமநாதபுரம், துாத்துக்குடியில் மெத்தபெட்டமைன் போதை மருந்தும், மதுரை, விருதுநகர், தேனி, துாத்துக்குடி, கன்னியாகுமரியில் போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கூல் லிப் பாக்கெட் விற்றதாக வழக்குப்பதிவு செய்ததில் தேனி முதலிடத்தில் உள்ளது. தென்மாவட்டங்களில் ஓராண்டில் 7272 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கஞ்சா, குட்கா உட்பட 33 ஆயிரத்து 258 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
டிச 13, 2024 20:34

தமிழகம், போதைபொருள் விநியோக தலைநகரம்.☹️☹️☹️ எல்லா புகழும் விக் தலைவருக்கே…?


krishna
டிச 13, 2024 18:11

INDHA NAATHAM PIDITHA TASMAC KANJA MANAL KANIMAVALA KOLLAI DRAVIDA MODEL AATCHI THUDAITHU ERIYA PADA VENDUM.APPODHAN NAMAKKU UNMAYAANA VIDIYAL.


Sampath Kumar
டிச 13, 2024 17:22

இதுமுக்கிய காரணம் என்ன போதையின் பாதை தான் சிறந்தது என்று அரசும் சரி சினிமாவும் சரி மதவாதிகளின் பொறுப்பற்ற தன்மையும் சரி முக்கிய காரணிகள் ஒன்னும் பண்ண முடியாது போதை எனப்து மனித குலத்திற்கு தேவையான ஒன்றாக மாரி பல வருடுங்கள் ஏன் யூகங்கள் ஆகி விட்டது புராணத்திலே குறிப்பு உள்ளது சோம பாணம் அருந்துவது வளாகத்தில் இருந்த உள்ளது அப்புறம் இன்றய இளசுகளை கேக்கவே வேண்டாம் இதுக்கு அரசை கோரி கூர்வது தவறு சங்கி சொங்கி கும்பல் தான் குதிக்கும் பொய் உன் புராணத்தை பாரு பாட்டன் முப்பாட்டன் அவனுக்கு பட்டன் எல்லாம் சோமா பானம் அருந்தியவர்கள் தான் தெரிந்து கொண்டு பதிவு போட முயற்சி செய்


ram
டிச 13, 2024 12:04

இதுதான் திராவிட அரசு


orange தமிழன்
டிச 13, 2024 09:35

பிடி பட்டதே இவ்வளவு என்றால்???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை