உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / லிட்டருக்கு 5 கி.மீ., இயக்க கண்டிஷன்: தாழ்தள பஸ்களை தவிர்க்கும் ஊழியர்கள்

லிட்டருக்கு 5 கி.மீ., இயக்க கண்டிஷன்: தாழ்தள பஸ்களை தவிர்க்கும் ஊழியர்கள்

சென்னை: அதிகாரிகளின் நிபந்தனையால், தாழ்தள பேருந்துகளை இயக்க ஓட்டுனர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.சென்னையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், மீண்டும் தாழ்தள பேருந்துகளை இயக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்தது. நீதிமன்றமும், மீண்டும் தாழ்தள பேருந்துகளை இயக்க உத்தரவிட்டது. இதையடுத்து, மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, 611 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் முதல்கட்டமாக, கடந்த மாதம் 58 பேருந்துகளும், 2வது கட்டமாக, 66 பேருந்துகளின் சேவையும் துவக்கப்பட்டு உள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஏறி, இறங்க வசதியாக இருப்பதால், பயணியர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.மாநகரப் பேருந்துகளை பெரும்பாலும், 1 லிட்டர் டீசலில், 5.4 கி.மீ., துாரம் வரை இயக்க முடியும். ஆனால், புதிதாக இயக்கப்படும் இந்த தாழ்தள பேருந்துகள் எடை அதிகமாக இருப்பதால், மற்ற பேருந்துகளை விட டீசல் அதிகமாக பயன்படுகிறது. மேலும், 1 லிட்டர் டீசலில், 3 கி.மீ., துாரம் வரை மட்டுமே இயக்க முடிகிறது. ஆனால், இந்த வகை பேருந்துகளை, 1 லிட்டர் டீசலில் 5 கி.மீ., துாரம் வரை இயக்க வேண்டுமென, மாநகர பணிமனை அதிகாரிகள் நிபந்தனை விதிக்கின்றனர்.ஓட்டுனர், நடத்துனர்கள் கூறியதாவது: மற்ற பேருந்துகளை விட, டீசல் அதிக அளவில் உறிஞ்சுகிறது. அதிகாரிகளோ, 1 லிட்டர் டீசலில் 5 கி.மீ., துாரம் இயக்க வேண்டுமென கூறுகின்றனர். இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். இதனால் தான், தாழ்தள பேருந்துகளை இயக்க, பணியாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இருப்பினும், பணிமனையில் வேறு பேருந்து இல்லாத சூழலில், இந்த பேருந்துகளை இயக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

என்ன பிரச்னை?

ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: தாழ்தள பேருந்துகள் கட்டமைப்பு வலிமையாக இருக்க வேண்டியது கட்டாயம். அதிக திறன் கொண்ட இன்ஜின் இருப்பதாலும், பேருந்தின் உள்ளே பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாலும், இந்த பேருந்தின் எடை, வழக்கமான பேருந்துகளின் எடையை விட 2 டன் அதிகமாக இருக்கிறது. இதனால், வழக்கமான பேருந்தை விட 'மைலேஜ்' குறைவாக தான் அளிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை