உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அனைத்து பள்ளிகளிலும் மூன்றாம் வகுப்பிலேயே ஏ.ஐ., பாடம் அறிமுகம்

அனைத்து பள்ளிகளிலும் மூன்றாம் வகுப்பிலேயே ஏ.ஐ., பாடம் அறிமுகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மத்திய கல்வி அமைச்சகம், வரும் 2026 - 27 கல்வியாண்டு முதல், நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் மூன்றாம் வகுப்பு முதல் ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றி பாடத்தை அறிமுகப்படுத்த உள்ளது. கணினி மற்றும் 'மொபைல் போன்' சாதனங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே, எதிர்கால டிஜிட்டல் பொருளாதாரத்திற்குத் தேவையான திறன்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற வேண்டும் என, மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது பற்றி விவாதிக்க, டில்லியில் அக்டோபர் 29ல் மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இதில், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய கல்வி துறை செயலர் சஞ்சய் குமார் கூறியதாவது: செயற்கை நுண்ணறிவு கல்வி, அனைவருக்கும் அடிப்படை திறனாக கருத வேண்டும். ஒவ்வொரு மாணவரின் தனித்திறன் வெளிப் படுவதற்கும் பாடத்திட்டம் உதவியாக இருக்க வேண்டும். ஆசிரியருக்கு வழங்கப்படும் பயிற்சி மற்றும் கற்றல் - கற்பித்தல் வளங்கள், இந்த திட்டத்தின் முதுகெலும்பாக அமையும். இதற்காக, 1 கோடி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அது மிகப்பெரிய சவால். இவ்வாறு அவர் கூறினார். சென்னை ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த பேராசிரியர் கார்த்திக் ராமன் தலைமையில் சி.பி.எஸ்.இ., நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இக்குழு, புதிய ஏ.ஐ., மற்றும் 'கம்ப்யூடேஷனல் திங்கிங்' எனப்படும் கணினி சிந்தனை குறித்த பாடத்திட்டத்தை உருவாக்கும் பொறுப்பில் உள்ளது. த ற்போது, நாடு முழுதும் உள்ள, 18,000-க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஏ.ஐ., பாடம் கற்பிக்கப்படுகிறது. மேலும், 2019 முதல் ஐ.பி.எம்., மற்றும் தேசிய மின்னணு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் 10,000 ஆசிரியர்களுக்கு ஏ.ஐ., பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. - நமது சிறப்பு நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சுந்தர்
நவ 02, 2025 15:02

அன்று கம்ப்யூட்டர் வந்தால் வேலை பறிபோகும் என்றனர். இன்று ஏஐ வந்ததால் அதே நிலைதான் என்கின்றனர். ஒரு நான்கைந்து வருடங்களுக்கு அப்படி இருக்கலாம். பின்னர் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். வேலைவாய்ப்பு அனைவருக்கும் கிட்டும்படி ஏஐ தொழில்நுட்பங்கள் உருவாகலாம் உருவாக்கலாம்.


Ramesh Sargam
நவ 02, 2025 10:11

ஏஐ தொழில்நுட்பம் காரணமாக இன்டெல், மைக்ரோசாப்ட், டிசிஎஸ் உள்பட 218 நிறுவனங்களில் 1,12,000 தொழில் நுட்ப ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளதாக செய்தி. நாளை ஏஐ யை விட வேறு ஒன்று கண்டறியப்படும், அறிமுகப்படுத்தப்படும். பிறகு ஏஐ படித்தவர்களுக்கே வேலை போகும். வளர்ச்சி முக்கியம். ஆனால் அது மனிதகுலத்தை அழிப்பதாக இருக்கக்கூடாது.


Ramesh Sargam
நவ 02, 2025 09:01

ஏ.ஐ., பாடம் கற்பதால், மாணவர்களின் இயற்கையான சிந்திக்கும் திறன் பாதிக்கப்படாதா? அதெல்லாம் எப்பவோ போச்சு. என்று கால்குலேட்டர் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டதோ, அன்றே மாணவர்களின் சுயமாக சிந்திக்கும் திறன் அழியத்தொடங்கிவிட்டது. இரண்டு பிளஸ் இரண்டு எவ்வளவு என்றால், 60, 70 க்கு முந்தைய மாணவர்கள் அவர்கள் கற்ற வாய்ப்பாட்டின் மூலம் விடை கூறுவார்கள். பிறகு பிறந்த மாணவர்கள் கால்குலேட்டர் உதவியுடன் கூற ஆரம்பித்தார்கள். இப்பொழுது மொபைல் போன், கம்ப்யூட்டர், லேப்டாப் என்று உபயோகித்து விடை கூறுகிறார்கள். இது என்னுடைய கணிப்பு. உங்கள் கணிப்பு என்னவோ அதை பதிவிடலாம் - என்னை திட்டாமல்


mohana sundaram
நவ 02, 2025 03:48

எங்களுக்கு ஏ ஐ என்ற ஒரு புண்ணாக்கும் வேண்டாம். எங்கள் திராவிட மாடல் ஆட்சியில் இ வி ராமசாமி நாயக்கர் கொள்கைகளே போதும்.


Vasan
நவ 02, 2025 01:59

1-ம் வகுப்பு முதலாகவே ஆரம்பிக்கலாமே. ஏன் 3-ம் வகுப்பு வரை காத்திருக்க வேண்டும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை