உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தலைமை இன்றி தவிக்கும் 6 ஆயிரம் அரசு பள்ளிகள்; தடுமாறுது கல்வித்துறை

தலைமை இன்றி தவிக்கும் 6 ஆயிரம் அரசு பள்ளிகள்; தடுமாறுது கல்வித்துறை

மதுரை : தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) பிரச்னைக்கு சட்டரீதியாக தீர்வு காண முடியாமல் மூன்று ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்க முடியாமலும் கல்வித்துறை தடுமாறுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு, உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு டி.இ.டி., தேவை என்பது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது முதல் அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து உச்சநீதிமன்றம் வரை வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகளில் இறுதியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் டி.இ.டி., கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓய்வு பெற 5 ஆண்டுகள் உள்ள ஆசிரியர்கள் தவிர தற்போது பணியில் உள்ள 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு இத்தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கல்வித்துறையில் இந்த உத்தரவு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஏற்கனவே இவ்வழக்குகள் தொடர்பாக பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்ட காரணத்தால் தற்போதைய நிலையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது, 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியாத சூழல் போன்றவை இத்துறையை தடுமாற்றத்திற்கு தள்ளியுள்ளது.பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை 5 டி.இ.டி., தேர்வுகளே நடத்தப்பட்டுள்ளன. தற்போதய உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு பின் பணியில் உள்ளவர்களும் டி.இ.டி., கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதால் சிறப்பு டி.இ.டி., நடத்தி தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்கும் நடவடிக்கையில் அரசு ஆலோசித்து வருகிறது. அதேநேரம் ஏற்கனவே 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்வர்களுக்கு அரசு என்ன பதில் அளிக்கும். மத்திய அரசு டி.இ.டி., கொண்டு வந்தபோது ஏற்றுக்கொண்ட தமிழக அரசு தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கும் வரை தற்காலிக ஆசிரியர்களை 2015 முதல் நியமித்துக்கொள்வது என அறிவித்து ரெகுலர் நியமனங்கள் தள்ளிப்போடப்பட்டன. முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என அறிவித்தார். ஆனால் இதுவரை பெயரளவில் தான் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 13 ஆண்டுகளில் 20 ஆயிரம் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வாய்ப்பிருந்தும், அதிகாரிகளின் அறிவுரையால் தற்காலிகமாக இத்துறை நியமனங்களில் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. இதற்கு தீர்வுகாண முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து முதல்வர் ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்புகிறார். அதிகாரிகள் ஆலோசனைக்கு பின் இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பாக்ஸ்... --- * டி.இ.டி., விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் இந்தாண்டு டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்., 8 கடைசி நாள். தற்போதைய சூழ்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின், பணியில் உள்ள ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோரும் கூடுதலாக விண்ணப்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அவசகாம் அளிக்கும் வகையில் வாய்ப்பு அளிக்க வேண்டும். அதுபோல் பணியில் உள்ளவர் உட்பட அனைவருக்கும் ஒரே வகையான தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும். இருவேறு வகையில் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டால் மேலும் வழக்குகள் தொடர வாய்ப்பு ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Sitaraman Munisamy
செப் 09, 2025 15:47

கல்வி அமைச்சர் நண்பர் உதயநிதி. முதல்வர் ஆகியோர் ஜால்ரா அடிக்க வேண்டும். இதர பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் போனது


ManiMurugan Murugan
செப் 08, 2025 23:49

கல்வி என்றால் என்ன என்று தெரியாத காசு க்கு எதை வேண்டும் என்றாலும் விற்கும் கூட்டம் ஊழல லஞ்சம் கிடைத்தால் போதும் என்று நினைக்கும் கூட்டமான அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லது கிடைக்கிறதா என்பதில் கவனமில்லை அவர்கள் குடும்பத்திற்கு பணம் கிடைக்கிறது என்பதில் தான் குறி


krishna
செப் 08, 2025 17:13

DRAVIDA MODEL AATCHIYIL KALVI THURAI PATHI EEN KAVALAI.TASMAC TARGET MUKKIYAM EERA VENGAAYAM VENUGOPAL. RASIGAR MANDRA THALAIVAR KALVI MINISTER AAGA IRUKKUM PODHU KALVI ADHALA BAADHALATHAI NOKKI POGUDHU. TASMAC KANJA kALVI KOODANGALIL VITHU DRAVIDA MODEL KUMBAL KAASU PAARKKA VENDAAMA.


அயோக்கிய திருட்டு திராவிடன்
செப் 08, 2025 14:51

இதுதான் திருட்டு திராவிட மாடல்.


Santhakumar Srinivasalu
செப் 08, 2025 12:56

4 ஆண்டுகளாக இந்த மகேஷ் கல்வித்துறைக்கு என்ன செய்தார்? ஏழை நடுத்தர மக்களின் மக்களின் கல்வி கனவில் மண்ணை அள்ளி போட்டுவிட்டார்! இவருடைய செயலை ஸ்டாலினும் கவனிக்க வில்லை என்பது தான் முற்றிலுமாக உண்மை!


Ramesh Sargam
செப் 08, 2025 11:54

தமிழகத்தில் படித்தவர்கள் எல்லாம் கூட இதுபோன்ற ஆசிரியர் தொழிலுக்கு செல்ல விரும்புவதில்லை. எல்லோரும் அரசியல்வாதிகள் பின் சென்று குட்டிச்சுவர் ஆகிறார்கள். வேலை கிடைக்காத அதே சமயம் ஆசிரியர் தொழிலில் விருப்பம் உடையவர்களை மாணவர்கள் நலம் கருதி முறையாக தாமதிக்காமல் உடனே பணியில் அமர்த்தினால் இந்த பிரச்சினை தீர வாய்ப்புள்ளது.


c.mohanraj raj
செப் 08, 2025 11:41

அமைச்சர் இன்னொரு அமைச்சருக்கு ஊதுகோலாக உள்ளார் நாடு என்ன ஆகப் போகிறது என்று தெரியவில்லை


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 08, 2025 11:25

திராவிட மாடல் டெட் தேர்வு இந்த முறை முதல்வர் வெற்றி கரமாக தனது மூதலீடு ஈர்க்கும் வெளி நாட்டு பயணத்தை முடித்து சென்னை மாநகரம் திரும்பியதும் டெட் தேர்வுகள் நடத்தப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள். பின்பு கல்வித்துறை அனைவருக்கும் பதவி உயர்வு தந்து பள்ளிகள் வழக்கம் போல நடத்தப்படும்.


V RAMASWAMY
செப் 08, 2025 11:22

எல்லாவற்றிலும் முதலிடம். பெருமைப்படக்கூடிய விஷயம். மக்களே புரிந்துகொள்ளுங்கள்.


Kjp
செப் 08, 2025 10:37

அன்பில் மகேசால் என்ன செய்து விட முடியும். முதல்வர் வெள்ளை காக்கா பறக்குது என்றால் ஆமாம் வெள்ளை காக்காய் பறக்கிறது என்று சொல்வார். எப்படியோ மகனை தமிழ் படிக்க விடாமல் பிரெஞ்சு படிக்க வைத்து விட்டார். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் யாரும் மூன்றாவது மொழி கற்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்.


சமீபத்திய செய்தி