உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக்கோரி நடிகர் பிரபு மனு

சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக்கோரி நடிகர் பிரபு மனு

சென்னை: நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை, 'ஜப்தி' செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மகனும், நடிகருமான பிரபு மனு தாக்கல் செய்துள்ளார்.மறைந்த நடிகர் சிவாஜியின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள 'ஈசன் சினிமா' தயாரிப்பு நிறுவனம், 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரித்தது.விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தை தயாரிக்க, 'தனபாக்கியம் என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்திடம், துஷ்யந்த் 3.75 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.இக்கடனை ஆண்டுக்கு, 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.ஆனால், கடன் தொகையை திருப்பித் தராததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் மத்தியஸ்தரை நியமித்தது.அவர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாததால், 'சென்னை தி.நகரில் உள்ள நடிகர் துஷ்யந்தின் தாத்தாவான சிவாஜி வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு தனபாக்கியம் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 'போதுமான அவகாசம் வழங்கியும், பதில் மனு தாக்கல் செய்யாததால், நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதை நீக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் பிரபு மனு தாக்கல் செய்துள்ளார்.அதன் விபரம்: நடிகர் சிவாஜி கணேசன் உயிருடன் இருந்த போதே, அன்னை இல்லம் வீட்டை எனக்கு உயில் எழுதி வைத்து விட்டார். என் அண்ணன் ராம்குமார் சார்ந்த நிதி பிரச்னையில், என் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.என் பெயரில், 'அன்னை இல்லம்' பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சகோதரர் ராம்குமாருக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே, வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி அப்துல் குத்துாஸ் முன், அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Venkataraman
மார் 28, 2025 23:54

கடன் கொடுத்தமர் எதை நம்பி அல்லது யாரை நம்பி இவ்வளவு பெரிய தொகையை கடனாக கொடுத்தார்? ராம்குமாரின் மகன் தன்னுடைய தாத்தாவின் வீட்டை அடைமானம் வைத்தார் என்றால் அந்த வீட்டில் உண்மையிலேயே அவருக்கு பங்கு இருக்கிறதா என்று விசாரித்து தெரிந்து கொண்டார்களா? இல்லை என்றால் அது கடன் கொடுத்தவர் செய்த தவறு. ஆனால் கடன் வாங்கியவர் அதை திருப்பி தர வில்லை என்றால் மோசடி செய்ததாக கருதி சிறை செல்ல வேண்டியிருக்கும். அத்துடன் அவர் பெயரில் இருக்கும் சொத்துக்ஆளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். இத்தகைய குற்றச் செயல் களால் சிவாஜி கணேசன் அவர்களின் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது.


vijay,covai
மார் 28, 2025 21:24

nadigar thilagam thannoda pugazha mattume paathuttu pasangale kottai vittutar


Seekayyes
மார் 28, 2025 14:00

இது கடஞ்செடுத்த அயோக்கியதனம். கடனளித்தவர் சும்மா கைமாத்தாவா 3.75 கோடி கொடுத்தார்.


Ramesh Sargam
மார் 28, 2025 12:25

சினிமாவில் வாரிசு வாரிசாக கோடிக்கணக்கில் சம்பாதித்தும் பணப்பிரச்சினையா? சம்பாதித்த பணத்தை என்னதான் செய்தார்களோ, எப்படித்தான் செலவழித்தார்களோ? ஒன்றும் புரியவில்லை. வசதியாக இருக்கும்போது நன்றாக, அனாவசியமாக செலவழிப்பது. பிறகு எல்லாம் பறிகொடுத்து, இப்படி சந்தி சிரிக்கும்படி நடந்துகொள்வது.


Balasubramanian
மார் 28, 2025 11:30

கடன் கொடுத்தவருக்கு தெரியாதா எதன் பேரில் கடன் தருகிறோம் என்று? நல்ல நகைச்சுவை


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 28, 2025 10:39

வாங்கிய கடனை திருப்பித்தரமறுப்பதின் காரணத்தை ஒருவரும் சொல்ல மாட்டேன் என்கிறார்களே? அதனுள் புதைந்து கிடக்கும் மர்மம் என்னவோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை