உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  அ.தி.மு.க.,வினரிடம் ஆர்வம் இல்லையா? விருப்ப மனு அவகாசம் 31 வரை நீட்டிப்பு

 அ.தி.மு.க.,வினரிடம் ஆர்வம் இல்லையா? விருப்ப மனு அவகாசம் 31 வரை நீட்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனு பெறுவதற்கான காலக்கெடு, வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, அக்கட்சி பொதுச் செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார். அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்ப மனு வினியோகம், கடந்த 15 முதல் 23ம் தேதி வரை நடந்தது; 9 ஆயிரம் பேர், தலா 15,000 ரூபாய் செலுத்தி, விருப்ப மனுக்கள் பெற்றதாக தெரிகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cpopjaf7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இந்நிலையில் பழனிசாமி, நேற்று வெளியிட்ட அறிக்கை:

அ.தி.மு.க., சார்பில் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு, நிர்வாகிகளும், தொண்டர்களும் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்று கால நீட்டிப்பு செய்யப்படுகிறது; நாளை முதல் வரும் 31ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதா இருந்த வரை, அ.தி.மு.க., சார்பில் தேர்தலில் போட்டியிட, கட்சியினர் போட்டி போட்டு விருப்ப மனு அளிப்பர். கடந்த 2011, 2016 சட்டசபை தேர்தல்களில், தொடர்ந்து அ.தி.மு.க., வென்று ஆட்சி அமைத்தது. அப்போது, 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விருப்ப மனு அளித்தனர். அதிலும், 234 தொகுதிகளிலும், ஜெயலலிதா போட்டியிடுவற்காக, ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனு அளிப்பது வழக்கமாக இருந்தது. இப்போது, எடப்பாடி தொகுதியில் பழனிசாமி போட்டியிட, மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட சில நுாறு பேர் மட்டுமே மனு அளித்துள்ளதாக தெரிகிறது. கடந்த 23ம் தேதி, காலக்கெடு முடிந்த நிலையில், 9 ஆயிரம் பேர் வரைதான் விருப்ப மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, விருப்ப மனு பெறுவதற்கான அவகாசம், வரும் 31ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

pmsamy
டிச 27, 2025 08:06

அதிமுக வா ?அது கிலோ எத்தனை ரூபாய்?


Oviya Vijay
டிச 27, 2025 07:08

ஏற்கனவே 5 வருஷம் எதிர்க்கட்சி வரிசையில சாம்பாத்தியம் இல்லாமயே போயாச்சு... அடுத்த அஞ்சு வருஷமும் ஜெயிக்கப் போறதில்ல அப்படின்னு ஆயாச்சு... பேசாம கட்சி மாறி திமுக பக்கம் கூட போயிட்டாலாவது ஏதாவது பதவி கிடைக்க வாய்ப்பிருக்கு... அப்படியிருக்கிற சூழ்நிலையில எப்படிப்பூ எடப்பாடிக்கு ஜால்ரா அடிச்சுகினு, கொள்ளை அடிச்சு வெச்சிருக்குற கொஞ்ச நஞ்ச பணத்தையும் விருப்ப மனுங்கிற பேருல தொலைக்க முடியும்? இருக்குறதையாவது காப்பாத்திக்க வேண்டாமா...


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை