உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 6 தொகுதிகள் போதாது; 15 வரை கேட்போம்: திருமாவளவன் பேச்சால் தி.மு.க.,வில் திகுதிகு

6 தொகுதிகள் போதாது; 15 வரை கேட்போம்: திருமாவளவன் பேச்சால் தி.மு.க.,வில் திகுதிகு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., கூட்டணியில் 15 தொகுதிகள் வரை கேட்போம் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். கடந்த 2006ல் அ.தி.மு.க.,விடம் 9 தொகுதிகளை பெற்ற வி.சி., தற்போது 20 ஆண்டுகளாகியும் கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப் பெற முடியாமல் தவித்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tmjevrw5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் எப்படியாவது இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப் பெற்றுவிடும் என்ற ஆவலில் வி.சி.,க்கள் உள்ளனர். இந்நிலையில், 2021 தேர்தலில் பெற்றது போல 6 தொகுதிகள் போதாது; வரும் தேர்தலில் 15 தொகுதிகள் வரை கேட்போம் என வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை ஓட்டேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஒரு கட்சி நடத்தும் நானே, தி.மு.க.,வினரை வியப்பாக பார்க்கிறேன். அந்த அளவுக்கு அவர்கள் செயலாற்றுகின்றனர். கட்சியினை உயிர்ப்போடு வைத்துள்ளார்கள். அதனால் தான் 2026ல் தி.மு.க., ஆட்சியமைக்க போகிறது என அடித்துச் சொல்கிறேன். உடனே தி.மு.க., ஆட்சி அமைப்பதாக சொல்கிறீர்களே, நீங்கள் ஏன் அதை சொல்லவில்லை என கேட்கலாம். என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். ஆனால், ஒரு சிலர் அப்படி ஆசைப்படுகின்றனர். அது ஒரு வகையான மன நோய். ராஜிவ் படுகொலைக்கு பின் நடந்த தேர்தலில், மிகப் பெரிய தோல்வியை தி.மு.க., சந்தித்தது. ஆனால், சாம்பலிலிருந்து மீண்டு வரும் பீனீக்ஸ் பறவையாய் எழுந்தது. தி.மு.க., கருணாநிதியின் பிள்ளை என்பதை விட அவரது கருத்தியலை உள்வாங்கியதால் தான், '10,000 கோடி ரூபாய் கொடுத்தாலும், புதியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்' என்று உறுதியாக நிற்கிறார் முதல்வர் ஸ்டாலின். கருணாநிதி, எங்கள் கூட்டணிக்கு வைத்த பெயர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி. அதனால் தான், இன்றைக்கும் நாங்கள் தி.மு.க., பின்னால் நிற்கிறோம். சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் எதுவானாலும் மதசார்பின்மையை உயர்த்தி பிடிப்போம்.தமிழகத்தில் பா.ஜ., என்ற ஒரு கட்சியே கிடையாது. ஆனாலும், அக்கட்சியை துாக்கிப் பிடிக்க இங்கே ஒரு கோஷ்டி இருக்கிறது. வரும் தேர்தலில் அவர்களையும் விரட்டி அடிப்போம். தேர்தலில் அதிக 'சீட்' கேட்பீர்களா? என்று கேள்வி எழுப்பினால், ஆம், கேட்போம். ஒரே கருத்துடையவர்களிடையே உரசல் இருக்கலாம்; உடைந்து விடக்கூடாது.எங்களுக்கு ஆறு போதாது; 10, 15 வேண்டும் என்போம். இதற்காக கூட்டணிக்குள் சிக்கல் எல்லாம் வராது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.திருமாவளவனின் இந்தப் பேச்சு, தி.மு.க.,வில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

நிக்கோல்தாம்சன்
ஜூன் 22, 2025 06:44

அவங்க கடைசியில் தூக்கி போடப்போறது என்னவோ பிரியாணி பாக்கெட் தான் அதுவும் அவங்க குடும்பத்தை தூக்கி பிடித்திருக்கும் வந்தேறிகள் ஓட்டலில் தான் உனக்கு இலவசம் என்று கூறுவாங்க


Arumugam
ஜூன் 20, 2025 00:03

தல நீ எவ்வளவு வேண்டுமானாலும் கேளு தல..... அவங்க கொடுக்கவா போறாங்க.... அவங்களே காரி துப்பினாலும் நம்ம வெளியே வரப் போறது இல்ல.... இதுல வீராப்பு வேற


krishna
ஜூன் 19, 2025 23:05

ULAKKAI NAYAGANUM KURUMA AVARGALUM ULAGA MAHA KOMAALIGAL.IRUVARUM ARIVAALAYAM KOTHAAIDIMAIGAL.HINDHU MADHA VIRODHIGAL.KURUMA ORU UDANJA PLASTIC CHAIR KEDAIKKUMA ENA MUDHALIL PAARUNGAL.SWEET BOX ALLI KODUTHAAL ORU SEAT KOODA VENDAAM ENA DRAVIDA MODEL KUMBALUKKU AADHARAVU THARUVAAR INDHA KOMALI.IDHELLAM ORU KATCHI .IDHUKKU THONDARGAL VERA.


Ramesh Sargam
ஜூன் 19, 2025 20:52

ஒருமுறை முதல்வரை ஸ்டாலின் அவர்களை பார்க்கச்சென்றபோது இவர் உட்கார ஒரு துரு பிடித்த இரும்பு நாட்காலியை போட்டார்கள்.அவர்களிடம் ஆறு தொகுதிகள் போதாது, பதினைந்து தொகுதிகள் கேட்கப்போகிறாராம். சிரிப்புதான் வருது.


மாடல் குருமா
ஜூன் 19, 2025 19:00

நீ கலக்கு சித்தப்பு...


c.mohanraj raj
ஜூன் 19, 2025 18:37

நீங்க நூறே கேட்டு துணை முதல்வர் ஆகலாம் வேறு ஏதாவது ஒரு நாட்டிற்கு


Rajan A
ஜூன் 19, 2025 17:50

அப்படியே துணை முதல்வர் பதவியை கேட்க வேண்டியது தானே? இந்த டிராமா எல்லாம் தேர்தல் அறிவிக்கும் வரை தான். இருக்கிற சீட்டுகளை காப்பற்றினால் போதும். இவ்வளவு கனவு வேண்டாம்


Balamurugan
ஜூன் 19, 2025 13:25

மதசார்பற்ற கூட்டணி ஆனால் மதத்தை வைத்து தான் அரசியலே செய்யுறானுக தறுதலை பயலுக. அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு. யோசிப்பாரா கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு மீசையை முறுக்கிக்கிட்டு கோமாளி போல சுத்தித்திரியும் அந்த அடிமை அரசியல் தலைவர்.


ப.சாமி
ஜூன் 19, 2025 12:27

மத சார்பற்ற கூட்டணி ...ஜாதி சார்புடைய கூட்டணி....


எஸ் எஸ்
ஜூன் 19, 2025 12:09

தனித்து நின்று உங்கள் பலத்தை காட்டுங்கள். பிறகு திமுக என்ன எல்லா கட்சிகளும் உங்களை தேடி ஓடோடி வரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை