உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வரும் சட்டசபை தேர்தலுக்கு பின் கூட்டணி ஆட்சியே அமையும்

வரும் சட்டசபை தேர்தலுக்கு பின் கூட்டணி ஆட்சியே அமையும்

வரும் சட்டசபை தேர்தலுக்கு தமிழகத்தில் ஐந்து முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார். அவர் அளித்த பேட்டி: சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகர் விஜய். அவர் சினிமாவை விட்டு விட்டு அரசியலுக்கு வந்திருப்பது வரவேற்புக்குரியது. அரசியலில் ஏற்ற, இறக்கங்களை அவர் சந்திப்பார்; துரோகிகளையும் தொடர்ச்சியாக சந்திப்பார். அதையெல்லாம் தாண்டி, விஜய் அரசியலில் நீடிக்க வேண்டும்.

இயலாத காரியம்

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதாவைப் போல், நடிகர் விஜய் நீண்ட காலத்துக்கு அரசியல் பயணம் மேற்கொண்டால் நல்லது தான். அவர் நினைப்பது போல, தமிழகத்தின் அரசியல் சிஸ்டத்தை ஒரு தேர்தல் வாயிலாக மாற்றி விட முடியும் என்பது இயலாத காரியம். அதை நான் நம்பவில்லை. தமிழகத்தில் தற்போதைய நிலையில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., நாம் தமிழர், த.வெ.க., என ஐந்து முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஐந்து கட்சிகளும் வெவ்வேறு அரசியல் நிலைப்பாட்டை முன்னெடுத்து செல்கின்றன. நாங்கள் தான் சரியான அரசியலை முன்னெடுத்து செல்கிறோம் என தி.மு.க., சொல்கிறது. தி.மு.க., ஆட்சியில் இருந்து செய்யும் தவறுகளை, நாங்கள் ஆட்சிக்கு வந்து சரி செய்வோம் என்று அ.தி.மு.க.,வினர் சொல்கின்றனர்.தமிழகத்தில் புதுவிதமான அரசியலை கொண்டு வந்து மக்களை பாதுகாப்போம் என பா.ஜ., தரப்பில் சொல்கிறோம். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள்; தமிழக அரசியலை சுத்தமாக மாற்றிக் காட்டுகிறேன் என்று சீமான் சொல்கிறார். தமிழகத்தின் மொத்த அரசியல் சிஸ்டத்தையும் மாற்றிக் காட்டுகிறோம் என விஜய் கட்சி சொல்கிறது. ஆனால், தி.மு.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சியினரும் ஒன்று திரள வேண்டும் என, பா.ஜ., துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆசைப்படுகிறார்.

கட்டாயம் நிறைவேறும்

ஆனால், வரும் 2026ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், மக்கள் தெளிவாக ஓட்டளிக்க உள்ளனர். அதனால், தமிழகத்தில் தனித்த ஆட்சி என யாரும் கனவு காண வேண்டாம். எந்தக் கட்சி பிரதான கட்சியாக இருந்து ஆட்சியமைத்தாலும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும். அந்த அளவுக்கு தமிழக அரசியல் களம் முழுதும் மாறி உள்ளது. இந்த சூழலில், தேசிய அளவில் சிறப்பான ஆட்சியையும், பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் மெச்சும் ஆட்சியையும் கொடுத்து வரும் பா.ஜ., தமிழகத்திலும் 2026ல் தன் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது என் எதிர்பார்ப்பு; ஆசை. கட்டாயம் நிறைவேறும். தமிழக பா.ஜ.,வை பொறுத்தவரை, வரும் சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க.,வுடனோ, த.வெ.க.,வுடனோ கூட்டணி இல்லை. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

வரதராஜன்
டிச 20, 2024 23:16

உமக்கு பொழப்பே இல்லையா.போய் போய் ஒழுங்கா படிச்சிட்டு வா


Oviya Vijay
டிச 20, 2024 15:43

இது தான் வெளிநாட்டுக்கு போயி படிச்சுட்டு வந்த லட்சணமாவே?


ஆரூர் ரங்
டிச 20, 2024 21:13

இதற்கு முன்பு மஹாராஷ்டிரா வந்துள்ளீர்களா என நிருபர் கேட்டதற்கு I'm FINE ன்னு அழகா பதில் சொன்னாராம்.


RAMAKRISHNAN NATESAN
டிச 20, 2024 13:52

எல்லோரும் சேர்ந்து எதிர்க்க திமுக என்ன அவ்வளவு பெரிய கட்சியா ???? இப்படி நீங்க கேட்குறது நல்லா இருக்கு... நியாயம்தான் ..... நீங்க ராஜினாமா பண்ணிட்டு போங்க ...... வானதியம்மா பார்த்துக்குங்க .......


RAMAKRISHNAN NATESAN
டிச 20, 2024 13:37

திமுக-காங்கிரஸ் கூட்டணியைச் சொல்றீங்களோ ????


pmsamy
டிச 20, 2024 10:57

வெளியூர் படிக்கப் போனியே பாஸ் பண்ணியா


RAMAKRISHNAN NATESAN
டிச 20, 2024 13:51

Annamalai gets ed for three-month fellowship in UK... அதற்கும் முன்பு பொறியியல் பட்டதாரி மற்றும் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம்... அது சரி.. உங்க கருத்தை படிச்சா ஒருவரின் படிப்புக்காக அவருக்கு ஒட்டு போடுற ஆளு மாதிரி தெரியலையே ????


RAMAKRISHNAN NATESAN
டிச 20, 2024 14:08

இப்படிக் கேட்பதற்கு பதிலா நீங்க உருப்படியா வேற ஒண்ணு பண்ணுங்க .... ஹிம்சை மன்னரின் மருமகன் அந்த குஜராத் தொழிலதிபரை சந்தித்தாராம்.. அதற்க்கு என்னிடம் ஆதாரம் உள்ளது ..... இடம், நேரம் அனைத்தையும் நிரூபிப்பேன் என்கிறார் இவர் ...... அந்த ஆதாரத்தை வெளியிடச் சொல்லுங்களேன் .....


vijai
டிச 20, 2024 15:28

நீ பாஸ் பண்ண வை


பிரேம்ஜி
டிச 20, 2024 08:32

2026 தேர்தலில் பா ம க தலைமையில் கூட்டணி முதல்வராக அன்புமணி ராமதாஸ் தான் வருவார்.


அப்பாவி
டிச 20, 2024 07:45

எப்படியாவது யாரிடயாவது கூட்டு சேர்ந்து ஆட்சியில் பங்கு வாங்கிடணும். அப்புறம் காஷ்மீர், மகாராஷ்டிரா வுல கவுத்த மாதிரி கவுத்துடலாம்னு கணக்கு போடறாங்க.


சுந்தர்
டிச 20, 2024 06:31

அப்படின்னா நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி உண்டா?


கிஜன்
டிச 20, 2024 06:27

70 சதவீதம் ஓட்டுகள் பதிவாகிறது என்றால் .... 26 முதல் 30 சதவீதம் திமுக .... 25 முதல் 28 சதவீதம் அதிமுகள் மீதி 20 சதவீதத்திற்கு 4 பேர் போட்டி போடுகிறார்கள் .... ஆளுக்கு 3 முதல் 5 சதவீதம் கிடைக்கும் .... 2026ல் மீண்டும் திமுக .... வாழ்க சாணக்கியம் ....


முக்கிய வீடியோ