உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கடனை கட்டாயமாக வசூலிக்க முயன்றால் 5 ஆண்டு சிறை: அடாவடியை தடுக்க அரசு மசோதா தாக்கல்

கடனை கட்டாயமாக வசூலிக்க முயன்றால் 5 ஆண்டு சிறை: அடாவடியை தடுக்க அரசு மசோதா தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வலுக்கட்டாய கடன் வசூல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, புதிய சட்டத்தை தமிழக அரசு நேற்று சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது. அடாவடியாக கடன் வசூலில் இறங்கும் நிறுவனங்கள் அல்லது தனி நபர்களுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்க, இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. சிறு தொழில்கள் துவங்குதல், வீடுகள் கட்டுதல், அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குதல், கல்வி கட்டணம், மருத்துவ கட்டணம் உள்ளிட்ட காரணங்களுக்காக, பலரும் கடன் வாங்குகின்றனர். சுய உதவி குழுக்கள் வாயிலாகவும் அதிகளவில் கடன்கள் பெறப்படுகின்றன. முன்னர், தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் மட்டுமே கடன்கள் அதிகளவில் வழங்கப்பட்டன. இப்போது, பணக்கடன்கள் வழங்கும் நிறுவனங்கள் அதிகளவில் முளைத்து விட்டன. 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கடன் தொகை வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது.

கவர்ச்சி சலுகை

இதற்காக கடன் பெறுவோரை கவரும் வகையில் கவர்ச்சி சலுகைகளும் கடன் வழங்கும் நிறுவனங்கள், ஏஜன்சிகளால் அறிவிக்கப்படுகின்றன. இதை நம்பி கடன் வாங்கும் பொதுமக்கள், சுய உதவி குழுக்கள், சில நேரங்களில் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அத்தகைய நேரங்களில், அடியாட்களை வைத்து மிரட்டுதல் போன்ற செயல்களில், தனியார் பணக்கடன் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. தேசிய வங்கிகளும், இதற்கென ஏஜன்சிகளை நியமித்து, பணம் வசூலிப்பு நடைமுறையில் கறாராக ஈடுபடுகின்றன. இதனால், மன உளைச்சலுக்கு ஆளாவோர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், புதிய சட்டத்தை இயற்ற, தமிழக அரசு முன்வந்துள்ளது. இது தொடர்பான சட்ட மசோதாவை, சட்டசபையில் நேற்று, துணை முதல்வர் உதயநிதி தாக்கல் செய்தார்.மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:பணக்கடன் வழங்குபவர்கள் மற்றும் அடகுகடைகாரர்களின் தொழிலை ஒழுங்குபடுத்தி, கடன் மீதான கடும் வட்டியில் இருந்து மக்களை காப்பதில், தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.கடந்த 1943ம் ஆண்டு தமிழக அடகு கடைக்காரர்கள் சட்டம், 1957ம் ஆண்டு தமிழக பணக்கடன் வழங்குபவர்கள் சட்டம், 2003ம் ஆண்டு தமிழக கந்துவட்டி விதித்தல் தடை சட்டம் ஆகியவற்றை அரசு இயற்றியுள்ளது. எனினும், சமீப காலமாக சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிந்த பிரிவினர், குறிப்பாக விவசாயிகள், மகளிர், சுயஉதவி குழுக்கள், விவசாய கூலி தொழிலாளர்கள், பணியாளர்கள்.நடைபாதை வியாபாரிகள், பால் பண்ணை தொழிலாளர்கள், கட்டட பணியாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோர், பணக்கடன் வழங்கும் நிறுவனங்களால் அறிவிக்கப்படும் கவர்ச்சிகரமான கடன்களுக்கு அடிக்கடி இரையாகின்றனர். தாங்க இயலாத கடன் சுமைக்கு ஆட்படுகின்றனர்.பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள், ஏற்கனவே நிதி சுமையில் இருக்கும் கடன் பெற்றவர்களிடம் இருந்து, கடனை வசூலிப்பதற்கு முறையற்ற வழிகளை நாடுகின்றன.அது துயரத்தில் இருக்கும் கடன் பெற்றவர்களை, சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்வதற்கு துாண்டுதலாய் அமைகிறது. அதன் வாயிலாக, பலரது குடும்பங்களை அழித்து, சமூக ஒழுங்கை பாதிப்படையச் செய்கிறது.

அவசியம்

எனவே, தனி நபர் அல்லது தனிநபர் குழுக்கள், சுய உதவி குழுக்கள் அல்லது கூட்டு பொறுப்பு குழுக்கள் ஆகியவற்றுக்கு, கடன் வழங்கும் நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலிப்பு முறையால் ஏற்படும் மிகுந்த இன்னல்களில் இருந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்க, ஒரு சட்ட வரையறையை வகை செய்வது அவசியம். அதற்காக, பணக்கடன் வழங்கும் நிறுவனங்களின் வலுக்கட்டாய நடவடிக்கைகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் சட்டம் இயற்ற, அரசு முடிவு செய்வுள்ளது.இந்த சட்டம், 2025ம் ஆண்டு தமிழ்நாடு பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாய வசூல் நடவடிக்கைகளை தடுக்கும் சட்டம் என அழைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சொத்துகளைபறிக்க முடியாது இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழகத்தில் செயல்படும் குறு நிதி நிறுவனங்கள், பணக்கடன் வழங்கும் ஏஜன்சிகள், பணக்கடன் வழங்கும் அமைப்புகள், தேசிய வங்கிகளின் ஏஜன்சிகளின் கட்டாய கடன் வசூல் நடைமுறைகள் தடுக்கப்படும்கடன் பெற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை மிரட்டவோ, சொத்துக்களை சட்ட விரோதமாக பறிக்கவோ முடியாது கட்டாய கடன் வசூலில் ஈடுபடுபவர்களுக்கு, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்தற்கொலைக்கு துாண்டியதாக தொடர்புடைய நிறுவனங்கள் மீது வழக்கு பதியப்படும். கடன் பெறுவோருக்கும், கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்து வைப்பதற்கு தீர்ப்பாயத்தை அரசு அமைக்கும்கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பெருகியுள்ள அடகு கடை அடாவடிகளும் தடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

vijai hindu
ஏப் 27, 2025 18:53

கடன் கொடுத்தவன் தற்கொலை செய்து கொண்டால் கடன் வாங்கியவனுக்கு தண்டனை


naranam
ஏப் 27, 2025 15:59

அப்படியானால் இனிமேல் கடன் கொடுக்கும் வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் குறைந்து விடும்.. அது பரவாயில்லையா? கடன் வாங்குபவர்கள் தங்கள் தகுதிக்கு மீறி வாங்குவதும் வாழ்க்கையில் சிக்கலுக்கு ஒரு காரணம். ஒரு புறம் வங்கிகள் கடன் கொடுக்கக் கூவி கூவி அழைக்கின்றன.. மறு புறம் மக்களின் பேராசையும் சேர்ந்தே இது போன்ற பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைகின்றன. தேர்தல் வாக்குறுதிகளை மனதில் வைத்துக் கொண்டு எத்தனையோ மக்கள் கடன் எப்படியும் தள்ளுபடியாகி விடும் என்ற பேராசை கொண்டு கடன் வாங்குகிறார்கள். இனிமேல் கடன் கொடுப்பவர்கள் பாடு திண்டாட்டம் தான்!


ஆரூர் ரங்
ஏப் 27, 2025 13:07

இனிமே வசூல் பண்ண முடியலைன்னா யாராவது வட்டம், மாவட்டம் காலில் விழுந்து கெஞ்சினா பாதியாவது வசூல் பண்ண முடியும். மீதி பாதி அவங்க பாக்கெட்களுக்குள்? அதுக்கு வசதியாதான் சட்டம் கொண்டு வர்றாங்களா?


c.mohanraj raj
ஏப் 27, 2025 12:43

முதலில் ஹெல்மெட்டிற்கு பணம் வாங்குவதை நிறுத்தச் சொல்லுங்கள்


Ravi Balan coimbatore
ஏப் 27, 2025 12:30

‎‎பணம் இல்லாத போது கிடைக்கும் அனுபவம் மற்றும் அறிவுரைகள் உங்கள் வாழ்க்கையின் செம்மை படுத்த உதவும் ‎அதற்காக பணம் இல்ல வாழ்க்கையினை ‎வாழ முயற்சி செய்ய வேண்டாம் அது ஓர் நரகம் ‎ஆதலினால் கடன் இல்லா வாழ்க்கையினை ‎வாழ முயற்சி செய்யுங்கள் குழந்தைகளுக்கு சிறு வயது முதல் சேமிப்பு பழக்கத்தை கற்றுக் கொடுங்கள் ‎பணம் சம்பாதிப்பது மிகவும் சுலபமான காரியம் என்று குழந்தைகளிடம் சொல்லி வளர்க்காதீர்கள் ஏனெனில் இவ்வாறு சொல்லி வளர்த்தால் அவர்கள் பணத்தை செலவு செய்த பின் பணத்தை சம்பாதிக்கும் முயற்சி செய்வார்கள் ‎இது மிகவும் தவறான உதாரணமாகும் ‎கடன் வாங்கி மொய் வைப்பது ,கடன் வாங்கி திருமணம், கடன் வாங்கி பைக் கார் வீடு வாங்குவது இவை எல்லாம் நம்மை நாமே ஊக்குவித்துக் கொண்டிருந்தால் மிகப்பெரிய கடன் சுமை ஏற்பட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் நம் சுயமாக சிந்திக்க இயலாமல் கடன் கடன் என்று வாழ்க்கையை முழுவதும் கழிந்து விடும் ஆதலினால் கடன் வாங்காதீர்கள்


Padmasridharan
ஏப் 27, 2025 12:23

காவலர்கள் கட்டாயமாக பொது மக்களை மடக்கி, அதட்டி, மிரட்டி, பணம் புடுங்குகிறார்கள். . இதனாலும் சில இளைஞர்கள் ஏன் பணம் பறிபோனது என்று வீட்டில் சொல்ல இயலாமல் பொய்கள் சொல்லியும் தற்கொலைக்கும் தூண்டப்படுகிறார்கள். தரவில்லை என்றால் தங்கள் வண்டியில் அறைக்கு அழைத்து செல்கின்றனர். இதையும் கவனிக்குமா அரசு.


ramesh
ஏப் 27, 2025 11:53

அப்ப யாரும் கடன் கேட்காதீர்கள் கடன் கொடுக்காதீர்கள், டாஸ்மாக் கில் 10 ரூபாய் அடாவடியாக புடுங்குகிறார்கள் அவர்களை இச்சட்டத்தில் நிறுத்தி தக்க தண்டனை வாங்கித் தருவாரு


SP
ஏப் 27, 2025 10:34

உண்மையிலேயே கடன் தேவைப்படுபவர்களுக்கு இனி யார் கடன் தருவார்கள். கடன் கொடுத்தவர்களுக்கு சில கண்டிஷன்கள் போடும்போது வாங்கியவர்களுக்கும் கண்டிஷன் போட வேண்டியதுதானே?


vijai hindu
ஏப் 27, 2025 17:22

திமுக காரன் எத்தனை பேர் வட்டிக்கு பணம் விடுறாங்க அவங்க வசூல் பண்ணும் போது போலீஸ வச்சு ரவுடி வச்சு மிரட்டு வாங்க அங்க போய் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க முடியாது. எப்படி கடன் கொடுப்பான் இதெல்லாம் ஒரு சட்டம் .தேவைக்கு பணம் கடன் கொடுக்கிறார்கள் ஆனால் திரும்பி கேட்கக் கூடாது என்றால் இனிமே கடன் யாரும் கொடுக்க மாட்டார்கள்


அப்பாவி
ஏப் 27, 2025 09:46

ஒரு மாசாம் கரண்ட் பில் கட்ட்லேன்னா ஃப்யூசைப் புடுங்கிட்டு போற களவாணிகள், வீட்டு வரி, புதை சாக்கடை வரி கட்டலேன்னா அபராதம் விதிச்சு வசூலிக்கும் நல்லவங்களுக்கு இந்த விதி பொருந்துமா?


Kuru
ஏப் 27, 2025 09:38

நிரவ் மோடி மல்லையா இவர்களை எதுக்குய்யா கைது செய்யனும். வங்கி மேலாளர் ரிசர்வ் வங்கி உயர்அதிகாரி இவர்களை 5 ஆண்டு உள்ளே தள்ளுமா இந்த சட்டம். ஓட்டுவங்கி அரசியலும் ஓட்டு வங்கி சட்ட திட்டங்களும். பாழா போகும் நாடும் மக்களும். ஆயிரம் ரூபாய்க்கு ஓட்டுபோடும் நீங்கள் அனுபவிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை