உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அனுமதியின்றி கட்டடம் கட்டினால் கூடுதல் கட்டணம்: நகராட்சி, மாநகராட்சிகள் அதிரடி

அனுமதியின்றி கட்டடம் கட்டினால் கூடுதல் கட்டணம்: நகராட்சி, மாநகராட்சிகள் அதிரடி

சென்னை: முறையாக அனுமதி பெறாமல், அதே நேரம் விதிகளுக்கு உட்பட்டு கட்டடங்கள் கட்டினால், கூடுதல் கட்டணம் வசூலிக்க நகராட்சி, மாநகராட்சிகளுக்கு அரசு உத்தர விட்டுள்ளது.தமிழகத்தில் நகர், ஊரமைப்பு சட்டப்படி, பொது கட்டட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளுக்கு உட்பட்டு தான், நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., ஆகியவை, புதிய கட்டடங்களுக்கான திட்ட அனுமதி வழங்கும்.உரிமம்இதில் குறிப்பிட்ட அளவுக்கான கட்டடங்கள் கட்ட உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்கும். டி.டி.சி.பி., - சி.எம்.டி.ஏ., அமைப்புகள் திட்ட அனுமதி வழங்கும் இடங்களிலும் கட்டுமான பணிகளை மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளே உரிமம் வழங்கும்.இந்நிலையில், உரிய முறையில் வரைபடம் தயாரித்து திட்ட அனுமதி பெறாமல் யாரும் கட்டடங்கள் கட்டக்கூடாது. அப்படி யாராவது கட்டடங்கள் கட்டினால், அந்த கட்டடங்கள் சீல் வைக்கப்படும், தேவை அடிப்படையில் இடிக்கவும், உள்ளாட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இதில் திட்ட அனுமதி பெறாத கட்டடங்கள் என்ற ஒரே அளவுகோலை அப்படியே கடைப்பிடிக்காமல், அந்த கட்டடம் விதிகளுக்கு உட்பட்டு உள்ளதா என்றும் அதிகாரிகள் பார்க்க வேண்டும். திட்ட அனுமதி பெறவில்லை என்றாலும், விதிகளுக்கு உட்பட்டு அந்த கட்டடம் இருந்தால், அதை சீல் வைக்காமல் வரன்முறைப்படுத்த வழிவகை உள்ளது.அனுமதிஇது தொடர்பாக, நகராட்சி நிர்வாகத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், அனுமதியின்றி அதே நேரம் விதிகளுக்கு உட்பட்டு கட்டப்படும் கட்டடங்களுக்கான கூடுதல் கட்டணங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு கட்டடங்களை பொறுத்தவரை கட்டுமான பணிகள் துவங்கிய நிலையில் 25 சதவீதம், தரைதள நிலையில் 50 சதவீதம், தரைதள மேற்கூரை நிலையில் 100 சதவீதம், ஒவ்வொரு கூடுதல் தளத்துக்கும் 50 சதவீதம் என்ற விகிதத்தில் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கலாம்.குடியிருப்பு அல்லாத இதர பயன்பாட்டுக்கான கட்டடங்களை பொறுத்தவரை, பணிகள் துவங்கிய நிலையில் 50 சதவீதம், தரைமட்ட நிலையில், 75 சதவீதம், தரைதள மேற்கூரை நிலையில் 150 சதவீதம், ஒவ்வொரு கூடுதல் தளத்துக்கும் 50 சதவீதம் என்ற விகிதத்தில் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கலாம்.நகராட்சி, மாநகராட்சிகளில் புதிய கட்டட அனுமதிக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் அடிப்படையில் இந்த கூடுதல் கட்டணங்களை நிர்ணயித்து வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இதற்கான உரிய அறிவிப்புகளை மாநகராட்சிகள், நகராட்சிகள் வெளியிடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அப்புசாமி
ஜன 15, 2024 21:25

கட்டிடம் கட்டும் போது இடிஞ்சு விழுந்தால் 100 ரூவா ஃபைன் போட்டு கடுமையா தண்டிச்சிடுங்க.


GMM
ஜன 15, 2024 20:31

DTCP - (country planning, தேசம் முழுவதும் ஒரே மாதிரி நகர்ப்புற திட்டம்), ஆனால், மாநில அளவில் திட்ட அனுமதி வழங்கும் அமைப்பு இஷ்டம் போல் செயல்படுகிறது. நில வகை விவரம் தாசில்தார். குளம், குட்டை… பொது பணி. Approach road நெடுசாலை. இவர்களை தொடர்பு கொண்டு அனுமதி வழங்க வேண்டும். நடைமுறை அப்படி இல்லை.? ( கட்சி ) நிதி தேட முடியாது. கட்டுமான பணிக்கு உரிமம் உள்ளாட்சி அமைப்புகள். சுகாதாரம், பள்ளி, தண்ணீர், சாக்கடை, மின் இணைப்பு மற்றும் சுடுகாடு தேவை அறிந்து உரிமம் வழங்க படுமா? விதிகளுக்கு உட்பட்டு கட்டடம் கட்ட படுவதை கண்காணிக்க யாருக்கு (தெரியும்) அதிகாரம்? Municipal Engineer, council member.. கூடுதல் கட்டணம் 100 சதவீதம் கூட கட்டி விடுவர். ஆனால் அவ்வளவு எளிதில் கட்ட முடியாது? எதையும் முறைப்படுத்தாது. அனுமதி முடிவு காந்தி currency கையில். பழைய சட்டம் தெளிவாக தான் இருக்கும். அனைத்தும் online மூலம் கொண்டு வரலாம். வழக்கு தான் தமிழகத்தில் வாழ்க்கை. திராவிட பொங்கல் பரிசு.


V GOPALAN
ஜன 15, 2024 16:19

1 Trillion economy, only source to this Govt. Is Property related taxes, cutting and commission.This Govt should go out immediately.Otherwise middle class family cannot live in Tamilnadu.


duruvasar
ஜன 15, 2024 13:31

கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என்கட்சி பாடலை நினைவு கொள்ளுங்கள்


ராஜா
ஜன 15, 2024 12:22

விதி மீறி கட்டிய கட்டிடங்களுக்கு அனுமதி கொடுத்தால் அதை வழங்கிய அதிகாரிகளுக்கு என்ன தண்டனை?


rama adhavan
ஜன 15, 2024 11:45

இது போன்ற ''பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் ' பாலிசிகளை இந்த x மாடல் ஆரசால் தான் எடுக்க முடியும்.


பாமரன்
ஜன 15, 2024 10:50

அப்பிடின்னா நமக்கு புடிக்காதவங்களை அவங்களுக்கு வலிக்காமல் மற்றும் தடயம் விட்டு செல்லாமல் போட்டு தள்ளுனா சிறிய அளவில் ஃபைன் மட்டுமே கட்டினா போதும்னும் ஒரு ஜி.ஓ போட்ரலாம்தானே....????????


Kalyanaraman
ஜன 15, 2024 10:48

விதிகளுக்கு உட்பட்டு கட்டடம் கட்ட அனுமதி கோரிய விண்ணப்பங்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி கொடுக்காமல் இழுத்தடிக்கும் அதிகாரிகளுக்கு என்ன தண்டனை ?? குற்றம் யார் செய்தாலும் அபராதம் தேவைதானே.


அப்புசாமி
ஜன 15, 2024 07:26

திருட்டு திராவிடனுங்க படு கில்லாடிங்க. ஊழல் பண்றதுக்கு தோதாக விதிமுறைகள் வெச்சுருவாங்க.


குமரி குருவி
ஜன 15, 2024 06:44

அதுதான் கட்டிடம் கட்ட அனுமதிகேட்டு வந்தால் இழுத்தடிப்பு பண்ணுறீங்களா...


மேலும் செய்திகள்









புதிய வீடியோ